Header Ads



பள்ளிவாசல்கள் தாக்கப்படுவதாக, உடைக்கப்படுவதாக கூறுவது வெறும் பிரசாரங்கள்தான்

முஸ்லிம்கள் பயங்கரவாதிகளோ, பிரிவினை வாதிகளோ, அடிப்படை வாதிகளோ அல்ல என சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம். பெளஸி நேற்று தெரிவித்தார்.

சிலர் பெளத்தர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே பிரச்சினைகளை ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர். முஸ்லிம்களை தவறான வழிக்கு இட்டுச்செல்ல ஐக்கிய தேசியக் கட்சி முயன்றாலும், முஸ்லிம்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன்தான் உள்ளனர் என்றும் தெரிவித்தார்.

பள்ளிவாசல்கள் தாக்கப்படுவதாக, உடைக்கப்படுவதாக கூறுகிறார்கள். அவை அனைத்தும் வெறும் பிரசாரங்கள்தான் என்றும் அமைச்சர் பெளஸி தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற கட்சியின் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற் கண்டவாறு தெரிவித்தார்.

இஸ்லாம் என்பது சமாதானம் என்று பொருளாகும். முஸ்லிம்கள் சமாதானத்தை விரும்புபவர்கள். 30 வருடகால யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து சமாதானத்தை நிலைபெறச் செய்துள்ள ஜனாதிபதியின் கரங்களை பலப்படுத்த இந்நாட்டு முஸ்லிம்கள் என்றென்றும் ஆயத்தமாக இருக்கிறார்கள்.

கடந்த காலங்களிலும் ஆங்காங்கே குண்டு வெடிப்புகள் இடம்பெற்றன. நான் மூன்று குண்டு வெடிப்புகளுக்கு முகம் கொடுத்து தப்பியவன். எனக்கு பின்பக்கமாக வெடித்த குண்டு 10 பேரை பலிகொண்டது. சற்று முன்னே குண்டுதாரி வந்திருந்தால் என்னுடன் 25 பேரளவில் பலியாகியிருப்பார்கள். தெய்வாதீனமாக உயிர் தப்பினேன். இவ்வாறான ஒரு சூழலில் தான் நாம் வாழ்ந்தோம். நாட்டின் அனைத்து பகுதிகளிலும் மக்கள் நிம்மதியாக ஒற்றுமையாக வாழ்கிறார்கள். இதனை ஏற்படுத்திக் கொடுத்தவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள். அவர்களுக்கு முஸ்லிம்கள் நன்றி கூற கடமைப்பட் டுள்ளனர். அண்மையில் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ கூறிய ஒரு விடயத்தை எல்லோரும் தவறாக புரிந்து கொண்டுவிட்டனர். அவர் கூறிய விடயத்தை முழுமையாக படித்திருந்தால் புரிந்திருக்கும் என்றும் அமைச்சர் பெளஸி குறிப்பிட்டார்.

அத்துடன் இந்த சந்தர்ப்பத்தில் அனைவரும் கட்சி பேதம் பாராமல் நாட்டை பற்றியே சிந்திக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

16 comments:

  1. Hello Fouzi

    Are you in Sri Lanka or the Muslim who provide information and support to BBS (as stated by BBS). How can you hide the truth? Don’t you know what happened to following mosques?
    1. Anuradapura
    2. Dambulla
    3. Jailany
    4. Grandpass

    Keeping silent better than false statements. Instead of supporting Muslims talking against Muslims. Are you making statement to safeguards your position? Then you prefer your position than Islam.

    ReplyDelete
  2. படு கேவலம். இப்படியான அரசியல் உங்களுக்கு தேவைதான..??
    பசி வந்தால் பத்தும் பறக்கும் என்பார்கள். உங்களை போன்ற அரசியல் வாதிகளுக்கு அரசியல் என்று வந்தால் சூடு சொரணை ஈமான் இஸ்லாம் மார்க்கம் மறுமை எல்லாத்தையும் மறந்து அம்முனமாக செல்வதற்கும் தயங்காதவர்கள் தான் நீங்களும் உங்களை போல் இந்த அரசாங்கத்தையும் ராஜபக்ச அன் கோ வையும் ஆதரிக்கும் ஏனைய அமைச்சர்களும் அவர்களது அடிவருடிகளும். நிட்சயமாக உங்கள் அனைவருக்கும் முஸ்லிம் மக்கள் சரியான பாடம் படிப்பிப்பார்கள்.

    உங்களுக்கெல்லாம் இறைவனின் தண்டனை நிட்சயம் உண்டு.

    ReplyDelete
  3. பொய்யையும் பித்தலாட்டத்தையும் தம் வாழ்க்கை நெரியாக ஏற்றுக்கொண்டவர்களை யா அல்லாஹ் நீ அவர்களை உன்பொறுப்பில் விட்டு விடுகிறோம்.இப்படியான முனா(பிக்கு)களையும் தான்.,so like this people west and we need to infirm world wide Sri Lankan parliament Muslim members are Munafic's don't believe them,

    ReplyDelete
  4. அதுதானே,எங்கே பௌசி சேரைக் காணவில்லை என மக்கள் கேட்டார்கள். ஹஜ்ஜில் busyயாக இருப்பார் என்று சொன்னார்கள். இல்லை, கோத்தபாயாவுடை பேச்சை எப்படி ஆதர்த்துப் பேசலாம் என்று யோசனை செய்திருக்கிறார்.

