இந்திய அரசால் மட்டக்களப்பு முஸ்லிம்களுக்கு அநீதி - எம்.எஸ்.சுபைர்
(ஏறாவூர் பயாஸ்)
மட்டக்களப்பு மாவட்ட ஏறாவூர் பற்று பிரதேசத்தில் அமைந்துள்ள றூகம் கிராமத்துக்கு சகல அடிப்படைத்தேவைகளையும் இனம் கண்டு தனது கிழக்கு மாகாணசபை சுகாதார அமைச்சு காலப்பகுதியில் செய்துமுடித்த தற்போதைய கிழக்கு மாகாணசபை பிரதித் தவிசாளரான எம்.எஸ்.சுபைர், 26-09-2013 றூகம் கிராமத்தில் இவரால் அமைக்கப்பட்ட ஆயுர்வேத மத்திய மருந்தகத்தை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வுக்கு தற்போதைய சுகாதார அமைச்சர் எம்.ஐ .எம்.மன்சூர் பிரதம அதிதியாக கலந்து கொண்ட நிகழ்வில் உரையாற்றும் போது மேற்படி கருத்தை தெரிவித்தார்.
மேலும் அவர் உரையாற்றுகையில்,
வடமாகாணசபையில் எங்களது கட்சி ஐக்கிய சுதந்திர முன்னணி சார்பாக போட்டியிட்டு கிடைத்த ஏழு ஆசனங்களில் மூன்று ஆசனங்களைப் பெற்றுள்ளதால் எதிர்க்கட்சியாக இருந்து கொண்டு சபையின் நல்ல திட்டங்களுக்கு ஆதரவு வழங்குவதோடு,வடமாகாணத்தில் மீள்குடியேற்றப்படவுள்ள முஸ்லிம் மக்களின் விடயத்தில் இம்மாகாணசபையூடாக அழுத்தங்களைப் கொடுத்து ,தேசிய,சர்வதேச மட்டத்துக்கு இவர்களின் தேவைப்பாடுகளை முன்வைக்க எனது கட்சியும்,கட்சித் தலைமையும் தயாராக இருக்கிறது என்றும் கூறினார்.
அத்தோடு,மீள்குடியேறியுள்ள மட்டக்களப்பு மாவட்ட மூவின மக்களுக்குமாக இந்திய அரசால் வழங்கப்பட்ட வீடுகளில் எட்டு வீடுகள் மாத்திரம் முஸ்லிம் மக்களுக்கு வழங்கியிருப்பது இனரீதியாக முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகவே நான் கருதுகிறேன் என்றும்,இது விடயமாக மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் அரசியல் தலைமைகளுடன் நேரடியாக பேசி இருப்பதோடு,இந்திய தூதுவருக்கும் முறையிட்டு இருக்கிறேன் என்றும் தெரிவித்தார்.
Post a Comment