Header Ads



அடுத்த பிரதமர் மோடி..? அழிவை நோக்கி இந்திய துணைக் கண்டம்

(லதீப் பாரூக்)

இந்தியாவில் லோக் சபா தேர்தல்கள் விரைவில் இடம்பெற இருக்கின்றன. பாரதீய ஜனதா கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக நிற்கும் அளவுக்கு குஜ்ராத் முதலமைச்சர் நரேந்திர மோடி வளர்ந்து வந்திருக்கிறார். 
    
ஊழல் மலிந்த இந்திய அரசியல் அரங்கில் மோடியின் இந்த ஏற்றம் முன்னெப்போதும் இல்லாதது. ஏற்றுக் கொள்ளப்பட்ட விழுமியங்கள், கண்ணியம், பெறுமானங்கள் அனைத்தையும் எள்ளி நகையாடக் கூடியது. பாரதத்தின் சரித்திரப் பெருமையை இல்லாமலாக்கி விடக் கூடிய, நாசகார இந்துத்துவப் பாசிச சக்திகளிடம் இந்தியா எவ்விதம் விழுந்து கொண்டிருக்கிறது என்பதற்கு இது நல்லதொரு எடுத்துக் காட்டு.     

இதற்தான காரணம் எதுவுமே இரகசியமானதல்ல. RSS செயற்பாட்டாளராக இருந்து, குஜ்ராத் மாநில முதலமைச்சராக மாறிய மோடி, தீவிர முஸ்லிம் விரோத மனநிலை கொண்டவர். பெப்ரவரி 2002 இல், குஜ்ராத் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற இனக் கலவரங்களில், முஸ்லிம்களை இனவொழிப்பு செய்வதற்கு, முதலமைச்சர் என்ற நிலையில் இருந்து கொண்டு, சகல அரச வளங்களையும் மோடி பயன்படுத்தினார்.   
பிரதமர் பதவிக்கான போட்டிக்கு மோடியின் பெயர் அறிவிக்கப்பட்ட அதே தினத்தில், அவரது பீ.ஜே.பீ சகாக்கள் உத்தர் பிரதேஷ் முஸப்பர் நகரில் பெருமளவிலான முஸ்லிம்களைக் கொலை செய்வதில் ஈடுபட்டிருந்ததோடு, இதன் காரணமாக பத்தாயிரத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் இடம்பெயர்ந்திருக்கிறார்கள்.        

2002 பெப்ரவரியில் ஹிந்துத்துவக் காடையர்கள், தமது முஸ்லிம் விரோதத் தாக்குதல்களைக் கட்டவிழ்த்து விட்டார்கள். முஸ்லிம் பிரதேசங்கள் பற்றி எறிந்தன. சில பகுதிகள் மின்சாரத் தாக்குதலுக்கு இலக்காயின. ஆயிரக் கணக்கான முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். முஸ்லிம் யுவதிகள், பெண்கள் எத்தனையோ பேர் மிகக் கொடூரமான முறையில் மான பங்கப்படுத்தப்பட்டார்கள். ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், வயோதிபர்கள் என்ற வித்தியாசமின்றி எறிக்கப்பட்ட உடல்களும், தமது உறவுக்காரர்கள் முன்னிலையிலேயே திருமணமாகாத இளம் யுவதிகள் கற்பழிக்கப்பக்கப்பட்டமையும் மோடியின் பாஸிச மனோபாவத்தைப் படம் பிடித்துக் காட்டுவதற்குப் போதுமான ஆதாரங்கள்.  

மோடியைப் போன்ற ஒருவரை எந்த நாகரீகம் அடைந்த சமூகமும் சகித்துக் கொள்ளாது. வேறு எங்கேனுமாக இருந்திருந்தால், சமூகத் தளத்தில் இருந்து ஓரங்கட்டப்பட்டு, அவர் மரண தண்டனைக்குக் கூட இலக்காகி இருக்கலாம். ஆனால், இந்தியாவில் இது நடக்கவில்லை. எவ்வாறாயினும், இதே மோடிதான் குஜ்ராத்தில் இரண்டு தடவை முதலமைச்சராகத் தெரிவு செய்யப்பட்டார். மோடியின் சகல விதமான முஸ்லிம் விரோத மனோபாவத்தையும் மறந்த நிலையில், மிகச் சிறந்த செயல்திறனுக்கான (Excellent Performance) விருது வேறு வழங்கி, மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கம் மோடியை கௌரவித்தது.     

