Header Ads



சவூதி அரேபியாவில் மரண தண்டனையிலிருந்து மீண்டார்

ரொடோலியோ டாண்டன் லானூஸா என்னும் 38 வயது ஃபிலிப்பைன் தேசத்தவர், 13 வருட சிறைவாசத்திற்குப் பின்னர் மரண தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2000 ஆம் ஆண்டு சவூதியர் ஒருவருடன் ஏற்பட்ட பிணக்கில் அச்சவூதியரைக் கொன்றதாக 'பினாய்' எனப்படும் ரொடாலியோ டாண்டன் லானுஸா மீது குற்றஞ்சாட்டப்பட்டு, 2001 ஆம் ஆண்டு அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. சவூதியின் மேல்நிலை நீதிமன்றம் இத்தீர்ப்பை உறுதி செய்த நாள் முதல் கடந்த 13 ஆண்டுகளாக பினாய் சிறையில் இருந்து வருகிறார்.

இந்நிலையில் பினாய்-க்கு மன்னிப்பை வேண்டி, அவர் குடும்பத்தினர் மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டவர்களின் தொடர் முயற்சி மற்றும் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட கொலையுண்டவரின் குடும்பத்தவர் கொலைக் குற்றவாளி பினாயை மன்னித்து விடுவதாகவும், இழப்பீடாக இரத்தப்பணம் சவூதி ரியால்கள் மூன்று மில்லியன் தங்களுக்குத் தரப்பட வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

அக்கோரிக்கையை ஏற்று பல்வேறு ஃபிலிப்பினோ நலச்சங்கங்களும் பினாயின் விடுதலைக்காக நிதித்திரட்டி வந்த நிலையில், சுமார் 2.3 மில்லியன் ரியால்களை தானே முன்வந்து செலுத்தியுள்ள சவூதி மன்னர் பினாயின் விடுதலைக்கு வழிகோலியுள்ளார்.

பினாய், விரைவில் மணிலா திரும்ப உள்ளார். பினாயின் விடுதலைக்கு உதவிய சவூதி மன்னருக்கு பினாய் குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர். Inne

No comments

Powered by Blogger.