Header Ads



முஸ்லிம் காங்கிரஸிக்கு வாக்களிக்க வேண்டியதன் அவசியம்

தற்போது நாம் எதிர்கொண்டுள்ள மூன்று மாகாண சபைத் தேர்தல்களின் மூலம் சர்வதேச மட்டத்திலும், தேசிய மட்டத்திலும், மாவட்ட மட்டத்திலுமாக தெளிவான செய்திகளை முஸ்லிம்களாகிய நாம் சொல்ல வேண்டியிருக்கின்றது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இத்தேர்தல்களை அந்த அடிப்படையில்தான் எதிர்கொள்கின்றது.

இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய எம்.ரீ. ஹஸன் அலி குருணாகல் பரகஹதெனியவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாடும் போது கூறினார். அவர் மேலும் கூறியதாவது: 

கிழக்கு மாகாணத்துக்கு வெளியில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் முக்கியமான மாவட்டங்கில் இத் தேர்தல்களை நாம் எதிர் கொண்டுள்ளோம். சுதந்திரம் கிடைத்ததற்குப் பின்புள்ள காலங்களில் இனவாதம், மதவாதம் என்பன மிகவும் மோசமாக துருவமயப்படுத்தப்பட்டுள்ள இன்றைய காலத்தில் நடைபெறும் இத் தேர்தலில் முஸ்லிம்களின் அதிருப்தி நிலமை வெளிப்படப் போகின்றது. முஸ்லிம்களின் சுய நிர்ணய, சுய கௌரவ உரிமைகள் மறுக்கப்பட்டு இந்நாட்டின் அரசியல் யாப்பில் உறுதிப்படுத்தப்பட்ட உரிமைகள் கூட கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ளன என்ற செய்தி இத் தேர்தல் மூலம் சர்வதேச சமூகத்துக்குச் சென்றடைய வேண்டும். 

கடந்த இரண்டு வருடங்களாக எமது மதகலாச்சார விடயங்களுக்கெதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள ஒரு சில பெரும்தேசிய கடும் போக்குவாதிகளின் எதேச்சாதிகாரப் போக்கு எவ்வித கேள்விக்குட்படுத்தபடாமல் இந்நாட்டின் சட்ட ஒழுங்குகள் என்பவற்றிற்கப்பால் தொடர்கின்ற சூழலில் இந்நாட்டு முஸ்லிம்கள் அதிருப்தியுடனும் வேதனையுடனும் இருக்கின்றார்கள் என்ற செய்தி இரண்டாம் கட்டமாக தேசிய மட்டத்துக்குச் சென்றடைய வேண்டும்.  

முஸ்லிம்களின் பரம வைரிகளாகக் கருதப்படுகின்ற எகூதிகளால் கூட எமது பள்ளிவாசலில் பன்றி இறைச்சி எச்சங்கள் தூவப்படவில்லை. ஆனால் நமது மண்ணில் அவ்வாறான சம்பவம் நடைபெற்றுள்ளது. எவ்விதமான கண்டனங்களையும் அந்த சம்பவம் சந்திக்காத மனவேதனையை இந்நாட்டு முஸ்லிம்கள் கொண்டுள்ளனர். இவ்வாறான சம்பவங்களினாலும், அச்சம்பவங்கள் கண்டிக்கப்படாததாலும், அச்சம்பவங்களுக்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்படாமலும் உள்ளதால் நாம் மிகவும் அதிருப்தியடைந்துள்ளோம் என்ற செய்தி தேசிய மட்டத்தில் தெளிவாக சொல்லப்படவேண்டும். 

இந்த சம்பவங்களை எதிர் தரப்பிலுள்ள பல பெரும்பான்மைக்கட்சிகள் கண்டித்திருந்தன. ஆனால் அந்தக் கண்டனமெல்லாம் உணர்வு பூர்வமானதாகவன்றி அரசியல் ரீதியாகத் தான் காணப்பட்டன. என்றாலும் அவர்களுக்கு நாம் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம்.  உணர்வு பூர்வமான கண்டன வெளிப்பாடுகளை முஸ்லிம் காங்கிரஸின் மரச்சின்னத்துக்கு இடும புள்ளடிகள் மூலமாகத்தான் தெளிவாக்க முடியும். பெரும்பான்மை தேசியக் கட்சிகளின் சின்னங்களுக்கு ஆதரவாக இடும் புள்ளடியகளால் இவ்வாறான செய்தியை உணர்வு பூர்வமாக ஒருபோதும் சொல்ல முடியாது.

