மனித உரிமை மீறல்களை முதலில் சர்வதேசத்திற்கு முறையிட்டது மஹிந்ததான் - மங்கள சமரவீர
இலங்கையில் மனித உரிமை மீறல் நடவடிக்கைகள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமென கோரி அது குறித்து ஆவணங்களை ஜெனீவாவுக்கு எடுத்துச் சென்று மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முதலில் முறையிட்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதனை இன்று மீறிச் செயற்படுகின்றார் என பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
இலங்கையின் மனித உரிமை நடவடிக்கைகள் குறித்து சர்வதேச விசாரணை அவசியம் என முதலில் எடுத்துக் கூறிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே அதனை இன்று மீறியுள்ளார் என்ற தலைப்பில் அவர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது; இந்நாட்டில் மனித உரிமையை பாதுகாப்பதற்காக யார் முன்வந்தாலும் அவர்களோடு இணைந்து செயற்படுவதற்கு தான் தயார் என கடந்த 1990 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் அவர் தெரிவித்தார்.
எனினும் அன்று ஆட்சியிலிருந்த ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் அவருக்குத் தேசத்துரோகி என்ற பட்டத்தை வழங்குவதற்கு ஊடகங்கள் மூலம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் அது குறித்த விசாரணைகளை மனித உரிமைகள் ஆணைக்குழு இலங்கையில் மேற்கொள்வதற்கு சந்தர்ப்பம் வழங்கியது ஜே.ஆர். ெஜயவர்த்தன, ஆர். பிரேமதாஸ, டி.பீ.விஜேதுங்க மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரது ஆட்சிக்காலத்தில் இவ்வாறானதொரு சிறந்த ஆட்சி முறையே நடைபெற்றது.
இந்நாட்டின் உண்மை நிலை குறித்து அறிந்து கொள்வதற்காக சர்வதேசங்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டதுடன் மனித உரிமைகள் தொடர்பாக மஹிந்த ராஜபக்ஷ உட்பட்ட பிரமுகர்கள் ஐக்கிய நாடுகள் அமைப்புக்கு முன்வைத்து முறைப்பாடு குறித்து தெரிந்து கொள்வதற்கான சந்தர்ப்பமும் வழங்கப்பட்டது.
இந்நிலையில் இலங்கையின் நடவடிக்கைகள் குறித்த விசாரணைக்கு வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் அமைப்புக்களுக்கு 2005 ஆம் ஆண்டிலேயே தடை விதிக்கப்பட்டது.
இலங்கையில் மனித உரிமை குறித்து சர்வதேச விசாரணை அவசியம் என்று ஐக்கிய நாடுகள் சபையிடம் முதலில் முறைப்பாடு செய்த மஹிந்த ராஜபக் ஷ 2005 ஆம் ஆண்டு அதற்கான தடையை விதித்தவராவார்.
2009ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவைச் சந்தித்து இலங்கையின் மனித உரிமையைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்ததுடன் அது குறித்து அறிக்கையொன்றை சமர்ப்பிப்பதாகவும் கூறியது.
இதற்கிணங்க கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைத்து அவர்களின் சிபாரிசுக்கு ஏற்ப நடைமுறைப்படுத்துவதாகவும் உறுதி அளித்தது. அதேவேளை ஐ. நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கு இலங்கைக்கு வருகை தருமாறும் அழைப்பு விடுத்தது.
மேற்படி நடவடிக்கையை ஏற்பாடு செய்த அரசாங்கம் இன்று ஐ. நாடுகள் மனித உரிமை ஆணைக்குழு மற்றும் ஆணையாளர் நவநீதம்பிள்ளை ஆகியோர் மீது குற்றஞ்சாட்டி அதில் இருந்து தப்பித்துக் கொள்ள முயற்சிக்கின்றது.
இவ்வாறான கீழ்த்தரமான செயற்பாடுகள் காரணமாக இந்நாட்டில் எழுந்துள்ள பிரச்சினைகளை தீர்க்க முடியாது. மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் இன்று சர்வதேசத்தின் அபகீர்த்தியை சம்பாதித்துள்ளது.
ஆகவே இந்நிலையிலிருந்து நாட்டையும் மக்களையும் பாதுகாத்துக் கொள்ளும் முதல் நடவடிக்கையாக 17 ஆவது அரசியலமைப்பு சட்டத்தினை மீண்டும் ஏற்படுத்துவதற்கு ஐ. தே. கட்சியினர் கொண்டு வரப்படவுள்ள அரசியலமைப்புத் திருத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து சுதந்திரமானதும் நேர்மையானதுமான சமூகம் ஒன்றை உருவாக்குவதற்கு அனைவரும் ஒன்றுபட வேண்டும்.
17வது அரசியலமைப்புச் சட்டத்தை மீண்டும் ஏற்படுத்துவது மிகவும் முக்கியமாகும். 17 ஆவது அரசியல் அமைப்புச் சட்டத்தை வளப்படுத்துவதற்கு அரசு எதிர்ப்புத் தெரிவிக்குமாயின் அதனூடாக ஏற்பட போவது நவநீதம்பிள்ளை கூறிய இலங்கை ஏதேச்சதிகாரப் போக்கில் செல்கின்றது என்பதை அரசாங்கமே நிருபீப்பதாகவே அமைந்து விடும் எனவும் கூறினார்.

Post a Comment