சாய்ந்தமருதுவில் முதியோருக்கான விசேட மருத்துவ அறிவூட்டல்
(ஏ.எல்.ஜுனைதீன்)
சர்வதேச முதியோர் தினத்தையொட்டி சாய்ந்தமருது சிரேஸ்ட பிரஜைகள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று 30.09.2013 (திங்கட்கிழமை) காலை 9.00 முதல் 11.00 வரை சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையில் மாவட்ட வைத்திய அதிகாரி டாக்டர். என்.ஆரிப் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது.
நிகழ்வில் பிரதான உரையை சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர். ஏ.டப்ளியு.எம். சமீம் நிகழ்த்தினார்.
நீரிழிவு நோயின்போது காலில் ஏற்படும் காயங்கள் புண்கள் தொடர்பாக மிகவும் பிரயோசனமான விளக்கங்கள் இங்கு அளிக்கப்பட்டது.
பிரஜைகள் ஒன்றியத்தின் தலைவர் டாக்டர் எம்.ஜஎம்..ஜெமீல் செயலாளர் எம்.ஐ.ஏ. ஜப்பார் உள்ளிட்ட பல சிரேஸ்டட பிரஜைகள் இவ் வைபவத்தில் கலந்துகொண்டனர்.
Post a Comment