கையில் நெய்யை வைத்துக் கொண்டு வெண்ணெய்க்கு அலைகிறோமா..?
(M.S.M.பாயிஸ் - சவூதி அரேபியா)
எம்மை சூழவுள்ள கடல் வளத்தை நாம் சரியாக பயன்படுத்தினாலே போதும் நமது நாடு மீன்பிடித்துறையில் தன்னிறைவு கண்டுவிடும். நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்ட இலங்கையர்களான நாம் பொதி செய்யப்பட்ட மீனை வகைகளை இறக்குமதி செய்கிறோம் என்பது வேடிக்கையான விடயம். நமது கடலுக்கு அண்டிய சர்வதேச கடற்பரப்பில் தாய்லாந்து,சிலி போன்ற நாடுகளின் கப்பல்கள் நங்கூரமிட்டு மீன் பிடித்து கப்பலிலேயே வைத்து பொதி செய்து எமது நாட்டுக்கு ஏற்றுமதி செய்கின்றன, கடலே இல்லாத நாடுகளில் விற்கும் மீனின் விலைகளை விட நமது நாட்டில் மீனின் விலை அதிகமாக காணப்படுகிறது.
யுத்த தளபாடங்களை கோடிக்கணக்கில் செலவு செய்து வாங்குகிறோம், நவீன கடற்றொழில் சாதனங்களை ஏன் நாம் வாங்குவது இல்லை.
நமது சொந்த மக்களோடு போர் செய்வதற்கு வெளிநாட்டு ராணுவ உதவிகளை கேட்டுப் பெற முடியுமாக இருந்தால் அதே மக்களின் வாழ்வாதார பிரச்சினைகளை சீர் செய்ய ஏன் எம்மால் வெளிநாட்டின் உதவிகளை கேட்டுப் பெற முடியாது?
இதுபற்றி எந்த அரசியல் வாதியும் பேசுவதாக தெரியவில்லை. தங்களின் வாழ்க்கை வசதிகளை முன்னேற்ற பாடுபடும் அதிகாரம் படைத்தவர்கள் மீனவர்களின் வாழ்க்கை வசதிகளை உயர்த்த முன்வருவதில்லை.
எமது இளைஞர்களுக்கு ஆழ்கடலில் மீன்பிடிக்கும் பயிற்சிகளையோ நீச்சல் பயிற்சிகளையோ அரசாங்கம் உரிய முறைகளில் வழங்குவதில்லை, அதில் தேர்ச்சி உள்ளவர்களைக் கூட அரசாங்கம் உரிய முறையில் கவனிப்பதுமில்லை, அவர்களுக்குரிய வசதிகளை செய்து கொடுப்பதுமில்லை. இதனால் பலர் வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு பெற்று சென்று விட்டனர். நம் நாட்டு பயிற்சியாளர்களை வைத்து வெளிநாடுகள் தங்கள் கடற்றொழிலை வளப்படுத்தி வருகின்றன.
வெளிநாடுகளுக்கு நம் மனித வளத்தை ஏற்றுமதி செய்வது பற்றி சிந்திக்கும் அரசாங்கம் நமது கடல் வளத்தை முறையாக பயன்படுத்தும் வகையில் இளைனர்களுக்கு கடற்றொழில் பயிற்சிகளை இலவசமாக வழங்கினால் நமது நாடு பாரிய வளர்ச்சியை அடையும் என்பதில் சந்தேகமில்லை.
இன்று மாடுகளை அறுக்கக் கூடாது என போர்க்கொடி தூக்கும் இனவாதிகள் இந்த மீன்பிடித் தொழிலை ஊக்குவிப்பது பற்றியாவது சிந்திக்கலாமல்லவா?

இந்த இனவாதிகள் சீனாவுக்கு எல்லாம் தமிழனின் கடல் வளம் தானே என கடல்வளத்தை விற்று விட்டனர். இந்த இனவாதிகளுக்கு எதிராக ஐ.நா நடவடிக்க எடுக்க முனைந்தபோது நம்மட கூட்டம் குல்லாவுடன் கொழும்பில் இனவாதிகளுக்கு ஆதரவாக கோசம் எழுப்பியது தெரியாதா? இப்போ வந்து ஏதோ எக்கொனமிக்ஸ் புரெபெசர் போல கதை எல்லாம் விடுகிறார் கட்டுரையாளர்
ReplyDeleteநல்ல செய்தி, இதனை விட பல மடங்கு அரசியல் வாதிகளுக்கும் தெறியும் ஆனால் நமக்கேன் வீன் வம்பு வேளை என ஒவ்வொருவரும் நினைக்கிறார்கள். நாட்டில் அக்கறை இருந்தால்,................இனி எதுவுமே சொல்ல தேவை இல்லை, வெரும் பௌதீக அபிவிருத்திகளை செய்து நாட்டை சிங்கப்பூராக மாற்றத்தேவை இல்லை(வட மாகாண தேர்தலில் திரு டக்லஸ் சொன்னார்). இது எதைபோலென்றால்,ஆடம்பரமான அழகான அனைத்து வசதிகளையும் கொண்ட ஒரு வீட்டை கட்டிக்கொண்டு சாப்பிட வசதி இல்லாமல் பட்டினி கிடத்தலுக்கு சமம். நாட்டை பொருளாதாரத்தில் அபிவிருத்தி செய்வதே முதல் அபிவிருத்தி, பின்னால் எல்லாமே தேவை கருதி தானாக அப்பப்போ பௌதீக வளங்களும் அபிவிருத்தி அடையும்.
ReplyDeleteநாட்டின் அபிவிருத்திக்கு சிறந்த அரசியல் வாதிகளை தேர்வு செய்யும் ஒரு புதிய முறையும் அமுழ்ப்படுத்தப்பட வேண்டும், அதில் ஒழுக்கமுள்ள சிறந்த மத நம்பிக்கையுள்ள, ஊழல் களவு பொய், ஏமாற்றம் இப்படி பல விடயங்களை கருத்தில்கொண்டு நல்லவரை வடித்தெடுக்கும் முறையே வேண்டும்.
எவர் தேர்தலில் வெற்றி பெற்றாலும் உத்தியோகபூர்வமாக அவர் சத்தியப்பிரமாணம் செய்து தன் கடமைகளை பொறுப்பேற்பதற்கு முன்னால், வென்றவர் அவரது தேர்தல் தொகுதியில்/பிரதேசத்தில்,/மாவட்டதில் மேடை அமைத்து தனக்கு வாக்களித்த அப்பாவி பொது மக்களுக்கு முன்னால் அவரது மத வேத நூழிலைக்கொண்டு சத்தியப்பிரமாணம் எடுக்க வேண்டும், அதில் நான் களவு செய்ய மாட்டேன், பொய் சொல்ல மாட்டேன், இப்படி அனைத்தையும் குறிப்பிட்டு சத்தியம் செய்தல் வேண்டும்.
அரச சொத்தில், பொது மக்களின் சொத்தில் களவு மோசடி செய்யாத அரசியல் வாதிகள் எவருமில்லை என்றே இக்காலத்தில் சொல்லலாம். ஏனெனில், அனைவருக்கும் தலைவர் பதவி வேண்டும் என்றே இழுபறியும் சண்டைகளும் ஒற்றுமை இன்மைகளும் அவர்களுக்குள்ளே ஒரு பெறும் இலாபம் இந்த அரசியலில் உண்டு என்பதை மேலும் வலுவடைய செய்கிறது.