Header Ads



இலங்கையில் அடக்குமுறை கொண்ட ஆட்சி என்பதை முற்றாக மறுக்கின்றோம்

(J.M.HAFEES  AND MOHOMED  ASIK )

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை தனது ஒரு வார விஜயத்தை முடித்துக் கொண்ட பின் இடம் பெற்ற  ஊடகவியலாளர் மாநாட்டில் இலங்கையில் அடக்கி ஆழும் அரசு ஒன்று உள்ளதாகக் கூறிய கருத்தை அரசாங்கம் முற்றாக மறுப்பதாக ஊடகத்துறை அமைசச்ர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

இன்று (2013 09 01) கண்டி பேராதனையில் அமைந்துள்ள ஓக்ரே ஹோட்டலில் இடம் பெற்ற நாடலாவிய ரீதியில் நடாத்தப்படும் ஊடக வியலாளர் கருத்தரங்கில் கண்டி மாவட்ட ஊடகவியலாளர்களது கருத்தரங்கின் போது அமைச்சர்  கெஹெலிய ரம்புக்வெல்ல இவ்வாறு தெரிவித்தார். இங்கு அவர் மேலும் இவ்வாறும் தெரிவித்தார்.

ஐ.நா. சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை தனது விஜயத்தை முடித்துக் கொண்ட பின் வெளிப்படுத்திய கூற்றில் எமக்கு சந்தேகம் உள்ளது. ஓர் இடத்தில் இலங்கை அரசு அடக்கி ஆழும் அனுகுமுறையை கடைப்பிடிப்பதாக தெரிவித்துள்ளார். அதே வேளை உலகில் யுத்தம் முடிவடைந்த எந்த ஒரு நாட்டிலும் காணப்படாத அபிவிருத்தியும் முன்னேற்றமும் புனர்வாழ்வும் இலங்கையில் காணப்படுவதாகவும், அது தொடர்பாக தான் திருப்தி அடைவதாகவும் தெரிவித்துள்ளார்.

இவருடைய இக் கூற்றுக்கள் ஒன்றுக்கொன்று முறன்படுவதன் காரணமாக எமக்கு அதில் சந்தேகம் எழுந்துள்ளது. யுத்த ரீதியாக வெற்றி கொள்ள முடியாத சில விடயங்களை கருத்து ரீதியாக வெற்றி கொள்ள முற்படும் ஒரு சர்வதேச அழுத்தம் இருப்பதை அவதானிக்க முடிந்தது. கற்றுக் கொண்ட பாடங்களும் நல்லிணக்க ஆணைக்குழுவினதும் அறிக்கையில் ஐம்பது சத வீதம் ஏற்கனவே பூர்தியாகி விட்டது.

சுமார் 13,000 ற்கும் மேற்பட்டோர் புனர்வாழ்வு அளிக்கப்பட்டுள்ளனர். ஆயுதம் ஏந்திய போராளிகள் 300 க்கும் மேற்பட்டோர் பல்கலைகழகங்களுக்கு அனுப்பட்டுள்ளனர். மேலும் 300 க்கு மேற்பட்டோர் பொலீஸ் சேவையில் இணைக்கப்பட்டுள்ளனர். யுத்தம் நிறைவடைந்த பின் அப் பிரதேசங்களில் பாரிய அபிவிருத்திகள் ஏற்பட்டுள்ளன. இவை தொடர்பாக அவர் திருப்தி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இருப்பது அடக்கு முறை கொண்ட ஆட்சி என்பதை நாம் முற்றாக மறுக்கின்றோம். ஏனெனில் அரசின் அனைத்து செயற்பாடுகளும் எமது அரசியல் அமைப்பை மீறாத வகையிலே நடை முறைப்படுத்தப்பட்டுள்ளன. நாங்கள் எக்காரணம் கொண்டும் தேர்தலை பிற்போடவில்லை. ஊரிய காலத்துக்க முன்பே தேர்தல்களை நடாத்தி வருகின்றோம். ஊடக சுதந்திரம் தாராளமாக நாட்டில் அமுல் படுத்தப்படுகின்றது. ஊடக அமைச்சராக இருக்கும் என்னை பற்றியே அதிக கேலிச் சித்திரங்கள் பத்திரிகைகளில் வெளியாகின்றன. அரசையும் அரசின் செயற்பாடுகள் பற்றியும் தாராளமான விமர்சனங்கள் எழுதப்படுகின்றன என்றார்.
 
இக் கருத்தரங்கில் அரச தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் கலாநிதி ஆரியரத்ன அதுகல அரசின் தகவல் பணிப்பாளர் வசந்த பிரிய ராமநாயக்க உற்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments

Powered by Blogger.