Header Ads



இது ஜனநாயக நாடு என்பதை நீங்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும் - அல்ஜஸீராக்கு மஹிந்த

(Nf) ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவனீதம் பிள்ளை இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்வதற்கு முன்னதாகவே தமது அறிக்கையை தயாரித்திருந்தார் என மக்கள் கருதுவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

ஐ.நா பொதுச் சபைக் கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக அமெரிக்காவின் நியூயோர்க் நகருக்கு சென்றுள்ள ஜனாதிபதி அல்ஜஸீரா தொலைக்காட்சிக்கு வழங்கிய விசேட செவ்வியில் இதனைக் கூறியுள்ளார்.

ஜனாதிபதி:-

இலங்கைக்கு வருவதற்கு முன்பே அவர் அந்த அறிக்கையை தயாரித்துள்ளதாக இலங்கை மக்கள் கருதுகின்றனர். அதை அவருக்கு சொன்னேன் அவர் என்னை சந்தித்த போது அவர் எனக்கு எந்த முறைப்பாட்டையும் முன்வைக்கவில்லை.

இலங்கையில் தாம் பல்வேறு தரப்பினரால் விமர்சிக்கப்பட்டதாக நவனீதம்பிள்ளை முன்வைத்துள்ள குற்றச்சாட்டு தொடர்பில் அல்ஜசீரா ஊடகவியலாளர் ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்பினார்.

ஊடகவியலாளர்:-

அவருடைய விஜயத்தின் போது அவரைக் கவனித்த விதம் குறித்தும் அவர் ஐக்கிய நாடுகள சபை புலி என்றும் அரசாங்கத்தின் சில அமைச்சர்கள் குறிப்பிட்டதாக அவர் குற்றம் சுமத்துகின்றார். உங்களுடை சகோதரர் ஒருவர் உட்பட உங்களது அமைச்சர்கள் அவரை விமர்சித்ததாக அவர் குற்றம் சுமத்துகின்றார்.

ஜனாதிபதி:-

இது ஜனநாயக நாடு என்பதை நீங்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும். அவர்களுக்கு தேவையான விடயங்களை தெரிவிக்க முடியும். எமது அமைச்சரவையில 58 அமைச்சர்கள் இருக்கின்றனர்.  அமைச்சரவையில் சிங்கள தமிழ் முஸ்லிம் உறுப்பினர்கள் இருக்கின்றனர். அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுகின்றனர். அவர்களை நிர்வகிக்க வேண்டும். அவர்களின் அரசியல் நிலைப்பாடு அவர்களிடத்தில் இருக்கும். பல விடயங்கள் குறித்து அவர்களிடம் பல கருத்துக்கள் இருக்கும். அதை அவர்கள் தெரிவிக்கின்றனர்.


2 comments:

  1. Yes the beauty of DEMOCRASY,,, leaving BBS TUGS to act on the RELIGIOUS places of Minority..? THE are never even questioned even though enough evidence available.. This is because of DEMOCRASY.. they can act as they want ?

    ReplyDelete
  2. Mr. Presdient the international community knows what is going on in SL. No one can deny.

    ReplyDelete

Powered by Blogger.