"பள்ளிவாசல்கள் உடைப்பதை பற்றி பேசுவதானால், சுன்னத் செய்துகொண்டு வாருங்கள்" அஸ்வர்
மனோ கணேசனின் பேஸ்புக்கிலிருந்து..!
<நேரடி தொலைகாட்சி நிகழ்ச்சியில் அஸ்வர் தெரிவித்த பொன்மொழி>
இத்தகைய ஒரு கருத்தை அஸ்வர் பேசியது பற்றிய உங்கள் கருத்து என்ன? குறிப்பாக எனது முகநூல் முஸ்லிம் நண்பர்களிடம் கேட்கின்றேன்.
நேற்று (26/09/13) ஹிரு தொலைகாட்சி விவாதம் முடிந்து வீடு வர இரவு ஒரு மணி ஆகிவிட்டது. விவாதத்தில் ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு முஸ்லிம் அன்பர், தம்புள்ளையிலிருந்து தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு அஸ்வரிடம் ஒரு கேள்வி கேட்டார். "இங்கே பள்ளி உடைக்கப்பட்ட போது நீங்கள், முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒன்றும் செய்யவில்லை. இப்போதும்கூட இங்கே உள்ள பெளத்த பிக்கு எங்கள் பள்ளியை அகற்றிக்கொண்டு வெளியேற எங்களுக்கு காலக்கெடு விதித்துள்ளார். நீங்கள் என்ன செய்ய போகின்றீர்கள்?" என்பதுவே அந்த முஸ்லிம் அன்பரின் கேள்வியின் சாரம்சம்.
இதற்கு பதிலாக அஸ்வர், இந்த பள்ளி பிரச்சினையை தங்கள் அரசாங்கம் முடிவுக்கு கொண்டு வந்துள்ளதாகவும், இப்போது அங்கு பிரச்சினை இல்லை என்றும், முஸ்லிம் மக்கள் தொடர்பாக அரசாங்கம் நியாயமாக நடந்து கொள்வதாகவும், சிலர் வெளியிலிருந்து மதவாதத்தை தூண்டி விடுவதாகவும் சொல்லிக்கொண்டே போனார்.
இந்த சந்தப்பத்தில் இடைமறித்த நான்,"அஸ்வர் கேள்வி கேட்டவர் தம்புள்ளையில் இருந்து கேட்டுள்ளார். அங்கு இன்னமும் பிரச்சினை முடிவுக்கு வரவில்லை என்கிறார். நீங்கள் ஒன்றும் இல்லை என்று சொல்கிறீர்கள். அவருக்கு நேரடியாக பதில் கூறுங்கள்" என்று சொன்னேன்.
உண்மை சுட்டதோ, தன்னிலை இழந்த அஸ்வர், கோபத்தில் என்னிடம்" நீங்கள் கோவிலை பற்றி பேசுங்கள். பள்ளியை பற்றி பேசாதீர்கள். இஸ்லாமிய பள்ளியை பற்றி பேசுவதானால் நீங்கள் -சுன்னத்- செய்துகொண்டு வாருங்கள். அதன்பிறகு பள்ளியை பற்றி பேசலாம்" என்று சொன்னார்.
இத்தகைய பண்பற்ற ஒரு கருத்தை பகிரங்க நேரடி தொலைக்காட்சி விவாதத்தின் போது சொன்ன அஸ்வருக்கு அதன்பிறகு நான் வட்டியும், அது போடும் குட்டியும், முதலுமாக கொடுத்து அனுப்பியது வேறு விடயம்.
ஆனால் இத்தகைய ஒரு கருத்தை அஸ்வர் பேசியது பற்றிய உங்கள் கருத்து என்ன? குறிப்பாக எனது முகநூல் முஸ்லிம் நண்பர்களிடம் கேட்கின்றேன்.
மனோ கணேசன்
MANO GANESAN AVARKALE! AVARAI NAANGKALE KANDU KOLVATHILLAI. ITHAI NEENGKAL KANDU KOLLAATHEERKAL VAYATHU PONA NERAM SOLVATHAI SOLLIKONDU POGADDUM ENRU VIDDU VIDDOM....
ReplyDeleteஅப்ப இவர் இந்தியாவில் பன்செல தாக்கப்பட்ட போது அதற்கு கண்டனம் தெரிவித்து பேசியது காவி உடை அணிந்து கொண்டு தானா?
ReplyDeleteஅஸ்வர் அவர்களின் இப்படியான செயற்பாடுகள் முழு இஸ்லாமியர்களுக்குமே ஏற்புடையதல்ல ஏன் நாகரிகமான மனித குலத்துக்கே ஏற்புடையதல்ல. மிகவும் வன்மையாக கண்டிக்குறோம்.
ReplyDeleteவேற்று மதத்தவர்கள் எத்தனையோ பேர் ( பெளத்த பிக்குமார், பெரும் அரசியல் வாதிகள், கல்விமான்கள், வெளிநாட்டு ராஜா தந்திரிகள்......) பள்ளிவாசல் உடைப்புக்காக கண்டனங்கள் தெரிவித்துள்ளார்கள். இவர்களுக்கெல்லாம் இவர் என்ன சொல்லப்போகிறார்.
திரு. மனோ கணேசன் அவர்களே, இவர்களைப் போன்ற சுயநல வாதிகளின் செயற்பாடுகளை நீங்கள் நன்றாக அறிந்தவர்கள் தான். கவலைப் படாதீர்கள் இந்த பதிவிலும் சரி, உங்கள் முக நூல் பதிவிலும் சரி அஸ்வர் அவர்கள் நன்றாக வாங்கிக் காட்டுவார்.
அவர் சுன்னத் மட்டும்தான் செய்திருக்கிறார் என்று நினைக்கிறோம், வேறு முஸ்லிம்களுக்குரிய எந்தப் பண்பும் இல்லை. உண்மை பேசுவது எவ்வளவு முக்கியமானது என்று அவருக்குத் தெரியவில்லை. வாலாட்டுவது எந்த விலங்கின் வேலை என்று எல்லோருக்கும் தெரியும். அதைவிட எவ்வளவு அழகாக ராஜதந்திர ரீதியில் இந்தப் பிரச்சினைகளை அணுக முடியும். முட்டாள்கள் எல்லோரையும் முட்டாள்கள் என நினைத்துக் கொள்கின்றன.
ReplyDeleteஇஸ்லாம் மற்ற மதத்தவர்களையும் மதிக்க சொல்கிறது . நபி முஹம்மது (ஸல்) அவர்கள் அன்று ஜனாதிபதியாக இருந்து எப்படி நல்லாட்சி நடத்தினார்கள் பிற மதத்தவர்களிடம் எப்படி நடந்தார்கள் என்பதை அஸ்வருககு சொல்லி கொடுக்க வேண்டும் . அஸ்வருககு இஸ்லாமிய அறிவு = 0
ReplyDelete