2002 இல் தனது மாநிலத்தில் இடம்பெற்ற இனக் கலவரங்கள் குறித்துப் பேசும் போது, மோடியின் முகத்தில் எதுவித குற்ற உணர்வையும் தான் காணவில்லை எனக் செப்டம்பர் 23, 2013 அன்று  மகாத்மா காந்தியின் பேத்தி, தாரா காந்தி பட்டாசார்ஜீ குறிப்பிட்டார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அரசியலில் இருப்பவர் என்ற வகையிலும், மனிதர் என்ற வகையிலும், குஜ்ராத்தைச் சேர்ந்தவர் என்ற வகையிலும், கலவரத்தைப் பற்றி மற்றும் வன்முறைகளைப் பற்றி எதுவித வலியும் இல்லாமல் எவ்விதம் மோடியால் பேச முடிகிறது என நான் ஆச்சர்யம் அடைகின்றேன்” என்றார். கலவரத்தைத் தொடர்ந்து குஜ்ராத்தில் அமைக்கப்பட்டிருந்த அகதி முகாம்களின் நிலைமை குறித்து அவர் தொடர்ந்தும் பேசிய போது, “(அவற்றைப் பார்க்கின்ற போது) மிகவும் வருத்தம் தருவதாக இருந்தது. அடுத்த ஆறு மாதங்களுக்கு என்னால் தூங்கவே முடியவில்லை” என்றார் தாரா காந்தி.      
  
மோடிக்கெதிராக மிக உறுதியாகக் கதைக்கும் நோபல் பரிசை வென்றவரான அமார்த்யா சிங், மோடி இந்தியாவின் பிரதமராவதைத் தான் விரும்பவில்லை எனத் தெரிவித்தார். “நான் அதனை அங்கீகரிக்க மாட்டேன். அவரது கடந்த காலப் பதிவுகள் நல்லதாக இல்லை. பாதுகாப்பற்ற உணர்வைப் பெறுவதற்கு, நான் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவனாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. 2002 இல் திட்டமிட்டதொரு இனவழிப்பு நடவடிக்கை இடம்பெற்றது என்று நியாயமாக சிந்திக்கின்ற போது, சிறுபான்மையினர் பாதுகாப்பற்ற உணர்வைப் பெறுவதற்குரிய நிலமை உருவாவதை இந்தியர்களாகிய நாம் எவரும் விரும்பவில்லை. பௌதீக ரீதியான கீழ்க் கட்டுமாணங்கள் குஜ்ராத்தில் நன்றாக இருக்கக் கூடும். ஆனால், சிறுபான்மையினருக்கோ, பெரும்பான்மையினருக்கோ போதுமானளவு எதனையும் அவர் செய்யவில்லை” என்கிறார் அமார்த்யா சென்.   

பத்ம ஸ்ரீ பெற்ற விருது பெற்ற எழுத்தாளரான அமிடோவ் கோஷ், தான் மோடிக்கு வாக்களிக்கப் போவதில்லை எனத் தெரிவித்தார். 2002 குஜ்ராத் இனக் கலவரத்தின் குற்றவாளி என மோடியை வர்ணித்த அவர், ஹிந்துத் தேசியவாதம் அரசியலுடன் இணைந்திருக்கின்ற விதம் தன்னை அச்சம் கொள்ளச் செய்வதாக குறிப்பிடுகின்றார். “இந்துத் தேசியவாத அரசியல் இந்து மதத்தை அழித்துக் கொண்டிருக்கிறது. அத்தகைய கடந்த காலப் பின்னணி கொண்ட ஒருவர் நாட்டின் உயர் பதவியை அடைந்து கொள்கின்றமை, எனது பார்வையில் நிலமையைக் குழப்பி விடுவதாகவே இருக்கும்”.  
      