    கண்ணிருந்தும் குருடர்களாக, காதிருந்தும் செவிடர்களாக.... என்று இப்படிப்போன்ற வ்க்கற்றவர்களுக்காகத்தான் சொல்லப்பட்டிருக்க வேண்டும்.

    இன்னும் சொல்லப்போனால் எல்லா அமைச்சர்மார்களை விடவும் லேட்.

    பள்ளிவிடயமாக இப்போதுதான் யோசித்து முடிவுக்கு வந்திருக்கிறார்.

    தலைவர் மர்ஹூம் அஷ்ரபுடை காலத்தில் என்னைத்தான் தேசியத் தலைவர் என்று சொல்ல வேண்டும் என ஆசைப் பட்டவர். அல்லாஹ் பாதுகாத்தான்.

    யா அல்லாஹ் நயவஞ்சகர்களின் தீங்கிலிருந்து முஸ்லிம்களைப் பாதுகாப்பாயாக!!

    ReplyDelete
  5. ஐயா பௌசி அவர்களே, இப்படி அறிக்கை விடுவதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? பதவிக்கும், பணத்திற்காகவும் முழுப் பூசணிக்காயையே மறைத்து மக்களை ஏமாற்ற துணிந்து விட்டீர்களே. நீங்கள் ஒரு முஸ்லிம்தானா? மாற்று மதத்தினரும், பெரும் பான்மை இனத்தவரும் முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்க, சொந்த மார்க்கத்தையே அடகு வைக்க தொடங்கிய உன்னை என்னவென்று நாம் அழைப்பது? அது சரி உன்னையும் துதி பாடும் ஒரு கூட்டம் இருக்குமே ?!?

    ReplyDelete
  6. IVARHALAIPOL ARASAANKATHKU S....U KODUKKUM POLTICIANTHAN NAMMA NAADDUKKU KANNDIPPA THEVAI. IVANHALE PONTRAVARHALAI ARASIAYALIL IRUNTHU VIRADDE VENDUM APPATHAN MUSLIMKALUKKU VIDDIVI PIRAKKUM.

    ReplyDelete
  7. Hon.Minister
    Are you really muslim ?

    ReplyDelete
  8. Then what happened for Anurathapura, Dhambulla, Dehiwala, Mahiyangana and Grandpass mosques? Have u also started to wash? are u also coming to say those are not mosques, and without approval?

    ReplyDelete
  9. இந்த மனுஷனுக்கு என்ன நடந்திச்சி, யா அல்லாஹ்!!!!

    மூளை கலங்கிவிட்டதா?

    ReplyDelete
  10. இப்படியொரு கேவலமான பதவிக்காக பொய்சொல்லி வாழ்வதைவிட பிச்சை எடுப்பது மேல். இலங்கைவாழ் முஸ்லிம்களே நன்றாகக்கவனியுங்கள். எந்தெந்த நபரெல்லாம் என்னென்ன பேசுகின்றாகள் என்று.

    ReplyDelete
  11. It is unfortunate to note that at this trembling age this greedy politician is betraying the Muslim Community. Despite the availability of documentary evidences for such sinister attacks on Masjids and Muslims interests, only an idiot may come forward to reject such allegations. Allah should guide this chicken-hearted so called Minister in the right path, as it seems that he has built a divine judgment on Mahinda Rajapakse. We need to understand that Mahinda Rajapakse may forsake Sri Lankan Muslims but definitely not Almighty Allah.

    ReplyDelete
  12. பள்ளி உடைப்பு சம்மந்தமாக எவனெவனுக்கு இடுப்பில் பலன் இல்லையோ அவனவன் வாய்மூடி இருக்கின்றான். சிலர் மெளனமாக தமது காரியங்களை செய்வதாகச்சொல்கின்றார்கள். ஆனால் சிலரது நிலவரமோ மிகவும் அசிங்கமாக இருக்கின்றது. இப்படியொரு பதவியும் தலைமைத்துவமும் தேவைதானா? முடியாவிட்டாய் வாயை மூடிக்கொண்டிருக்கவேண்டியதுதானே.

    ReplyDelete
  13. அனியாயக்காரனுக்கு துனை நிற்பவருக்கும் இறைவனிடம் தன்டனை உண்டு

    ReplyDelete
  14. ive allaam oru arashiyalvazi. Palli thaharppu, Punniya poomi virivaakkam endre peyaril Pallihalai mooduzel, Kaani parimuzal pondrawai pahirangamahawe nadaipettrumkoode, Inde vayazil Allahvukku anchaamel ivvaru Kuffarhalukku vakkalatthu vanguvazu.. mihawum kawalaikkuriya vidayam.

    ReplyDelete
  15. Dear Minister:
    You better become a good Muslim rather than a tricky politician. Allah will ask you the first not the second sir. everybody knows what defence secretary talking about sir.

    ReplyDelete
  16. Mr. Fawzi if your Death will benefit Muslims than your survive you would have been died in same said incident, rather than making such comments hiding reality what happening to Srilankan Muslims, please do not try to save your seat by selling all community.

    ReplyDelete

Powered by Blogger.