நாம் சொல்ல வேண்டிய மூன்றாவது செய்தி மாவட்ட மட்டத்தில் சொல்ல வேண்டிய அந்த செய்தி மிகவும் முக்கியமானதுமாகும். 

தேர்தல் நடைபெறும் குருணாகலை மாவட்டத்தில் சொரியலாக சிறு சிறு கிராமங்களில் வசித்து வரும் நமது 110,000 முஸ்லிம் மக்களின் வாக்குகளும் சிதறடிக்கப்படாமல் ஒன்றுபட்டு விட்டது என்ற செய்தி வேறு மாவட்டங்களில் இவ்வாறு செறிந்து வாழும் முஸ்லிம்களுக்கு ஒரு முன்னுதாரணமாக சென்றடைய வேண்டும். 

அம்பாறை மாவட்டத்தில் உள்ள 124,000 முஸலிம் வாக்குகளில் அண்ணளவாக 65 & மான முஸ்லிம் வாக்குகள் ஒன்று திரண்டதால் 3 பாராளுமன்ற உறுப்பினர்களையும், நான்கு மாகாணசபை உறுப்பினர்களையும் 5 உள்ளுராட்சி மன்றங்களையும் நாம் அரசியல் பலமாகப் பெற்று நாட்டிலுள்ள சகல முஸ்லிம்களுக்கும் ஒரு நம்பிக்கைக்குரிய சக்தியாக பரிணமிக்கின்றோம். அம்பாறையிலுள்ள ஏறத்தாள ஒரே அளவான முஸ்லிம வாக்குகள் குறுநாகலை மாவட்டதிலுள்ளன. இவற்றில் ஒரு அறுபது வீதமான வாக்குகள் நமது தனித்துவ சின்னத்தின் கீழ் ஒற்றுமைப்பட முடியுமென்றால் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களையும் மூன்று மாகாண சபை உறுப்பினர்களையும் நாம் பெற்றுக் கொண்டு அரசியல் பலத்துடன் கௌரவமாக வாழ முடியும். 

தேசிய கட்சிகளுடன் ஒரு தனித்துவக் குழுவாக  கூட்டுச் சேர்ந்தாலும் எமது தனித்துவத்தை நாம் பேணிக்கொள்ள முடியும். இன்று நமது கட்சி அரசின் ஒரு பங்காளியாக இருந்த போதிலும் சென்ற கிழக்கு மாகாண தேர்தலிலும் இப்போது எதிர்கொள்ளும் தேர்தல்களிலும் தனியாகவே களமிறங்கியுள்ளோம். அரசாங்கத்துடன், 18வது திருத்தச் சட்டத்துக்கு வாக்களிக்குபோது எமது தலைமைத்துவத்துக்கு அளிக்கப்பட்ட சமூகம் சார்ந்த வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. அதனால்தான் நாம் கிழக்கு மாகாணத்தில் தனியாக களமிறங்கி 7 உறுப்பினர்களைப் பெற்று அந்த சபையை அமைக்கும் சக்தியாக உருப்பெற்றோம். அந்த சபையை  அமைப்பதற்கு உதவி வழங்குவதற்காக கிழக்கு மாகாண முஸ்லிம்களின் அரசியல், அந்தஸ்து சுய நிர்ணய உரிமை என்பன சம்பந்தமாக சில வாக்குறுதிகளை வழங்கினார்கள். ஆனால் அவற்றில் ஒன்று கூட இதுவரை நிறைவேற்றப்படவில்லை. ஒரு முஸ்லிமை முதன் முறையாக இந்நாட்டில் முதலமைச்சராக தெரிவு செய்தது எமது அரசியல் பேரம் பேசும் சக்தியினாலாகும். என்றாலும் எமது மண்ணில் எமது அரசியல் கௌரவம் இன்மை உறுதிப்படுத்தபடாத நிலையில் நாம் தொடர்ந்தும் தேர்தல்களில் எமது தனித்துவத்தைப் பேணியே வருகின்றோம். அதனால்தான் சிறுபான்மை சமூகங்களுக்கெதிராக கொண்டுவரப்படும் சட்டமூலங்களை நாம் எதிர்த்து வருகின்றோம்.