மோடியினாலும், அவரது கும்பலினாலும் கோத்ராவில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு இனவழிப்பு நடவடிக்கைகள் குறித்து, சுதந்திர அமைப்புக்களால் தயாரிக்கப்பட்ட எத்தனையோ அறிக்கைகள் காணப்படுகின்றன. பெண்கள் அமைப்பொன்றினால் தயாரிக்கப்பட்ட அத்தகையதொரு அறிக்கை Kractivist.org என்ற இணையதளத்தில் பிரசுரிக்கப்பட்டிருந்ததோடு, இவ்வறிக்கையை இலங்கையில் சிலோன் டுடே பத்திரிகையும் பிரசுரித்திருந்தது. அதில் இருந்து சில பகுதிகளை இங்கு வழங்குகின்றோம். 

மோடியும், இவற்றுக்குப் பொறுப்பானவர்களும், மனித குலத்துக்கு எதிரான குற்றங்களை இழைத்தமைக்காக இன்னும் சட்டத்தின் முன் கொண்டு வரப்படவில்லை என்பதை விட மோசமானதொரு அம்சம் இருக்க முடியாது. கலவரத்தை முதலில் தடை செய்து, பிறகு தூண்டி, பிறகு எதிர்விளைவு என்று  கூறி நியாயப்படுத்தியவரே மோடி என்பதை மறந்து விட முடியாது.    
நரேந்திர மோடி ஆர்.எஸ்.எஸ்ஸின் ஓர் அங்கத்தவர். இது ஆண்களை மாத்திரம் கொண்ட, ‘இனத் தூய்மை’ கருத்தியலோடு, இராணுவ மனநிலை கொண்ட மனிதர்களை உருவாக்கிய ஹிட்லர்- முஸோலினி போன்றவர்களிடம் இருந்து உத்வேகத்தைப் பெற்றுக் கொள்கின்றதோர் அமைப்பு.         

இந்தியாவின் தேச பிதா மகாத்மா காந்தியைக் கொலை செய்த RSS, சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து நாற்பதாயிரத்திற்கும் அதிகமான முஸ்லிம் விரோதத் தாக்குதல்களுக்குப் பொறுப்பானதாகும். இச்சந்தர்ப்பங்களில், முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்டதற்கு மேலதிகமாக முஸ்லிம் பிரதேசங்கள் அழிக்கப்பட்டன. இத்தாக்குதல்கள் ஒவ்வொன்றிலும் முஸ்லிம் பெண்கள் கற்பழிக்கப்படுகின்றமை தவிர்க்க இயலாத ஓர் அங்கமாக இருந்திருக்கிறது. 
   
ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களில் முஸ்லிம் பெண்களைக் கற்பழிக்காமல் இருந்தமை குறித்து, ஆர்.எஸ்.எஸ் ஸ்தாபகர் வீ.டீ. சவர்கர், இந்து அரசர்களை கேவலமாகப் பேசி இருக்கிறார். தமது இனத்தைப் பெருக்குபவர்கள் என்ற ரீதியில் முஸ்லிம் பெண்கள் சித்தறிக்கப்பட்டதோடு, முஸ்லிம் சனத்தொகை அதிகரிப்பு குறித்த வெறுப்பையும், பயத்தையும் ஹிந்துத்துவ தலைவர்கள் கட்டமைத்து வந்தார்கள். குஜ்ராத் அகதி முகாம் குறித்த மோடியின் அறிவிப்பிலும் இதனை அவதானிக்கலாம். “உதவி முகாம்கள் உண்மையில் குழந்தைகளை உருவாக்கும் தொழிற்சாலைகள். சனத்தொகையை பல மடங்காகப் பெருக்கிக் கொண்டு இருப்பவர்கள் நல்லதொரு பாடம் கற்பிக்கப்பட வேண்டும் (The Hindu, 10 September, 2002). எனவே, பெண்களுக்கு எதிரான வன்முறைகள் எதுவித வெளித் தூண்டலும் இல்லாமல் உருவானவை என்று நினைப்பது தவறானதாகும். இவை திட்டமிட்ட, ஒழுங்குபடுத்தப்பட்ட, கருத்தியல் பரவலாக்களின் மூலம் இடம்பெறுபவை.  

