Header Ads



நொக்கியாவை வாங்கியது மைக்ரோசொப்ட்

கையடக்க தொலைபேசி தயாரிப்பு நிறுவனமான நொக்கியாவை மைக்ரோசொப்ட் நிறுவனம் 7.2 பில்லியன் டொலருக்கு விலைக்கு வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

கையடக்க தொலைபேசி விற்பனையில் முதலிடத்தில் இருந்த நொக்கியாவை, ஆப்பிள் மற்றும் சம்சுங் போன்ற ஸ்மார்ட் போன் தயாரிப்பாளர் நிறுவனங்கள் பின்தள்ளிவிட்டது குறிப்பிடத்தக்கது. ஆண்ட்ரொய்ட் கையடக்க தொலைபேசிகளை சமாளிக்க 2011 ஆம் ஆண்டில் மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் வின்டோ போன் மென்பொருளை நொக்கியா கையடக்க தொலைபேசிகள் இயக்கியது. ஆனால் இது பெரியளவில் விற்பனையை அதிகரிக்க இன்னமும் சாத்தியப்படவில்லை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இந்த பரிமாற்றம் 2014 முதல் காலாண்டில் நிறைவடையும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் சுமார் 32,000 நொக்கியா பணியாளர்களும் அடுத்த ஆண்டில் மைக்ரோசொப்ட் நிறுவனத்திற்குள் உள்வாங்கப்படவுள்ளனர். Tn

No comments

Powered by Blogger.