Header Ads



நான் யாரையும் திருமணத்துக்கோ, பூங்காவுக்கு வருமாறு அழைக்கவில்லை

தமது குடும்பத்துக்கும் அமைச்சர் டளஸ் அழகப் பெருமவின் குடும்பத்துக்கும் இடையிலான உறவு குறித்து, டளஸ் அழகப்பெரும மறந்துபோய் விட்டார் என்று அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

நவநீதம்பிள்ளைக்கு திருமண அழைப்பு விடுக்கப்பட்ட விடயம் தொடர்பில் மேர்வின் சில்வாவின் கருத்தை அமைச்சர் டளஸ் அழகப்பெரும கண்டித்திருந்தார்.

மேர்வினின் அழைப்பு தொடர்பில் அமைச்சரவையின் சார்பில் தாம் மன்னிப்பு கோருவதாக அமைச்சர் டளஸ் அழகப்பெரும குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள அமைச்சர் மேர்வின் சில்வா, தான் ஒரு பௌத்தன் என்றும் றுகுணுவில் பிறந்த தாம், நாட்டுக்கு எதிராக எவராவது கருத்துக்கூறினால் பார்த்துக் கொண்டிருக்க போவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தாம் யாரையும் திருமணத்துக்கோ பூங்காவுக்கு வருமாறோ அழைக்கவில்லை. நவநீதம்பிள்ளை விடுதலைப்புலிகளுக்கு ஆதரவளிக்காமல் இலங்கை நாட்டுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று தோரணையில் மாத்திரமே பேசியதாக மேர்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.

எனவே தாம் யாரிடமும் மன்னிப்பு கோரப் போவதில்லை என்று குறிப்பிட்டுள்ள அவர் ஜனாதிபதியிடமும் அவரின் குடும்பத்தினரிடம் மாத்திரமே மன்னிப்பை கோருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் மன்னிப்பு கோருவதற்கு பல விடயங்கள் இருக்கும் போது அமைச்சர் டளஸ் அழகப்பெரும ஏன் இந்த சிறிய விடயத்துக்கு மன்னிப்பு கோருகிறார் என்று மேர்வின் சில்வா கேள்வி எழுப்பியுள்ளார்.

No comments

Powered by Blogger.