புத்தளத்தில் முஸ்லிம்களை சந்தித்த தமிழ் தேசிய கூட்டமைப்பு (படங்கள்)
நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் தலைமையிலான அரசியல் கூட்டமைப்பு புத்தளத்தில் ஏற்பாடு செய்திருந்த முஸ்லிம் மக்களுடனான சந்திப்பு நேற்று மாலை புத்தளம், தில்லையடி அம்மார் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வு நீதிக்கும் சமாதானத்திற்குமான அமைப்பின் தலைவரும் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் தலைமையிலான அரசியல் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளருமான அஷ்ஷெய்க் நஜா முகம்மத் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் த.தே.கூ.பின் தலைவர் இரா.சம்பந்தன் (பா.உ), அதன் பொதுச்செயலாளர் மாவை சேனாதிராஜா (பா.உ), சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் (பா.உ), செல்வம் அடைக்கலநாதன் (பா.உ), நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறாசபை அமீர் அஷ்ஷெய்க் எம்.பி.எம். பிர்தௌஸ் (நளீமி), தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வட மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் முஸ்லிம் வேட்பாளர் அஷ்ஷெய்க் அய்யூப் அஸ்மின் மற்றும் புத்தளம் பிரதேச பள்ளிவாயல் தலைவர்கள், உலமாக்கள், கல்வி மான்கள் உட்பட பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது த.தே.கூ. பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் அமீர், ஆகியோரின் உரைகள் இடம்பெற்றதுடன் வேட்பாளர் அஷ்ஷெய்க் அய்யூப் அஸ்மின் அவர்கள் உரையாற்றியதுடன் பொதுமக்கள் முன்னிலையில் உறுதிமொழியும் எடுத்துக்கொண்டார்.
Post a Comment