Header Ads



பள்ளிவாசல் உடைக்கப்படுகின்றது என்று சொல்வதை நம்ப வேண்டாம் - மஹிந்த

கடந்த 2005ஆம் மற்றும் ஆண்டு 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் இந்த மாவட்டமே அதிகப்படியான வாக்குகளை பெற்றுத்தந்தது. இந்த ஜனநாயக நாட்டில் உள்ள மக்கள் எந்த இடத்திலும் வாழக்கூடிய உரிமை உள்ளது அதை காப்பாற்ற வேண்டியது எனது கடமை எனது பொறுப்பு என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.

வடமாகாண சபை தேர்தலில் ஆளும் தரப்பிற்கு ஆதரவு வழங்கும் முகமாக தேர்தல் பரப்புரைக்கூட்டம் மன்னார் பொதுவிளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. இதன் போது கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி அவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

தமிழீழ விடுதலைபுலிகளில் சில உறுப்பினர்களும், முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த சில உறுப்பினர்களும் எங்களோடு சேர்ந்தார்கள். அதற்காக நான் சந்தோசப்படுகிறேன். பாராளுமன்ற பொதுத்தேர்தலின் போதும், பிரதேச சபைத் தேர்தலின் போதும், ஜனாதிபதி தேர்தலின் போதும் உங்கள் வாக்குகளை நீங்கள் பயன்படுத்தினீர்கள். இப்போது மாகாணசபை தேர்தலை நாங்கள் ஒழுங்கு செய்திருக்கின்றோம்.

இந்த மாகாணசபைத் தேர்தலை நடத்துவதே இந்த கூட்டமைப்பு அரசாங்கத்தின் பாரிய வெற்றி என்பதை நான் உங்களுக்கு கூறிநிற்க விரும்புகின்றேன். நாங்கள் வெளிநாட்டவர் சொன்ன காரணத்தினாலோ இங்கே உள்ளவர்கள் சொன்ன காரணத்தினாலோ இந்த மாகாணசபைத் தேர்தலை நடத்தவில்லை. 

ஜனநாயகத்தை மென்மேலும் சக்திமயப்படுத்துவதற்காக அதேபோன்று இங்கே இருக்கக்கூடிய மக்களுக்கு மக்கள் உறுப்பினர்களை தெரிவு செய்து மாகாணசபைக்கு அனுப்பி அவர்கள் மூலமாக பல சேவைகளை செய்வதற்காக வேண்டித்தான் நாங்கள் இந்த மாகாணசபைத் தேர்தலை ஒழுங்கு செய்தோம். 

இந்த நேரத்தில் நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன். தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழீழ விடுதலை புலிகளின் கொள்கைகளை நேரடியாக அல்ல மறைமுகமாக செயற்படுத்துகின்றார்கள். இங்கே எனக்கு முன்பதாக தமிழீழ விடுதலை புலிகளின் உறுப்பினர்கள் வந்தார்கள் அவர்களுக்கு ஒரு கை இல்லை, ஒரு கால் இல்லை ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களின் பிள்ளைகளோ இந்தியாவிலே, இங்கிலாந்திலே, அமெரிக்காவிலே படித்துக்கொண்டு இருக்கின்றார்கள். ஆனால் இங்கிருப்பவர்கள் கஷ்டப்பட்டவர்களும் அப்பாவி இளைஞர்கள் யுவதிகளும் ஆவர். 

எனவே வேறு நாட்டில் இருப்பேர்களுக்காகத்தான் இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு வேலை செய்து கொண்டிருக்கின்றது.  எனவே மீண்டும் பிரிவினைவாதத்தை உருவாக்க முயற்சி எடுத்து வருகின்றார்கள்.  இந்த வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பாளர்கள் இன வாதத்தை மத வாதத்தை பேசி அந்த உணர்வுகளை தட்டி எழுப்பி அதன் மூலமாக வாக்குகளை திரட்ட பார்க்கின்றார்கள். 

