Header Ads



இலங்கையில் நல்லிணக்கம் ஏற்பட முழுமையான அணுகுமுறைகள் தேவை - பான் கீ மூன்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கும், ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனுக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.  ஐ.நா தலைமையகத்தில், நியுயோர்க் நேரப்படி நேற்று மாலை 6 மணியளவில், இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனுடன், ஐ.நாவின் அரசியல் விவகார தலைவர் ஜெப்ரி பெல்ட்மன், மனிதஉரிமைகள் அதிகாரி ஐவன் சிமோனோவிக் ஆகியோர் சந்திப்பில் பங்கேற்றனர்.

இந்தச் சந்திப்புத் தொடர்பாக, ஐ.நா தலைமையகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சிறிலங்காவில் போருக்குப் பிந்திய நிலைமைகள் குறித்து இருவரும் விவாதித்ததாகவும், ஐ.நாவுடனான சிறிலங்காவின் ஒத்துழைப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தவும், மாகாணசபைத் தேர்தலை நடத்தவும் சிறிலங்கா அரசாங்கம் எடுத்த முயற்சிகள் குறித்தும் ஐ.நா பொதுச்செயலர் குறிப்பிட்டுள்ளார்.

நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது தொடர்பான சவால்களை எதிர்கொள்வதற்கு இன்னும் முழுமையான அணுகுமுறைகள் தேவை என்றும் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் சிறிலங்கா அதிபரிடம் வலியுறுத்தியுள்ளதாகவும், அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.