நாவற்பழம் பறிக்க, மரக் கிளை முறிந்தது - ஒருவர் வபாத், மற்றொருவர் படுகாயம்
(Tn) நாவற்பழம் பறிப்பதற்காக மரத்தில் ஏறிய பாடசாலை மாணவர்கள் மரக் கிளை முறிந்து கீழே மதில் சுவரில் விழுந்துள்ளனர். இதில் படுகாயமடைந்த இரண்டு மாணவர்களும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற போது ஒருவர் உயிரிழந்தார்.
இச் சம்பவம் 1-9-2013 பொத்துவில் அறுகம்பையில் உள்ள சின்ன உல்லையில் நிகழ்ந்துள்ளது. அப்துல்லா என்ற (16 வயது) மாணவன் உயிரிழந்ததுடன் (14 வயது) றிஸ்வான் என்ற மாணவன் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இவ்விரு மாணவர்களும் அறுகம்பை சின்ன உல்லை அல்-அக்ஷா கல்லூரியில் 8 ஆம் தரத்தில் கல்வி கற்கும் வறிய குடும்பத்தைச் சேர்ந்த ஒன்றுவிட்ட சகோதரர்களாவர். நாவற்பழம் பறிப்பதற்காக இருவரும் மரத்தில் ஏறியதுடன் இருவரும் ஒரே கிளையில் இருந்த பழத்தை பறிப்பதற்காக கிளையை அசைத்த போது, கிளை முறிந்து இருவரும் கீழே விழந்தனர்.

Post a Comment