முஸ்லிம் ஆண்கள் இந்துப் பெண்களை கற்பழித்திருக்கிறார்கள் என்றும், எனவே இந்து ஆண்களும் முஸ்லிம் பெண்களைக் கற்பழிக்க வேண்டும் என்ற போலியான பிரசாரத்தின் மூலம் இவர்கள் குண்டர்களைத் தம்மோடு இணைத்துக் கொள்கிறார்கள். பெண் குறிக்குள் இரும்புக் கம்பிகளையும், வாளையும் பாய்ச்சுதல், கர்ப்பிணிப் பெண்களின் வயிற்றைப் பிழந்து சிசுவை வெளியில் எடுத்தல், பெண் குறியில் தீக்காயங்களை உண்டு பண்ணுதல், கர்ப்பழித்த பிறகு பெண்களை உயிரோடு கொழுத்துதல் என்பன இத்தகைய பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் உள்ளடங்குகின்றன.     
   
வன்முறையில் ஈடுபடுகின்ற குண்டர்களின் பாசையில், கற்பழிப்பு என்பது நேரடியாக ஆண்மையின் பலத்தைப் பரைசாற்றுகின்ற விஷயம். நேரில் கண்ட சாட்சி ஒருவரின் கருத்தின் படி, குண்டர்கள் தமது ஆணுறுப்புக்களைக் காட்டிக் கொண்டு “உங்கள் ஆம்புள்ளகள் பலவீனமானவர்கள். நாங்கள் பலமானவர்கள். உங்கள் சொந்தப் பெண்களை ............................... (தணிக்கைக்குரிய வார்த்தை) செய்யவே உங்களுக்குப் பலமில்லை” என்று சப்தமிட்டிருக்கிறார்கள்.  

மற்றொரு அஹ்மதாபாத் சாட்சியின் கருத்தின் படி, தனது காற்சட்டை ஸிப்பைத் திறந்த படி இருந்த பொலிஸ்காரர் ஒருவரினால் வழிநடாத்தப்பட்ட காடையர் குழுவொன்று, ‘பயங்கரவாதிகள் எங்கே? இப்போது வெளியே வா. உன் இறைவனைக் கூப்பிடு” என்று சப்தமிட்டது.       
பல நேரங்களில் கற்பழிப்பு என்பது முஸ்லிம் பெண்களுக்கு எதிரான ஆயுதமாகவும், முஸ்லிம் ஆண்களைக் கேவலப்படுத்துவதற்கானதொரு சாதனமாகவும் பயன்படுகிறது. சில்லறைக் கடையொன்றில் வேலை பார்த்து வந்த இளைஞன் ஒருவனை, சக தொழிலாளிகள் தாம் முஸ்லிம்களின் மனைவிமாரைக் கற்பழித்து இருப்பதாகவும், நீ என்ன செய்யப் போகிறாய் எனக் கேவலமாகப் பேசி இருக்கிறார்கள். “நீ பயங்கரவாதியாகப் போகிறாயா? அல்லது ஹிர்ஜாவைப் போல (இனப் பெருக்கம் செய்வதற்கு பலமற்ற மனிதன்) நின்று வேடிக்கை பார்க்கப் போகிறாயா?” என்று வேறு கேட்டிருக்கிறார்கள்.  
    
பல நேரங்களில் முஸ்லிம் பெண்களைக் கர்ப்பம் தரிக்கச் செய்வன் மூலம், முஸ்லிம்களில் இருந்து ஹிந்துத் தலைமுறை ஒன்றை உருவாக்குவதற்கான முயற்சியாகவே கற்பழிப்பு நோக்கப்படுகிறது. முஸ்லிம்களை ஒட்டு மொத்தமாக இனவழிப்பு செய்யும் ஆர்.எஸ்.எஸ்ஸின் கருத்தியலின் ஒரு பகுதியாக இத்தகைய கற்பழிப்புகள் முன்னெடுக்கப்படுகின்றன.        