நாம் எல்லோரும் இந்த நாட்டிலே பிறந்த மக்கள். நாம் பேசும் மொழி வேறாக இருக்கலாம் ஆனால் நம் கைகளை வெட்டிப்பார்த்தால் அதில் வரக்கூடிய இரத்தம் சிவப்பு நிற இரத்தம் தான். இன பேதத்தை வைத்துக்கொண்டு மத பேதத்தை வைத்துக்கொண்டு அரசியல் செய்யும் அரசியல் தலைவர்களுக்கு நாம் ஒரு போதும் இடமளிக்கக் கூடாது. 

இந்த ஜனநாயக நாட்டில் உள்ள மக்கள் எந்த இடத்திலும் வாழக்கூடிய உரிமை உள்ளது அதை காப்பாற்ற வேண்டியது எனது கடமை எனது பொறுப்பு. வெற்றிலைச் சின்னத்திற்கு வாக்களித்தால் உங்களுடைய சகோதரர்கள் மாகாணசபைக்குப் போவார்கள் உங்களுக்கு சேவை செய்வார்கள். 

இதனைத்தொடர்ந்து ஜனாதிபதி தமிழில் பேசுகையில்,

சகோதர சகோதரிகளே நான் உங்களை சந்திப்பதில் எனக்கு பெரிய சந்தோஷம். எல்.டி.டி.ஈ, முஸ்லிம் காங்கிரஸில் இருந்து எம் பக்கம் வந்த எல்லோரையும் நாடு அன்போடு வரவேற்கிறது. 

பல ஆண்டு காலமாக நீங்கள் பட்ட கஸ்டம் எல்லாம் எனக்குத் தெரியும் ஆனால் அந்ந நிலைமை இனிமேல் இல்லை. இனிமேல் நீங்கள் நிம்மதியாக சந்தோசமாக பாதுகாப்பாக வாழ முடியும்.

வடக்கின் வசந்தம் மூலம் உங்கள் பகுதியில் நாம் பல அபிவிருத்தி வேலைகள் செய்துள்ளேன். இன்னும் இன்னும் செய்வோம். நான் அதிகம் சேவை செய்யும் மாகாணம் உங்கள் வடமாகாணம் தான். 
உங்கள் பகுதியில் மீன்பிடி, வீடு, வீதி, பாலங்கள் வசதிகள் எல்லாம் செய்துள்ளோம்.

இன்னும் பல வசதிகள் வழங்குவோம். சங்குப்பிட்டி பாலம் உங்கள் எல்லோருக்கும் ஒரு வரப்பிரசாதம். யுத்தம் 30 வருடம் அபிவிருத்தி 4 வருடம். அழிப்பது இலகு ஆக்குவது கஸ்டம். 
அந்த யுத்தத்தினால் நீங்கள் இழந்த உயிர்களை தவிர மீதி அனைத்தையும் நாங்கள் நிச்சயமாக மீட்டுத்தருவோம்.

உங்கள் பிரதேசம் இனி கஸ்டமான பிரதேசமாக இருக்க முடியாது. இன பேதம், மத பேதம், குல பேதம் பார்க்க வேண்டாம். நாம் எல்லோரும் இந் நாட்டின் மக்களே. தவறான வழியில் போக வேண்டாம் தவறான பிரசாரத்தை நம்ப வேண்டாம்.

பள்ளிவாசல் உடைக்கப்படுகின்றது என்று சொல்வதை நம்ப வேண்டாம் நாங்கள் பள்ளிவாசல்கள், கோவில்கள், விகாரைகளை கட்டுகிறவர்கள் என்பதை உங்களுக்கு கூறிக்கொள்ள விரும்புகிறேன். 

உங்கள் பிள்ளைகள் நன்றாக படிக்க வேண்டும். இந்த நாட்டிலும் வெளிநாட்டிலும் நல்ல பேர் எடுக்க வேண்டும் அதுதான் முக்கியம். உங்கள் கிராமம், நகரம், பிரதேசம் முன்னேற வேண்டும். எனவே ஒன்றாக வேலை செய்யக்கூடிய அன்பர்களை தெரிவு செய்தால் நல்லது. அப்போது உங்களுக்கும், எங்களுக்கும் வசதியாக இருக்கும்.

