முஸ்லிம் காங்கிரஸினை கடுமையாக விமர்சிக்கும் ஆஸாத் சாலி
மகிந்த ராஜபக்ஷ குடும்பம் ஆட்சி அதிகாரத்தி;ல் நிரந்தரமாகக் கால் பதிக்க முண்டுக் கொடுத்த முஸ்லிம் காங்கிரஸ் தற்போது தனித்துப் போட்டியிட முன்வந்து மக்கள் மத்தியில் போலிக் கண்ணீர் வடிக்கின்றது என்று கூறினார் கண்டி மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி பட்டியலில் போட்டியிடும் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி.
கண்டி மாவட்டத்தில் தொடர்ச்சியாக பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்று வரும் அஸாத் சாலி அங்கு கூடும் மக்கள் வெள்ளத்தின் மத்தியில் பேசும் போது இந்தக் கருத்துக்களை முன்வைத்தார்.
சிறுபான்மையினருக்கான அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கக் கூடிய இலங்கை அரசின் 13வது திருத்தச் சட்டம் குறித்து இலங்கையில் மட்டுமன்றி சர்வதேச மட்டத்திலும் கூட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வந்த நிலையில் தான் மகிந்த ராஜபக்ஷ அரசு இலங்கை மக்களுக்கு எந்தத் தேவையும் அற்ற ஆனால் தனது குடும்பத்துக்கு நன்மைகள் பலவற்றை அளிக்கக் கூடிய 18வது திருத்தச் சட்டத்தை அறிமுகம் செய்தது.
இந்த 18வது திருத்தத்தின் மூலம் மகிந்த ராஜபக்ஷ எத்தனை தடவை வேண்டுமானாலும் ஜனாதிபதியாக வரலாம் என்ற நிலை உருவாக்கப்பட்டது. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் நினைத்திருந்தால் பாராளுமன்றத்தில்; இந்த சட்ட மூலம் அங்கீகாரத்துக்கு வந்த போது அதை தடுத்து நிறுத்தி மகிந்த ராஜபக்ஷவின் பதவி மோகத்துக்கு கடிவாளம் இட்டிருக்கலாம்.ஆனால் அதை செய்ய அவர்கள் தவறி விட்டார்கள். இந்த அரசு சிறுபான்மையினங்களுக்கு விரோதமானது என்பது அந்த நேரமே அவர்களுக்கு தெரியும்.அப்படி தெரிந்திருந்தும் கூட தமது சுய விருப்பங்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்து முஸ்லிம் காங்கிரஸ் தலைமை செயற்பட்டதால் வழமை போல் மீண்டும் ஒரு தடவை சமூகத்துக்கு துரோகம் இழைத்து 18வது திருத்தச் சட்டம் நிறைவேற வழிவிட்டது.
இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஜே.ஆர் மற்றும் சந்திரிக்கா போன்றவர்கள் கூட தமது பதவிக் காலத்தை நீடிக்க எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை. ஆனால் மகிந்த ராஜபக்ஷ அதை துணிச்சலாக மேற்கொண்டார். அதற்கு வலிந்து துணைபோன முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் இன்று மக்கள் மத்தியல் நாங்கள் தெரியாமல் ஒரு பாவத்தை செய்து விட்டோம். அதை சமூகம் மன்னிக்க வேண்டும் என்கிறார்.
இதன் மூலம் தலைமத்துவத்துக்கு தேவையான தூரநோக்கு தன்னிடம் இல்லை என்பதை அவரே ஒப்புக் கொள்கிறார். சாதாரண தொண்டர்கள் செய்த குற்றத்தை மன்னிக்க தலைவர் தயாராக இல்லாத நிலையில் ஒரு பெறுப்புள்ள அமைச்சராக இருந்து கொண்டு அவர் செய்த தவறை மட்டும் சமூகம் மன்னிக்க வேண்டும் என்று எப்படி அவர் எதிர் பார்க்கலாம்?
