கல்முனை முஸ்லிம் வலய கோட்டக்கல்வி பணிப்பாளராக ஜஹூபர் பதவி உயர்வு
(யு.எம்.இஸ்ஹாக்)
கல்முனை வலயக்கல்வி அலுவலகத்துக்குட்பட்ட நற்பிட்டிமுனை லாபீர் வித்தியாலய அதிபர் எஸ்.எம்.ஏ.ஜஹூபர் கல்முனை முஸ்லிம் வலய கோட்டக்கல்வி பணிப்பாளராக பதவி உயர்வு பெற்றுச் சென்றுள்ளார்.
நற்பிட்டிமுனை சின்னத்தம்பி சீனிமுகம்மது ,முகம்மதுத்தம்பி முத்தும்மா ஆகியோரின் புதல்வாரன இவர் நற்பிட்டிமுனை அல்-அக்ஸா மகா வித்தியாலயம்,கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலைகளின் பழைய மாணவராவார். இவர் 1979.12.06 இல் ஆசிரியர் நியமனம் பெற்று பலாலி ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் ஆசிரியர் பயிற்சி பெற்றார். சதுஃவீரத் திடல் அல்-ஹிதாயா வித்தியாலயம் மற்றும் நற்பிட்டிமுனை அல்-அக்ஸா மாகா வித்தியாலயங்களில் பல வருடங்கள் ஆசிரியராக பணியாற்றிய இவர் 1991 ஆம் ஆண்டில் கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையில் உதவி அதிபராக நியமிக்கப்பட்டு கடமை புரிந்தார்.
சது/சாளம்பைக்கேணி அஸ்ஸிராஜ் மகா வித்தியாலயம், கமுஃஇஸ்லாமாபாத் முஸ்லிம் வித்தியாலயம், நற்பிட்டிமுனை அல்-அக்ஸா மாகா வித்தியாலயம் ,தி/குச்சவெளி அந்-நூறியா முஸ்லிம் மகா வித்தியாலயம், நற்பிட்டிமுனை லாபீர் வித்தியாலயம் ஆகிய கல்லூரிகளில் நீண்ட காலங்களாக அதிபராக பணி புரிந்த இவருக்கு கிழக்கு மாகாண கல்வி கல்வி அமைச்சின் செயலாளர் என்.ஏ.ஏ.புஸ்பகுமாரவினால் 01.09.2013 தொடக்கம் கல்முனை முஸ்லிம் கோட்ட கல்விப் பணிப்பாளராக நியமனம் வழங்கியுள்ளது.
வெற்றிடமாக இருந்துவந்த கல்முனை முஸ்லிம் கோட்டக் கல்விப் பணிப்பாளர் பதவிக்கு பிரதிக் கல்விப் பணிப்பாளர் பீ.எம்.எம்.பதுர்தீன் பதில் கடமையாற்றியமை குறிப்பிடத் தக்கது.
Post a Comment