Header Ads



சிரியாவில் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பாக எனது இதயம் மிகவும் காயமடைந்துள்ளது

சிரியா மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா தயாராகி வரும் வேளையில் அனைத்து போர்களையும் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என போப் பிரான்சிஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவுரை கூறியுள்ள போப், 'மீண்டும் ஒரு போர் என்பது எப்போதும் நடைபெற கூடாது. போர் என்பது வேண்டவே வேண்டாம்.

சிரியாவில் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பாக எனது இதயம் மிகவும் காயமடைந்துள்ளது. அதன் தொடர்ச்சியாக உருவாகிவரும் நிலைமைகள் அதை விட வேதனை அளிப்பதாக உள்ளது.

வன்முறையின் மூலம் அமைதியை ஏற்படுத்த முடியாது. போரினால் போரும், வன்முறையினால் எதிர் வன்முறையும் ஏற்படுவதை தடுக்கவும் முடியாது.

சிரியாவில் அமைதி ஏற்பட தேவையான திட்டங்களின் மூலம் ஒட்டுமொத்த சிரியா மக்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கத்தக்க தீர்வினை பேச்சு வார்த்தையின் மூலம் சர்வதேச சமுதாயம் உடனடியாக உறுதிப்படுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்' என்று தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.