நான் எப்போதும் உங்களோடு இருப்பேன் உங்களை பாதுகாப்பேன். ஆகவே வெற்றிலை சின்னத்திற்கு உங்கள் வாக்குகளை போட்டு எனக்கு ஆதரவு தாருங்கள் என்று கேட்டுக்கொண்டார்.

இப்பிரசார கூட்டத்தின் போது 25 முன்னாள் புலி உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் முன்னணி கூட்டமைப்பில் சேரும் நேக்குடன் மேடையில் ஏறி ஜனாதிபதிக்கு கைலாகு கொடுத்து தங்கள் ஆதரவை தெரிவித்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. vi

3 comments:

  1. விடுதலைப் புலி உறுப்பினர்கள் தமது அங்கங்கள் போனாலும் பரவாயில்லை, தமது உயிரைக் காப்பாற்றிக் கொண்டு உலகில் வாழ்வதற்காக வேறு வழியின்றி அரசாங்கத்தின் பக்கம் சேர்ந்திருக்கலாம்.

    ஆனால் முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் அப்படியல்ல. அவர்கள் கைக்கூலிகள். அரசாங்கத்தின் கொடுக்கல் வாங்கல்களை எதிர்பார்த்துத்தான் அரசின் பக்கம் தாவி இருப்பார்கள். அதற்கு அக்கட்சியின் தலைவர், தவிசாளர் போன்றவர்களே முன்னுதாரணம்.

    ஸ்ரீ.ல.மு. காங்கிரஸ்தான் ஏற்கனவே அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சர் பதவிகளையும் பெற்றுக் கொண்டிருக்கின்றபோது, பிறகு எப்படி அக்கட்சியைச் சேர்ந்தவர்கள் அரசாங்கத்துடன் சேர்வது?

    ஐ.நா. தீர்மானத்தின்படி வடக்கின் தேர்தல் நடைபெறுகிறது என்பது விவரமறிந்த என்போன்றவர்களுக்கு தெளிவான விடயம். அறிவிக்கப்பட்ட வடக்குத் தேர்தலை வேண்டுமானால் அரசாங்கம் குழப்பங்களைக் காரணங்காட்டி உரிய திகதியில் நடத்தாமல் இடை நிறுத்தலாம். ஆனால் அறிவிக்கப்பட்டது சர்வதேசத்தின் அழுத்தங்களினால் என்பதை நாமறிவோம்.

    வடக்கு இனவாதம், மதவாதம் பற்றி கருத்துரைக்கும் ஜனாதிபதி, தெற்கில் பேசப்படும் இனவாதம், மதவாதம் பற்றி எதுவும் கூறாதது ஏன்?

    குறிப்பாக அவரது அமைச்சரவையில் இருக்கும் சம்பிக்க ரணவக்க போன்றவர்கள் யார்? அவர்கள் என்ன பேசுகின்றனர்? பொதுபல சேனாவின் காரியாலத் திறப்பு விழாவுக்கு ஜனாதிபதியின் சகோதரர் கோத்தா சென்று உயிரூட்டியது எதற்காக?

    நமது உடம்பில் ஓடுவது சிவப்பு இரத்தம் என்பது ஜனாதிபதியின் அருமையான கண்டுபிடிப்புத்தான். சந்தேகமுள்ளவர்கள் தமது கைகளை வெட்டியும் பரீட்சித்துக் கொள்ளலாம்.

    ஆனால் அந்த இரத்தமும் கொம்யூனிஷம் கலந்தது என்றோ அல்லது சிவப்பு இரத்தம் உள்ளவர்கள் எல்லோரும் ஜே.வி.பி. என்றோ ஆளுந்தரப்பு அரசியல்வாதிகள் முத்திரை குத்தாமல் இருந்தால் நல்லது.

    உயிர்களைத் தவிர மற்றவை அனைத்தையும் தருவோம் எனக்கூறும் ஜனாதிபதி, சிறுபான்மை மக்களின் உரிமைகளை எப்போது முழுமனதுடன் வழங்குவார்?

