Header Ads



பிரான்ஸ் நாட்டில் பனிமலையில் புதைந்து ரத்தினங்கள்

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த மலை ஏறும் நிபுணர் ஆல்ப்ஸ் மலையின் மான்ட் பிளாங்க் சிகரத்தில் ஏறினார். மூடிக் கிடந்த பனிக்குள் தட்டு தடுமாறி நடந்த போது உலோகத்தினால் ஆன ஒரு பெட்டி அவரது காலில் தென்பட்டது. அதை திறந்து பார்த்தபோது உள்ளே கண்ணை பறிக்கும் மரகதம், பச்சை, சிவப்புக்கல் மற்றும் நீலக் கற்களால் ஆன நகைகளும், 100 ரத்தின கற்களும் இருந்தன.

இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை என நகைகளில் பொறிக்கப்பட்டிருந்தது. எனவே, இவை இந்தியருக்கு சொந்தமானது என தெரிய வந்துள்ளது. நகை பெட்டியை எடுத்த மலை ஏறும் நிபுணர் அதை பிரான்ஸ் போலீசிடம் ஒப்படைத்துள்ளார். அதன் மதிப்பு இந்திய ரூ.200 கோடி.

கடந்த 1966–ம் ஆண்டு ஜனவரி 24–ந்தேதி மும்பையில் இருந்து லண்டன் சென்ற இந்திய விமானம் விபத்துக்குள்ளாகி பிரான்ஸ் நாட்டில் உள்ள ஆல்ப்ஸ் பனிமலையின் மான்ட் பிளாங்க் சிகரத்தில் விழுந்தது. அதில் 117 பேர் பலியாகினர். எனவே இந்த விபத்தில் இறந்தவர்களில் ஒருவருக்கு இந்த ரத்தின கற்கள் சொந்தமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

ஆகவே, பிரான்ஸ் அரசு இந்த விவரத்தை இந்தியாவிடம் தெரிவித்துள்ளது. அதை தொடர்ந்து பனிமலையில் புதைந்து கிடந்த ரத்தினங்கள் யாருக்கு சொந்தம் என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

No comments

Powered by Blogger.