Header Ads



வடமாகாண தேர்தல் குறித்து மக்களை தமிழ் கூட்டமைப்பு பிழையாக வழி நடத்திவருகின்றது.

(வவுனியாவிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா)

வடமாகாண சபை தேர்தல் குறித்து மக்கள் மத்தியில் தமிழ் கூட்டமைப்பு பிழையாக  வழி நடத்திவருகின்றது. கிழக்கு மாகாண சபையின் ஆட்சி ஆளும் அரசாங்கத்திடம் இருக்கின்றது. அதே போன்றுதான் வட மாகாணத்தின் ஆட்சியினையும் அரசாங்கம் பெறுகின்றபோது சமாந்தரமான அபிவிருத்திகளை இலகுவாக செய்ய முடியும் என்று வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன்  தெரிவித்தார்.

வவுனியாவில் இன்று ஜனாதிபதி கலந்து கொண்ட  ஜக்கிய மக்கள் சுதந்திர  கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். மேலும் அமைச்சர் றிசாத் பதியுதீன் பேசுகையில் கூறியதாவது,

போரினால் அகதி வாழ்வு,குடும்பங்கள் அநாதவராக, ஊணமுற்ற நிலை, மக்கள் துன்பப்படும் போது,அப்பாவி தமிழ் மக்களிடம் சென்று 4 வது ஈழப் போருக்கான அனுமதியினை தமிழ் தேசிய கூட்டமைப்பு கோறி நிற்கின்றது.இவர்கள் கடந்த காலங்களில் மக்களுக்கு செய்தததை ஒரு போதும் இந்த மக்கள் மறந்துவிடமாட்டார்கள்.

மெனிக் பார்மில் இருந்த 3 இலட்சம் மக்களை மீள்குடியேற்ற  மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தலைமையிலான  அரசு செய்தது என்ன என்பதை இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு புரிந்து கொள்ள வேண்டும்.ஏனைய மாவட்டங்களை போன்று வடமாகாணமும் அபிவிருத்தி செய்ய வேண்டும் என்று அரசாங்கம் பலகோடி ரூபாய்களை செய்துவருகி்ன்றது.மக்களின் இயல்பு வாழ்க்கையினை மேம்படுத்த எம்மால் ஆன அனைத்து உதவிகளையும் இனப்பாகுபாடுகளுக்கு அப்பால் மனித நேயத்துடன் செய்துவருகின்றோம்.கடந்த கால போராட்டத்தில் நாம் இழந்தவைகள் ஏராளம்.இந்த  போராட்டத்தில் ஈடுபட்டு எல்லாவற்றையும் இழந்த நிலையில் இன்று 12 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் புனர்வாழ்வு பெற்று சமூகத்தில் இணைக்கப்பட்டுள்ளனர்.அழிக்கப்பட்ட அனைத்து கட்டிடங்கள் எல்லாம் இன்று புனரமைப்பு செய்யப்படுகின்றது.வவுனியாவிலிருந்து எல்ல பகுதிகளுக்குமான பாதைகள் நவீன மயப்படுத்தப்படுகின்றது.

நேர்மையான ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் அரசாங்கத்தில் மக்கள் நன்மையடைகின்றனர். கடந்த தேர்தலில் மக்களை பிழையாக வழிநடத்தி பொய் கூறி மக்களைது வாக்குகளை அபகரித்து கடந்த தேர்தல்களில் பிரதேச சபைகளின் அதிகாரத்தை கைப்பற்றினர்.இன்று மீண்டும் அவ்வாறு மக்கள் முன் தோன்றி மக்களை ஏமாற்றி ஈழப்போரை நடத்துவதற்கு அனுமதி தாருங்கள் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரசாரம் செய்கின்றது. இவர்களால் ஒரு போதும் ஈழப் போரினை நடத்த முடியாது மக்கள் இன்று யதார்தத்தை உணர்ந்து கொண்டனர்.

