Header Ads



முஸ்லிம் சமூகத்திற்கு துரோகம் செய்ய களமிறங்கியிருக்கிறார்கள் - ஹனீபா (மதனி)

'அரசியலில் பிச்சைப்பாத்திரம் ஏந்திய போது முஸ்லிம் காங்கிரசால் போடப்பட்ட எம்.பி. பதவியை எடுத்துக்கொண்டு பாராளுமன்றப் படிக்கட்டுக்களை மிதித்தவர்கள் பின் அரசுக்குக் கூஐதூக்கி ஆராத்தி எடுத்து அமைச்சுப் பதவிகளையும் பெற்றுக்கொண்டார்கள். இவர்களே இன்று முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கும் முஸ்லிம் சமூகத்திற்கும் துரோகம் செய்ய களமிறங்கியிருக்கிறார்கள்.

இவ்வாறு அண்மையில் வடமேல் மாகாண சபைக்கான தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் வேட்பாளர் ஐயூப்கான் அவர்களை ஆதரித்து புத்தளம் கரைத்தீவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்து உரையாற்றிய அக்கரைப்பற்று மாநகர சபையின் எதிர்க்கட்சித்தலைவரும், கட்சியின் அக்கரைப்பற்று அமைப்பாளருமான அஷ்ஷெய் எஸ். எல். எம். ஹனீபா (மதனி) குறிப்பிட்டார்.

முஸ்லிம் காங்கிரசும் அதன் தலமையும் சரியான வழியில் ஒற்றுமைப்பட்டு பணிசெய்யத்தவறி விட்டது. எனக்கூறி வேறு கட்சிகளை தொடங்கிய அதாவுள்ளாவும் அதே கோசத்துடன் இக்கட்சியைவிட்டு பிரிந்து சென்ற றிஷாட், ஹிஸ்புள்ளா போன்றவர்களும் அவர்களுக்குள்ளேயாவது ஒற்றுமையுடன் இருந்துகொள்ள முடியாதவர்களாக மாறிவிட்டார்கள். தேசிய முஸ்லிம் காங்கிரஸை ஒருவர் ஆரம்பித்தார் மற்றவர்கள் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸை ஆரம்பித்தனர். உண்மையாகவே இவர்கள் சமூக நலன் கருதி பிரிந்து சென்றிருந்தால் அவர்களுக்குள்ளேயாவது ஓர் ஒற்றுமையையும், இணக்கப்பாட்டையும் நிட்சயம் ஏற்படுத்தியிருப்பார்கள் ஆனால் அவர்களது எண்ணமும் நோக்கமும் அவ்வாறு இல்லை என்பதனால் அவர்களால் அதை செய்ய முடியவில்லை.'

'தேசிய முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் எனும் பெயர்களுடன் முஸ்லிம்களுக்காக கட்சி தொடங்கியதாக சொன்னவர்கள் 2009ஆம் ஆண்டு இந்த நாட்டின் பேரினவாதம் யுத்த வெற்றியின் காரணமாக உச்சத்தில் இருந்த போது ஆட்சியாளர்களின் ஆணையை சிரமேற்கொண்டு தங்களது கட்சியின் பெயர்களில் இருந்த முஸ்லிம் என்ற பதத்தை முற்று முழுதாக அகற்றிவிட்டார்கள். பின் தேசிய காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் கட்சி எனும் பெயர்களுடன் அவை செயற்படுகின்றன. தங்களுடைய கட்சியின் பெயரில் முஸ்லிம் என்ற அடையாளத்தைக்கூட தக்க வைத்துக்கொள்ள தைரியம் அற்றவர்களால் சமூகத்தின் நலன் கருதி நெஞ்சுரத்துடன் குரல்கொடுக்க முடியுமா? எனவும் கேள்வியெளுப்பினார்.'

2 comments:

  1. ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களுக்கு கொண்டாட்டம் தான். அதுவும் அரசியல்வாதிகளுக்கு அது கைவந்த் கலையாச்சே சார்......!!!!!

    ReplyDelete
  2. It seems you dont know what you speak. Are you trying to defend Rauf and SLMC?? All are same shits in difernt bottle dont waste your time instead you can do some religious services among Muslim communities.

    ReplyDelete

Powered by Blogger.