மாவனல்லை, ஓவத்தை கிராம சுவனத்தென்றல் போட்டி நிகழ்ச்சிகளின் பரிசளிப்பு விழா.
மாவனல்லையில் அமைந்திருக்கின்ற ஒரு சிறிய கிராமமே ஓவத்தை கிராமமாகும். இக்கிராமத்தில் சுமார் 150 குடும்பங்களும் ஒரு தக்கியாப் பள்ளிவாயிலும் காணப்படுகின்றது. மேலும் இந்தப் பள்ளிவாயிலையும் அதிலுள்ள நிர்வாகிகளையும் மையமாக வைத்தே இந்த ஊர் இயங்கிவருகின்றது. ஊர் முன்னேற்றப்பணிகளில் எமது ஊர் மக்களது பங்களிப்பு பாராட்டத்தக்கதாகும்.
இப்பள்ளி நிர்வாகம் மாணவர்களிடத்தில் இஸ்லாமிய சிந்தனையை வளர்க்கும் நோக்கில் போட்;டி நிகழ்ச்சிகள் மற்றும் இதர செயற்பாடுகள் என்பவற்றினூடாக ஊக்கமளித்து வருகின்றது அல்ஹம்துலில்லாஹ்.
இதனடிப்படையில் கடந்த மூன்று வருடங்களாக மாணவர்களினதும் ஊர் மக்களினதும் திறமைகளை வெளிக்கொண்டு வரும் வகையில் ரமழான் மாதத்தில் சுவனத்தென்றல் என்ற ஒரு விஷேட நிகழ்ச்சி எமது ஊர் தக்கியாவிலே கடமையாற்றிக்கொண்டிருந்த அஷ்ஷேய்க் ஹுஸ்னி இஸ்லாஹி அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இப்போட்டி நிகழ்ச்சி நிர்வாகத்தின் கன்கானிப்பின் கீழ் ஓவத்தை ஜம்இய்யா மாணவர்களின் அயராத உழைப்போடு நடைபெருவது பாராட்டத்தக்கதாகும். அவர்களுக்கு அல்லாஹ் அருள் புரிய வேண்டும். இதில் குர்ஆன் மனனம், ஹதீஸ் மனனம், துஆ மனனம், பேச்சு, கட்டுரை, ஓவியம் வரைதல், பாடல் கஸீதா, வினாவிடை போன்ற நிகழ்ச்சிகளில் மாணவர்கள் போட்டியிடுவதுடன் அவர்களுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இம்முறைக்கான பரிசில் வழங்கல் நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்.
இவ்வாறானதொரு நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்ததன் நோக்கங்கள்
• அல்குர்ஆன் மற்றும் ஹதீஸ் உடன் அனைத்துத் தரப்பினரதும் உறவினைப் பலப்படுத்தல்.
• ஆதிகமாக குர்ஆன், ஹதீஸ் வசனங்களை மனனம் செய்வதனூடாக மனன சக்தியை அதிகரிக்கச் செய்வதுடன் நபி (ஸல்) அவர்களின் பொண்மொழிக்கு இனங்க பாலடையாத உள்ளங்களாக அனைவரது உள்ளங்களையும் மாற்றுதல்.
• மாணவர்களை கல்வி கற்ற ஒழுக்க சீலர்களாக உருவாக்குதல்.
இந்நிகழ்ச்சியில் அஷ்ஷேய்ஹ் அப்வான் நளீமி அவர்களின் சிறப்புறையொன்றும் நடைபெற்றது. மேலும் பரிசில்கள் வழங்கி வைப்பதற்காக இன்டகொன்டினென்டல் ஜூபய்லில் பிரதம பொறியியலாளராக கடமையாற்றுகின்ற எமது ஊர் சகோதரர் ஸிராஜ் அவர்களும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
ஆக்கம் : பாஸில் (செயலாளர் - மஸ்ஜிதுல் தீனிய்யா)
Post a Comment