பெண்களுக்கெதிரான வன்முறையை நடாத்துவதற்கு பொலிஸ் பூரண சுதந்திரத்தை அனுபவித்தமைக்கான குற்றத்தை மோடிதான் ஏற்றுக்கொள்ள வேண்டும். கர்ப்பிணியான முஸ்லிம் பெண்களின் வயிறுகளைத் தாக்கி “அவர்கள் பிறக்க முன்பு அவர்களைக் கொலை செய்யுங்கள்” என்று கத்தியதாக பரோடா மாநிலத்தில் இருந்து சாட்சிகள் பலர் தெரிவித்திருக்கிறார்கள். பரோடாவில் இருந்து கிடைத்த மற்றொரு தகவலின் படி, மாவட்ட பொலிஸ் கமிஷனர் ஒரு வீட்டுக்குள் நுழைந்து, சிறுமிகளை அடித்ததோடு, பெண்களின் மார்ப்பங்களிலும், மர்ம உறுப்புக்களிலும் தாக்கி இருக்கிறார். கர்ப்பிணித் தாய்மார் குறிப்பாக குறி வைக்கப்பட்டார்கள். வேறு சம்பவங்களில், பொலிஸார் வன்முறையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். ஆனந்த்  பகுதியில் இருக்கின்ற சட்டத்தரணி ஒருவரின் கருத்தின் படி, முறைப்பாடுகளைப் பதிவு செய்ய பொலிஸார் மறுத்திருக்கிறார்கள்.  
             
பாதிக்கப்பட்ட பெண்கள் தமது ஆண் உறவினர்களிடம் இருந்து ஒத்தாசைகளைப் பெற்றுக் கொள்வதற்கு அஞ்சினார்கள். பாதிக்கப்பட்டதற்குப் பிந்தைய மனோவியல் குளறுபடிகள், பதகளிப்பு நிலமை என்பவற்றை கையாள்வதற்கான வழிமுறைகள் காணப்படவில்லை. போதிய உணர்வு ரீதியான ஒத்தாசைகளும் அவர்களுக்கு இருக்கவில்லை.    

கற்பழிப்பு குறித்தும், பாலியல் ரீதியான வன்முறைகள் குறித்தும் அமைதி காப்பதற்கு பெண்கள் நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். தமது வீடு, கிராமம், அயலவர்கள் மத்தியில் திருப்பிச் செல்வதற்கு இது தவிர்க்க இயலாத விலையாக இருந்தது. திருமணமாகாத இளம் பெண்களைப் பொறுத்த வரை, நிலமை குறிப்பாக சிரமமாக இருந்தது. தமது துன்பங்களைப் பகிரங்கப் படுத்தினால், திருமணம் செய்வது பகற்கனவாகி விடும். இந்திய சமூக அமைப்பில், குடும்பத்திற்கும், சமூகத்திற்குமான அவமானமாகவே அது எடுத்துக் கொள்ளப்படும்.   

இதன் விளைவுகளில் ஒன்று, திருமணமாகாத பெண்கள் சீக்கிரமாகத் திருமணம் செய்து கொடுக்கப்படுகின்ற வீதத்தில் ஏற்படுகின்ற முனைப்பான அதிகரிப்பாகும். திருமணம் செய்து கொடுக்கப்படும் வயது குறைவடைந்திருத்தல், நடமாட்டத்திற்கான கட்டுப்பாடுகள், பாடசாலைகள், கல்லூரிகள், வேலைத் தளங்களில் இருந்து இடை நிறுத்தப்படுதல் என முஸ்லிம் சமூகத்திற்குள் இப்பெண்கள் புதியதொரு பிற்போக்குத்தனத்திற்கு முகம் கொடுக்கிறார்கள்.     
   
பாதிக்கப்பட்ட பெண்கள் அடிப்படை உதவிகளைப் பெற்றுக் கொள்வதிலும், தமக்குக் கிடைக்க வேண்டிய விடயங்களை அடைந்து கொள்வதிலும் வேற்றுமைகளை அனுபவிக்கிறார்கள். வீட்டுக்கு வெளியே வேலையே செய்யாத பெண்கள் கூட, நலன்புரி அமைப்புக்களிலோ, அடுத்தவர்களிலோ தங்கி இருக்க வேண்டி நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். கணவர்களை இழந்த விதவைகள், இந்த வகையில் குறிப்பாகப் பாதிக்கப்படுகிறார்கள். ஒரு பகுதியில், இவ்வறிக்கையைத் தயார் செய்தவர்கள் பனிரெண்டு பெண்களை சந்தித்தார்கள். அவர்களது கணவன்மார் கொல்லப்பட்டிருந்தனர். வீடுகளும் பயிர் நிலங்கள் அழிக்கப்பட்டிருந்தன. எந்த விதமான வாழ்வாதாரமும் அவர்களுக்கு இருக்கவில்லை.    
     