இதனை ஜீரணித்துக் கொள்ள முடியாத, புரிந்து கொள்ள முடியாத சிலர் எமது கட்சியைப்பிளவு படுத்துவதற்கான முயற்சியில் அவ்வப்போது ஈடுபட்டு வருகின்றனர்.  கட்சியின் தலைமைத்துவத்தினூடாகவும் கட்சியுறுப்பினர்களுக்கூடாகவும் மக்களுக்குச் சென்றடைய வேண்டிய வளங்களை சலுகைகளாக மாற்றி தனித்தனியாக உறுப்பினர்களுக்கான எலும்புத் துண்டுகளாக வீசியெறிந்து, பலவீனமான போலி விசுவாசத்துடன் கட்சியில் எதையாவது எதிர்பார்த்து கபடத்தனமாக காலம் தள்ளிக் கொண்டிருப்பவர்களை கவர்ந்திழுத்து அவர்களுடாக  கட்சியைப் பிளவு படுத்தும் ஒரு நாகரீகமற்ற கலாச்சாரம் இப்போது பேரினவாத அரசியலில் இழையோடிப் போயுள்ளது. இதனால்தான் முஸ்லிம் வாக்காளர்கள் மிகவும் அவதானமாக தங்கள் வாக்குகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.  

இந்தத் தேர்தலின் போதும் எமது கட்சியைச் சேர்ந்த உயர்பீட உறுப்பினர்கள் சிலர் இவ்வாறு சோரம் போயுள்ளனர். தொழில்வாய்ப்பு மற்றும் விசேட அபிவிருத்தி சலுகைகள் போன்ற வாக்குறுதிகள் இவர்களுக்கு தனிப்பட்ட ரீதியில் வழங்கப்படும் என்ற போலி வாக்குறுதிகளை நம்பி பலர் ஏமாந்துள்ளனர். 'முஸ்லிம் வாக்குகள்' என்ற கோட்பாட்டின் கீழ் தனித்துவமாக ஒற்றுமைப் படுவதென்பது மாற்று இனங்களுக்கெதிராக அணிதிரள்வது எனப் பொருள்படாது. மாற்று அரசியல் வாதிகள் வெறும் வாய்ப்பேச்சுகளால் மட்டும் வாக்குறுதிகளை வழங்கி நமது வாக்குகளால்; பலம் பெற்று பின்னர் நம்மை அந்நியப்படுத்துவதிலிருந்து நாம் நம்மைக் காப்பாற்றிக் கொள்வதற்கான ஒரே வழிதான் 'முஸ்லிம் வாக்குகள்' என்ற கோட்பாட்டின் கீழ் ஒற்றுமைப் படுவதாகும். 

நாம் ஒரு நடுநிலைச்சமூகமாக நம்மை அடையாளப் படுத்திக் கொண்டு பொறுமையுடன் தனித்துவததைப் பேணுவதுதான் இந்நாட்டில் இன்று நிலவும் இனங்களுக்கிடையில் வளர்ந்து வரும் துருவமயம் எனும் ஆபத்திலிருந்து தப்பிக் கொள்வதற்கான வழியாகும். 

இந்நாட்டில்  தற்போதைய அரசியல் கலாச்சாரம் மக்களை இனரீதியாகவும் மத ரீதியாகவும் கூறு போட்டுக் குழப்புவதாகத்தான் உள்ளது. எனவேதான் குருணாகலை மாவட்ட மக்கள் முஸ்லிம் வாக்குப் பலத்தை ஒன்று திரட்டித் தம்மை அரசியல் ரீதியான அடையாளத்தையும் சுய கௌரவத்தையும் நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும். 

