Header Ads



தனது மனைவியை நண்பரிடம் அடகு வைத்தவருக்கு ஏற்பட்டுள்ள பரிதாபம்...!

போதைப் பொருள் பயன்படுத்துவதற்காக நபர் ஒருவர் தனது மனைவியை நண்பர் ஒருவரிடம் அடகு வைத்துள்ளார். தம்புள்ள பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த விசித்திரமான சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

போதைப் பொருள் கொள்வனவு செய்வதற்காக குறித்த நபர் 15,000 ரூபா பணத்தைப் பெற்றுக் கொண்டு, தனது மனைவியை அடகாக வைத்துள்ளார். ஒன்றரை மாத கால அடிப்படையில் குறித்த நபர் தனது மனைவியை இவ்வாறு அடகு வைத்துள்ளார்.

ஒன்றரை மாதம் கடந்து மனைவியை மீட்பதற்காக பணத்துடன் நண்பரின் வீட்டுக்கு சென்ற போது, நண்பர் மனைவியை மீள வழங்க மறுத்துள்ளார். மனைவியும் கணவருடன் செல்ல விருப்பமில்லை எனத் தெரிவித்துள்ளார்.

கணவர் போதையில் சித்திரவதை செய்வதாகவும், கணவரின் நண்பர் மிகவும் கருணையுடன் பார்த்துக் கொள்வதாகவும் மனைவி பொலிஸ் நிலையத்தில் தெரிவித்துள்ளார். எனவே, ஒன்றரை மாதம் குடும்பம் நடத்திய நண்பருடன் தொடர்ந்தும் வாழ விரும்புவதாக மனைவி குறிப்பிட்டுள்ளார்.

மனைவியை எவ்வாறேனும் மீட்டுத் தருமாறு கணவர் பொலிஸாரிடம் கோரியுள்ளார்.

4 comments:

  1. இப்`போதை`க்கு அந்த புள்ள வர்றாப்பல இல்ல.. :)

    ReplyDelete
  2. நீ சாவுடா மகன பொண்டாட்டிய அடகு வைக்குமளவுக்கு உனக்கு கிழ்த்தரமான புத்தி இருக்குமாயின் அவளே உன்னை காலில் கிடப்பதால் அடித்து விரட்டவேண்டும். உன்னை ஊர் கண்டு காறி துப்பி அவமானப்பட்டு நீ சாகு மகனே. இதெல்லாம் இஸ்லாமிய சட்டப்படி தண்டித்தால் நாளை நடக்காது. பொது பல்லு சேனவுக்கு தெரிந்தாலும் ஒன்றும் சொல்ல மாட்டாங்களே. இதுபோன்ற காரியங்களை ஞானசாரவின் சகபாடிகள் குடும்பத்தினர்தான் செய்வார்கள் வேறுயார் செய்யப்போகின்றார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.