அப்பாவி இளைஞர்களை பலி கொடுத்து, அவர்களது திறமைகளை இல்லாமல் ஆக்கி ஆங்கவீனர்களாக மாற்றிய பெருமையினை இந்த கூட்மைப்பினரையே சாரும். அதுமட்டுமல்லாமல் வவுனியாவில் தமிழ்-முஸ்லிம் மக்களை சீண்டி அவர்களை பிளவுபடுத்தி அதன் மூலம் இன மத மோதலை தோற்றுவிக்க முயற்சிக்கும் கட்சிகளை புறந்தள்ளி மக்கள் ஒற்றுமைக்கு வழி அமைக்க தயாராகவுள்ளனர்.

அதே போல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வவுனியா மாவட்ட வேட்பாளர் எம்.உவைஸ் இன்று ஜனாதிபதி தலைமையிலான ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு ஆதரவு வழங்க வந்துள்ளது இங்கு பாராட்டக்  கூடியது என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.

2 comments:

  1. இதையே இன்னும் எத்தனை வருடத்துக்கு பேசி அரசியல் பிழைப்பு நடத்த போகிறார்கள் என்று தெரியவில்லை. இன்றும் பழையதை கிளறி அதில் இலாபம் தேட முற்படுவது படு கேவலம். இது இவர்களின் நரி தந்திரம். இந்த வசனத்தை வைத்துகொண்டு தான் இவர்களால் வாக்கு கேட்க முடியும் தவிர வேற ஒன்றும் பேசுவதுக்கு இல்லை.

    இவர்களே தான் சொல்லுகிறார்கள் நாங்கள் பழையதை பேச மாட்டோம் என்று, ஆனால் இப்போது அதை பேசி,இனவாதம் பேசி வாக்கு கேட்கிறார்கள். மக்கள் சில தேவை அற்ற செயல்களை மறந்து ஓன்று சேர்ந்து ஒற்றுமையாக வாழ நினைத்தாலும் இவர்கள் விடுவதாக இல்லை.

    நீங்கள் கடும் போக்குடன் பேசினால் அதுக்கு பெயர் சமத்துவம், இன நல்லிணக்கம் அதே தமிழர்களும், தாங்களின் உரிமைக்க பேசும் முஸ்லிம் அரசியல் தலைமைகளும் பேசினால் அதுக்கு பெயர் இனவாதம். நீங்கள் பேசினால் சரி தமிழர்கள் பேசினால் அதுக்கு இல்லாத பட்டம். தமிழர்களின் தேர்தல் விஞ்சபானம் என்பது பெரிதாக ஒன்றும் இல்லை, பெடெரல் முறை என்பது இந்தியா ,சுவிஸ் நாடுகளில் இருக்கும் போன்றது ஒரு தீர்வு. இதை இவர்கள் பெரிதாக தெற்கில் காட்டி, தினமும் இதே பேசி, தெற்கில் முன்னர் இல்லாத அளவுக்கு இனவாதத்தை பரப்பி கொண்டு இருக்கிறார்கள். இதை நீங்கள் செய்திகளில் தினமும் பார்க்கலாம். நேற்றும் ஒரு விவாத நிகழ்ச்சியில் பேசும் திரு. வாசுதேவ நயாகரா மற்றும் தொலைபேசியில் பேசிய நபர்கள் கடும்போக்குடன் பேசுவதை நான் பார்த்தேன்.

    வடக்கை பார்த்து இனவாதம் என்று சொல்ல முன்னர் தெற்கில் இருக்கும் இனவாதம் மற்றும் கடும்போக்கு மதவாதத்தை பற்றி பேசினால் சிறப்பாக இருக்கும்.

    ReplyDelete
  2. சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்?

    இத்தனை காலமாக அரசாங்கத்துடன் ஒட்டிக்கொண்டு ஊர் சுற்றித் திரிந்தது தான் இவர்களுக்கு மிச்சம்!

    வடக்கிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் சார்பாக நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் தலைமையிலான கூட்டமைப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் இருந்து பெற்றுக் கொடுத்திருக்கின்ற புரிந்துணர்வு உடன்படிக்கையின் அளவுக்காவது, இந்த அமைச்சர் பெருமக்களால் அரசாங்கத்திடமிருந்து ஒரு அகதி அந்தஸ்துப் பதிவைப் பெற்றுக் கொடுக்க வக்கில்லாது போய் விட்டதே.. இதற்குப் பின்னரும் என்ன வீறாப்புப் பேச்சு..?

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete

Powered by Blogger.