அமெரிக்காவில் ஈரானுக்கு சொந்தமான அடுக்கு மாடி கட்டடம்
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் இருக்கும் அடுக்கு மாடி கட்டடம் ஈரானுக்கு சொந்தம் என குற்றம்சாட்டி அதனை பறிமுதல் செய்ய அமெரிக்க அரசு திட்டமிட்டுள்ளது.
36 மாடிகள் கொண்ட இந்த கட்டடம் நியூயோர்க் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. இது தீவிரவாதம் தொடர்பில் பறிமுதல் செய்யப்படும் மிகப்பெரிய சொத்தாக அமையவுள்ளது.
அமெரிக்க அரசுக்கு சாதகமாக பெடரர் நீதிபதி ஒருவரும் இந்த வாரம் தீர்ப்பு அளித்திருந்தார். அதில் மேற்படி கட்டடத்தின் உரிமையாளர் ஈரானுக்கு எதிரான தடையை மீறி செயற்பட்டிருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.
இந்த கட்டடத்தின் உரி மையாளர்களான அலவி ஸ்தாபனம் மற்றும் அஸ்ஸா கூட்டுத்தாபனம் கட்டடத் தின் மூலம் கிடைக்கப்பெறும் வாடகை மற்றும் ஏனைய வருவாயை ஈரான் அரசுக்கு சொந்தமான வங்கிக்கு பரிமாற்றம் செய்வதாக அரச வழக்கறிஞர் ப்ரீத் பராரா குறிப்பிட்டுள்ளார்.
சிலபேர், பலபொழுதுகளில் தன் இல்லாமையை மறைக்க இப்படிப்பட்ட பலநாடகங்களை ஆடத்தான் வேண்டியிருக்கிறது , தனிப்பட்டவர்கள் செய்துகொண்டிருந்ததை அரசுகளும் செய்வதுதான் ,துர்பாக்கியம்
ReplyDelete