இத்தேர்தலில் போட்டியிடும் மற்றுமொரு தேசியக் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி அவர்களுக்கு ஆதரவான முஸ்லிம்களுக்குள்ள மூன்று விருப்பு வாக்குகளையும் சிதறடித்து முஸ்லிம பிரதி நிதித்துவத்தை இல்லாமல் செய்வதற்காக வழக்கத்துக்கு மாறாக அதிகமான முஸ்லிம வேட்பாளர்களைக் களமிறக்கியுள்ளனர்.  இவ்வாறான சதிவலைகளிலிருந்து நமது பிரதிநிதித்துவங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்கு விகிதாசார தேர்தல் முறையில் சிறந்த வழி தனித்துவமாகக் களமிறங்கியுள்ள முஸ்லிம் காங்கிரஸ் சின்னத்துக்கு வாக்களிப்பதுதான். 

விகிதாசார தேர்தல் முறையில் மாவட்ட ரீதியாகப் பரந்து சொரியலாகக் கிடக்கும் முஸ்லிம் வாக்குகளை ஒன்றுத் திரட்டி ஒருமித்த பலத்தை முஸ்லிம்கள் மற்றும் சிறுபான்மை இனங்கள்; பலம் பெற்று விடுவார்கள் என்ற அச்சத்தினால் நம்மை ஒற்றுப்பட விடக் கூடாது என்று குழப்புவதற்காக  சில அரசியல் முகவர்களைப் பேரினவாதிகள் களமிறக்கியுள்ளார்கள். இவர்களுக்கு அளிக்கும் வாக்குகள் நமது உண்மையான அபிலாஷைகளைப் பிரதிபலிப்பதற்குப்பதிலாக பேரினவாத சிந்தனைகளை மெருகூட்டத்தான் பயன்படும். 

ஒரு தனி சமூகமாக நம்மை அடையாளப்படுத்தி நமது அபிலாஷைகளை நிறைவேற்றுவதென்பது பேரினவாத சித்தாந்ததுக்கு ஒருபோதும் ஒத்துவராது. அதனால்தான் நம்பைப் பிரித்தாளுவதற்கான முகவர்களை முடுக்கிவிடுவது அவர்களுக்கு இலகுவான ஒரு யுக்தியாகப் பயன்படுகின்றது. இவ்வாறான ஆபத்துக்களைப் புரிந்து கொண்டு நாம் செயல்பட்டால் மட்டுமே நமது எதிர்கால சந்ததியினரின் தனித்துவ நடுநிலைமை அடையாளத்தை இன்றைய கலப்பட அரசியல் சாக்கடையிலிருந்து காப்பாற்றிக் கொள்ள முடியும். 

அவ்வாறான ஒரு நிலைப்பாட்டினை எடுத்துத்தான் நமது முஸ்லிம் காங்கிரஸ் இப்போது அரசியலை நடத்திக் கொண்டு வருகின்றது. காட்டிக் கொடுப்புக்கள் கழுத்தறுப்புக்கள் ஏமாற்று வித்தைகள் எல்லாவற்றிலிருந்தும் தப்பிப் பிழைத்து நாம இப்போது அரசாங்கத்தின் பங்காளியாக இருந்த போதிலும் சிறுபான்மை சமூகத்துக்கெதிரான சட்ட மூலங்கள், சம்பவங்கள் எது வந்தாலும் தட்டிக் கேட்டு வருகின்றோம். நாங்கள் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்டு உறுப்பினர்களாக வெற்றியீட்டிருந்தால் இன்று இவ்வாறான ஒரு நடுநிலைமையையும் தனித்துவத்தையும் பேணியிருக்க முடியாது. 

அண்மையில் இலங்கை வந்திருந்த ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளையிடம் நமது கட்சி ஒரு பூரணமான அறிக்கையினை ஒப்படைத்த விடயம் இன்று சிங்கள கடும்போக்கு சிந்தனையாளர்களிடம் ஒரு விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் எதிர்பார்க்கிறார்கள். நாங்கள் எங்களுக்கு எது நடந்தாலும் வாய் மூடி மௌனியாக இருக்க வேண்டுமென்று, சில பத்திரிகையாளர்கள் அந்த அறிக்கையின் விபரங்களைப் பற்றிக் கேட்கின்றார்கள். எமது அறிக்கையில் முஸ்லிம் சமூகத்தின் அபிலாஷைகளைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளோம். எவருக்கும் எதிராக நாங்கள் குற்றப் பத்திரிக்கைகள் கையளிக்கவில்லை. எமது எண்ணக் கிடக்கைகளை வெளிப்படுத்தியுள்ளோம். 

