Header Ads



தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் தொழில்சார் பயிற்சி வழிகாட்டல் கருத்தரங்கு


(யு.கே.காலித்தீன்)

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் கலை கலாச்சாரபீடத்தின் விஷேட இறுதி வருட மாணவர்களுக்கான தொழில்சார் பயிற்சிகளுக்கு எவ்வாறு முகம் கொடுப்பது தொடர்பான முன்னேற்பாடு கருத்தரங்கு கலை கலாச்சார பீடத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

மேற்படி நிகழ்வானது கலை கலாச்சார பீடத்தின் பீடாதிபதி எம். அப்துல் ஜப்பார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கலை கலாச்சாரபீட சபை உறுப்பினரும் கனடா உலக பல்கலைக்கழக சேவையின் (WUSC) துறையியல் பணிப்பாளருமான எம்.எம். அமீர், சம்மாந்துறை கோட்டத்தின் பிரதி கல்வி அதிகாரி எம்.எஸ். அப்துல் ஜலீல், புவியியல் துறைத் தலைவர் எம்.எல். பௌசுல் அமீர், சமூக விஞ்ஞனாவியல் துறையின் சிரேஸ்ட விரிவுரையாளர்களான முனைவர் கே. கணேஸ்ராஜா, முனைவர் எஸ் அனுஸ்சியா, விரிவுரையாளர் எம்.எம். றிஸ்வான், உதவி பதிவாளர் நிஷாந்தினி மற்றும் கலை கலாச்சார பீடத்தின் விஷேட இறுதி வருட மாணவர்கள் கலந்து கொண்டதோடு தொழில்சார் பயிற்சிகளுக்கு தங்களை எவ்வாறு வளப்படுத்திக்கொள்வது தொடர்பான அறிவினை பெற்றுக்கொண்டதோடு, இவ்வாறான கருத்தரங்குகள் தற்கால பட்டதாரிகளின் தொழில்போட்டியினை நிவர்த்தி செய்வதற்கான ஒரு தூண்டுகோலாகவும் மாணவர்கள் கூடிய பயனை அடைவதற்கும் வழிவகுக்கின்றது என பீடாதிபதி எம். அப்துல் ஜப்பார் மாணவர்களுக்கு அறிவுறை கூறினார்.

இக்கருத்தரங்கானது கலை கலாச்சாரபீடத்தில் முதன் முறையாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.