முஸ்லிம் நாடுகள் தொடர்ச்சியாக ஒத்துழைப்பு நல்கின - ஈரான் ஜனாதிபதியிடம் மஹிந்த (படங்கள்)
கடந்த மூன்று தசாப்தங்களாக இலங்கை பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்டிருந்த முறையையும் உட்கட்டமைப்பு வசதிகளின் அபிவிருத்தி, உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களை மீள குடியமர்த்துதல் மற்றும் முரண்பாடு நிலவிய பிரதேசங்களில் தேர்தல் நடத்துதல் உட்பட நாட்டை மீண்டும் முன்னிருந்த நிலைக்கு கொண்டுவருவதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளை ராஜபக்ஷ அவர்கள் ஈரான் சனாதிபதிக்கு விபரித்தார்.
நட்புறவு தொடர்புகளை பேணுவதற்கு நாம் தொடர்ச்சியாக செயற்படுகிறோம்' என ராஜபக்ஷ அவர்கள் ரொஹானி அவர்களுக்கு வாக்குறுதியளித்தார். சர்வதேச மேடைகளில் முஸ்லிம் நாடுகள் தொடர்ச்சியாக இலங்கைக்கு ஒத்துழைப்பு நல்கின என்பதை ராஜபக்ஷ அவர்கள் சுட்டிக்காட்டினார். அத்துடன் சர்வதேச மேடைகளில் ஒன்றுக்கொன்று ஒத்துழைப்பு நல்குகின்ற முறை தொடர்பாக இரு சனாதிபதிகளும் பேச்சுவார்த்தை நடத்தினர். அபிவிருத்தி அடையும் நாடுகளின் எதிர்காலப் பயணம் ஒரே விதமாக குரல் எழுப்புவதன் அடிப்படையிலும் மிக நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்வதன் அடிப்படையிலும் தங்கியிருக்கின்றன என ரொஹானி சனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்கள்.
நிலைபேறாக ஐக்கியத்துடன் இருப்பதற்கு நாம் ஒருவருக்கொருவர் தொடர்ச்சியாக உதவி செய்துகொள்ள வேண்டும்' எனக் குறிப்பிட்ட ஈரான் சனாதிபதி, தமது வலயங்களில் பிரிவினை வாதமும் முரண்பாடுகளும் ஏற்படக்கூடிய வாய்ப்பை நாடுகள் தடுத்துக்கொள்ள வேண்டுமெனவும் கூறினார்.
ரொஹானி சனாதிபதி அவர்களுடன் ஐக்கிய நாடுகளின் ஈரான் நிரந்தர பிரதிநிதி . மொஹமட் கசி, சனாதிபதியின் விசேட ஆலோசகர் ஹூசைன் பெரைடோன் மற்றும் ஈரான் சனாதிபதி பணியாட்தொகுதி தலைவர் நஹவாந்தின் ஆகியோரும் இப்பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டனர்.
வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், நீர்;ப்பாசன நீர் முகாமைத்துவ அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா, இளைஞர் அலுவல்கள் மற்றும் திறன்விருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும, ஐக்கிய நாடுகளின் நிரந்தர பிரதிநிதி கலாநிதி பாலித கொஹன, வெளிவிவகார அமைச்சின் மேலதிக செயலாளர் ஷனுக்கா செனெவிரத்தின ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.
Post a Comment