எனவேதான் மாவட்ட மட்டத்திலுள்ள முஸ்லிம்கள் பேரினவாத அரசியல் கட்சிகளின் பிடியிலிருந்து விடுபட்டு நடுநிலைச்சமூதாயத்தின் அரசியலுக்குள் தங்களை இணைததுக் கொள்ள வேண்டும். அதனால் நாம் பிரிவினைவாதிகளல்ல. நடுநிலை சமூதாயம் என அடையாளம் படுத்தப்பட்ட  முஸ்லிம் காங்கிரஸ் அரசியலுக்குள் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும். நாம் என்றும் பிரிவினை வாதிகள் அல்ல. நடுநிலை சமூகமாக ஒரே குரலில் இந்நாட்டு பிரிவினைக்கு எதிராகவும் இந்நாட்டில் சமூக நல்லுறவுகள் வளர்ந்தோங்கவும் நமது அரசியல் பலத்தை வெளிப்படுத்துவோம். அதற்கான செய்திகளையும் சமிக்ஞைகளையும் சர்வதே, தேசிய மாவட்ட மட்டங்களுக்கு இத்தேர்தல் முடிவுகள் மூலம் வெளிப்படுத்துவோம். 

13 comments:

  1. உன்கலுடய்ய அரசியல் கிலக்கில் மட்டும் இருக்கட்டும். நாட்டில் முச்லிம்கலுகு எதிராக துவெசம் வலர்வதட்கு இந்த முச்லிம் கட்ச்சிகல் தான் காரனம். முச்லிம் கொங்ரச் என்ர பெயரய் ஈச்டெர்ன் கொங்ரச் என்ரு மாட்ரினால் நல்லம்

    ReplyDelete
  2. EVERY MUSLIM OF THIS COUNTRY MUST KNOW THE ROUT CAUSE OF THE ABOVE STATED PROBLEMS IS NOT OTHER THAN THE EMERGENCE OF THE SLMC PARTY. THIS WAS LAUNCHED TO MAKE SOME POLITICIANS WHO COULD NOT ENTER POLITICAL ARENA THROUGH MAJOR PARTIES EXISTING IN SL. THEREFORE THEY TOOK THE SLOGAN AS THE SAVIORS OF MUSLIMS WHO CAN EASILY BE DECEIVED BY SHOUTING THE SLOGAN OF UNITY WHILE QUOTING SOME QURANIC VERSES. THEY WILL GET PUNISHMENT FOR DECEIVING THE MUSLIMS AND LETTING THEM TO BE FOES OF THE OTHER COMMUNITIES TO ACHIEVE THEIR POLITICAL BENEFITS.

    ReplyDelete
  3. நீங்க சிறுபான்மைச் சமூகங்களுக்கு எதிரான சட்ட மூலங்களை எதிர்த்தீர்களா..? அப்போ 18வது திருத்தச் சட்டம் எப்படி ஐயா வெற்றி பெற்றது? சும்மா மக்களை மடையர்களாக்கி அறிக்கையிட வேண்டாம்.