    காபட் வீதிகளும், பாலங்களும், கொங்றீட் வீதிகளும் பிரதேச அரசியல்வாதிகளின் கஜானாக்களில்தான் பாரிய அபிவிருத்தியை ஏற்படுத்தியுள்ளன என்பதை ஜனாதிபதி இன்னமும் புரிந்து கொள்ளாமல் வெளிநாட்டுக் கடன்களைப் பெற்று நாட்டு மக்களை மேலும் கடனாளிகளாக்கி, அரசதரப்பு அரசியல்வாதிகளை கோடீஸ்வரர்களாக உருவாக்குவதுதான் 'மஹிந்த சிந்தனை'யின் அபிவிருத்தியா?

    என்ககுக்கூட வெளிநாடுகளோ அல்லது அரசாங்கமோ பத்து இலட்சம் ரூபா கடன் தந்தால் வீட்டில் குளிரூட்டி, தொலைக்காட்சி, ஐஸ் பெட்டி என்று ஆடம்பரப் பொருட்களை எல்லாம் வாங்கிச் சென்று வீட்டை அபிவிருத்தி செய்ய முடியும். ஆனால் கடனையும் வட்டியையும் யார் கட்டுவது?

    பள்ளிவாசல்கள் உடைக்கப்படுகிறது என்பதை நம்ப வேண்டாம் என அப்பட்டமாகப் பொய் சொல்லும் ஜனாதிபதிக்கு, அனுராதபுரம் பள்ளி உடைக்கப்பட்டது, மஹியங்கனைப் பள்ளி ஊவா மாகாண ஆளுந்தரப்பு அமைச்சரினால் மூடப்பட்டது, தம்புள்ள பள்ளிக்கு ஊடாக வீதியமைப்பது , கிரான்ட்பாஸ் பள்ளிக் கலகம் எல்லாம் தெரியாதா? தமபுள்ள காளி கோயில் சிலைக்கு என்ன நடந்தது என்பது தெரியாதா?

    அமைச்சர் பௌஸி, அலவி மௌலானா, அஸ்வர் ஹஜி போன்ற விவரம் தெரியாதவர்கள் செர்லவதை நம்பி நாட்டின் தலைவரும் இப்படியெலர்லாம் உண்மைக்குப் புறம்பானதை மக்கள் மத்தியில் பகிரங்கமாக ஒப்புவிப்பது அறிவுடமையன்று.

    தேர்தல் காலத்தில் மாத்திரம்தான் 'நான் உங்களோடு இருப்பேன்' என்று சொல்கிறீர்கள். தேர்தல் முடிந்த பின் எமக்கு நடக்கும் அநீதிகள் பற்றி நாம் எழுத்து மூலம் முறையிட்டால் உங்களின் செயலாளரே 'கடிதம் கிடைத்தது. நடவடிக்கை எடுக்கப்படும்' என்று பதில் அனுப்புவார். நாட்டின் தலவரான உங்களைச் சந்திப்பதிலுள்ள சிரமம் சாதாரண மக்களுக்கு நன்கு தெரியும்.

    எனவே மக்கள், அரசாங்க வேட்பாளர்கள் உட்பட அனைத்து வேட்பாளர்களின் எண்ணங்கள், இலட்சியங்கள், கொள்கைகள், கோட்பாடுகள், குண நலன்கள் எல்லாம் அறிந்துணர்ந்தே தமது வாக்குகளை பொருத்தமானவர்களுக்கு அளிக்க வேண்டுமே தவிர, சும்மா 'சப்பித் துப்பி 'விட்டுப் போகும் கணக்காக வாக்குகளை விரயமாக்கிவிடக் கூடாது என நானும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன்

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete
  2. this speech only for vote how about 32 mosque had been broken last election president was promises in kalmunai i will not let any mosque to be break by any anti Muslims if he is a real president he must band BBS first and gotabaya his brother should terminate from his power because he is miss using for minorities

    ReplyDelete
  3. Dear Mr. President. why you did not take any action against BBS and Mongs who took law in their hand freely promote racism and deliver hate public speaches and trying to destroy Muslim's, culture, food and Mosque only two example for you out of many in recent time; Mahiyangana and Damubbla mosque insidents.

    ReplyDelete

Powered by Blogger.