சிறுபான்மையினர் பௌதீக ரீதியான வன்முறைகளை குஜ்ராத்தில் அஞ்சுகின்ற போது, பெண்கள் பாலியல் ரீதியான தாக்குதல்களை அஞ்சுகிறார்கள். மோடி ஆதரவாளர்கள் தமது தேர்தல் வெற்றிக் கொண்டாட்டத்தின் போது, இவ்வாறு பெண்களிடம் தெரிவித்தார்கள். “இப்போது இது எங்கள் அரசாங்கம். நாம் இந்த முழுப் பிரதேசத்தையும் ஹிந்துவாக்கி விடுவோம்”.     

2002 கலவரத்திற்கு முன்னதாக இவர்கள் முஸ்லிம்களோடு திருமண உறவு கொண்டிருந்த இந்துப் பெண்களைக் குறி வைத்தார்கள். ஆனந்த் மாவட்டத்தில் முஸ்லிம் ஒருவரைத் திருமணம் செய்திருந்த பெண் ஒருவர், தான் கூட்டுக் கற்பழிப்புக்கு உள்ளானதாகவும், பொலிஸில் முறைப்பாடு செய்தால், தன்னைக் கொன்று விடுவதாக அவர்கள் மிரட்டியதாகவும் தெரிவித்திருந்தார். இருநூறுக்கும் அதிகமான குண்டர்கள் அவளை அவளது வீட்டில் இருந்து இழுத்துக் கொண்டு குப்பை மேடொன்றுக்கு வந்தார்கள். அவளைக் கீழே படுக்க வைத்து, ஒன்பது பேர் அவளைக் கற்பழித்தார்கள். “அவளை துண்டு துண்டாக வெட்டிப் போடு. உயிரோடு விட்டு விடாதே. கிராமத்தில் அவள் உயிரோடு இருப்பதை நாம் விரும்பவில்லை” என்று சுற்றி இருந்தவர்கள் கத்திக் கொண்டிருந்தார்கள்.     
        
கோத்ரா கலவரத்தை விசேட நீதி மன்றம் ஒன்று “இந்திய அரசியலமைப்பு வரலாற்றின் ஒரு கருப்புப் பக்கம்” என வர்ணித்திருந்தது. மேலதிக நீதவான் Jyotsna Yagnik கலவரத்தை அரசியலமைப்பு ரீதியான மதச்சார்பின்மையின் மீதான புற்று நோய் என வர்ணித்திருநார்.       

இந்த மோடிதான் இன்று பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர். இது இந்திய வரலாறு பொதுவாகவும், முஸ்லிம்களின் வரலாறு குறிப்பாகவும் எதிர்நோக்குகின்ற அபாயம் என்றே கருதப்பட வேண்டும்.   

மோடி அடுத்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பார் என்ற நம்பிக்கையில் இலங்கை அரசாங்கமும் ஆர்.எஸ்.எஸ், சிவ சேனா, பாரதிய ஜனதா கட்சிகளை கவர்ந்தீர்ப்பதற்குரிய கைங்கர்யங்களில் இறங்கி இருக்கிறது. இதன் மூலம் இந்திய முஸ்லிம்களின் உணர்வுகளை மாத்திரமன்றி, இலங்கை முஸ்லிம்களின் உணர்வுகளையும், பயங்களையும் கூட அது புறம்தள்ளி இருக்கின்றது.  இந்திய துணைக் கண்டம் அழிவொன்றை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதும், முஸ்லிம் இரத்தம் பிராந்தியத்தில் ஆறாக ஓடப் போகிறது என்பது மட்டும் தற்போதைக்குத் தெளிவாகத் தெரிகிறது.    

No comments

Powered by Blogger.