கட்சியின் செயலாளரோ இன்னொரு புறத்தில் 18வது திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு நான் வற்புறுத்தப்பட்டேன் என்கிறார். அப்படியாயின் இவரை வற்புறுத்தியவர்கள் யார்? கட்சிக்கு உள்ளே உள்ளவர்களா? அல்லது வெளியில் உள்ளவர்களா? மேலும் எதைக் கொண்டு இவர் வற்புறுத்தப்பட்டார்? அவர் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இருந்து கொண்டு இப்படி கூறலாமா?
கிழக்கு மாகாண சபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து ஆட்சி அமைக்க தவறியமை, திவிநெகும சட்டமூலத்துக்கு ஆதரவளித்தமை, 18வது திருத்தச் சட்டத்துக்கு துணை போனமை, முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டபோது பேசாமல் வாய்மூடி மௌனம் காத்தமை என்பன முஸ்லிம் காங்கிரஸ் இந்த நாட்டின் முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல சிறுபான்மை சமூகததுக்கும்; செய்துள்ள மாபெரும் வரலாற்றுத் துரோகமாகும். இவை மன்னிக்க முடியாத குற்றங்களாகும். இதற்கு மக்கள் கொடுக்க கூடிய ஒரேயொரு சரியான தண்டனை இம்மாதம் 21ம் திகதி நடைபெறவுள்ள மூன்று மாகாண சபை தேர்தல்களிலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை ஒட்டு மொத்தமாக நிராகரித்து அந்த கட்சியை மண் கவ்வச் செய்வதேயாகும்
பல விடயங்கள் உண்மையானதும் ஆதரிக்கக்கூடியதுமே. முஸ்லிம்களின் கெதி என்ன தலைமைத்துவம் இல்லாமல் முஸ்லிம்கள் இன்று இறைவன் உதவியுடன் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். நம்பிக்கை வைத்து வாக்கிட்டு வெற்றிபெற்ற எல்லாத்தலைவர்களும் தமது உள்னோக்கை நிறைவேற்றுவதில்தான் குறியாக இருக்கின்றார்கள். இலங்கையின் முஸ்லிம் தலைவர்களை எண்ணும்போது மனவேதனையாக இருக்கு யாரையும் நம்ப மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றது.
ReplyDeletemuslim galin perathenithe anru sollikollum muslim congress grand pass vedayathil anna saithathu namku puthiya palliyai vettu kodutharhal ippo palaya pallivasalil tholuvathuku thadai
ReplyDeleteallah ven malihai anbazal thano enda podu poku thanam
insha allah namaku anru oru thalivan varuvan ameen
சரி நல்ல செய்திதான் ஆனாலும் உங்களிலும் பிரச்சினையுள்ளது, அவர்கள் அரசாங்கத்துக்கு வக்காலத்து வாங்குவது உண்மைதான், நீங்களும் குரங்கு மாதிரி அந்த கட்சியிளிருந்து, இந்த கட்சிக்கும், இந்த கட்சியிலிருந்து அந்த கட்சிக்கும் மாறி மாறி திரியாமல் இருங்கள், வாக்காளர்களாகிய நாம் மேலும் கீழும் முழிக்க வேண்டியல்லவா இருக்கிறது. ஏற்கனவே SLMC யிடம் பிரச்சினை என்று கூறிய நீங்கள் கி.மா. தேர்தலில் அவர்களிடம் போய் ஒட்டிக்கொண்டு, இப்போ அந்தப் பழம் புளிக்கும் என்கிறீர்கள், நாளை UNP புளிக்குமோ தெரியாது.
ReplyDeleteAsath is not a monkey. But, he is a Kurangkan.....
ReplyDeleteAnru SLMC il thorra pin SLMC pullikkuthu.....
after 21st Sep.... definitely UNP will be sour for this stupid guy...
Every each Muslim must think well of him why he is blaming only SLMC and not for Fowzi uncle......
Today, Fowzi uncle is one of the leading uncle sham of Mahinda...
But Asath never blame him coz all these burgers are dividing muslims.... not Muslim's success.....
MR. IMTHIAZ, THIS IS CALLED POLICY-MAKING "POLITICAL".
ReplyDelete