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete
  4. முஸ்லிம்கள் இன்று எதுவித தலைமைத்துவத்தின் ஆதரவும் இல்லாத நிலையில்தான் இருக்கின்றது. ஆகவே முதலில் முஸ்லிம் காங்கிரஸை வெறுத்து ஒதுக்கவேண்டும். காரணம் ரவுப் ஹக்கிம் தலைமைத்துவத்திற்கு பொருத்தமில்லாதவர். முடியாததை செய்யாமலும் பேசாமலும் இருந்தால் நமது தலைவர்களால் ஒன்றும் செய்ய முடியாததால்தான் வாய்மூடி இருக்கின்றார்கள் என்று எம்மால் புரிந்து கொள்ள முடியாத ஜடங்களல்ல நாங்கள். ஆனால் தேர்தல் வரும் காலங்களில் மட்டும் வாய்கூசாமல் பொய்சொல்லித்திரியும் தலைவர்கள் கண்டிப்பாக மக்காளால் இனி நிராகரிக்கப்படுவார்கள். அந்த வகையில் ரிசாட் பதியுத்தின் பரவாயில்லை. முஸ்லிம்களுக்காக குரல்கொடுக்கும் ஆசாத் சாலிகூட பரவாயில்லை. ஆனால் முஸ்லிம்களின் வாக்குகள் பெரும்பானமையினரின் திட்டப்படி கலைந்து சிதறடிக்கப்பட்டுக்கொண்டே செல்கின்றன. ஆனால் தமிழர்களை ஒற்று நோக்கும் போது அவர்கள் திடகாத்திரமான நிலையில் இருக்கின்றார்கள் மக்களை ஏமாற்றும் விதம் மிகக்குறைவு அவர்களது இனம் வாழவேண்டும் உரிமைகள் கிடைக்கவேண்டும் என்பதில் தீர்க்கமானது நிரந்தரமானதுமான முடிவுடன் தான் இருக்கின்றார்கள், அது நம் தலைவர்களிடம் குறைவும் அதுவும் முஸ்லிம் காங்கிரஸ் இடம் இல்லவே இல்லை. ஆகவும் குழப்பமானதொரு கட்சியென்றால் அது முஸ்லிம் காங்கிரஸாகத்தான் இருக்கின்றது என்பது கசப்பானதொரு உண்மை.

    ReplyDelete
  5. who is this rubbish nizar.

    ReplyDelete
  6. எல்லோரும் வசைபாடக்கூடிய கட்சி முஸ்லிம் காங்கிரஸ் மட்டும்தான்

    ReplyDelete
  7. வாசகர்களே அரசியல் அனுபவமில்லாதவர்களின் பேச்சுக்கு ஏன் நீங்கள் முரன்பட்டுக்கொள்கறீர்கள்?

    ReplyDelete
  8. RENEES, WHAT DETAILS YOU WANT TELEPHONE NO.& ADDRESS? YOU NEED TO COMMENT TO THE ARTICLE AND NOT ON COMMENTS. WHAT IS YOUR PROBLEM REALLY? I AM EXPECTING REPLY TO THIS.

    ReplyDelete
  9. Mr nizar oggal karuthu aduwaha erukkalam erundalum oggal vimarsam kudadu ok aggal hathci maram atai marandu pasawanam aan andal nammalkku mutal kural huduka arampam anadu

    ReplyDelete
  10. இந்த கருத்தை உங்கள் சுய புத்தியில் தானா கூறி உள்ளீர்கள் நீங்கள் கூருவது போன்று கிழக்கிக்கு மட்டும் முஸ்லிம் காங்கிரஸ் வேண்டும் என்று சென்னால் சென்ற முறை கிழக்கு மாகாண சபை தேர்தல் முடிவி்ல் கிழக்கு மக்களின் ஆசைகளை மறைத்து இலங்கை முஸ்லிம்கள் அனைவரும் நின்மதியாக வாழ வேண்டும் என்றுதான் அந்தமக்கள் விட்டு்க் கொடுத்தார்கள் அந்த கவுறுவ பி்சையில் வாழ்ந்து கொன்டு முஸ்லிம் காங்கிரஸ் தேவை இல்லை என்று கூற எந்த பரதேசிக்கும் இடம் இல்லை எந்த பன்னாட எதைக் கதைத்தாலும் முஸ்லிம் சமுகத்திற்கு முஸ்லிம் காங்கிரஸ் தான் உயி்ர் நாடி கருத்து கூற தகுதிவேண்டும் சுயநல வாதிகள் கருத்துக் கூர முடியாது.

    ReplyDelete
  11. The idea of your self-intelligence is the're your sheet as East only Muslim Congress that Chen the last time the Eastern Provincial Council election mutivil East's wishes hide the Muslims all ninmati to live as a antamakkal vittu given kavuruva picai lived bring Muslim Congress not to say the Muslim community is not the place to talk about any pannata any Paradesi Muslim Congress

    ReplyDelete
  12. முஸ்லிம் காங்கிரஸ் rock

    ReplyDelete

Powered by Blogger.