Header Ads



இஹ்வான்களை வேட்டையாடிய எகிப்து உள்துறை அமைச்சர் குண்டுவெடிப்பில் தப்பினார்

(Tn) எகிப்து உள்துறை அமைச்சர் மொஹமட் இம்ராஹிமின் வாகன தொடரணியை இலக்குவைத்து கார் குண்டு தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

எகிப்து தலைநகர் கெய்ரோவின் நஸ்ர் நகர பகுதியிலுள்ள இப்ராஹிமின் வீட்டுக்கு அருகிலேயே இந்த குண்டு வெடித்துள்ளது. இந்த கொலை முயற்சியிலிருந்து அமைச்சர் தப்பிவிட்டதாக பாதுகாப்பு தரப்பு அறிவித்துள்ளது.

இந்த குண்டு தாக்குதலை கொலை முயற்சி என குறிப்பிடும் உள்ளூர் ஊடகங்கள் குண்டு வெடிப்பில் குறைந்தது ஏழு பேர் காயமடைந்ததாக செய்தி வெளியிட்டன.

நேற்றுக் காலை 10.30 மணி அளவில் அமைச்சர் இப்ராஹிம் தனது வீட்டிலிருந்து முஸ்தபா அல் நஹாஸ் வீதியூடாக பயணித்தபோது இந்த குண்டு வெடித்ததாக அரச ஊடகமான மெனா செய்தி வெளியிட்டது. இணையதளத்தில் பதிவேற்ற பட்டிருக்கும் குண்டுவெடித்த பகுதியின் புகைப்படத்தில் அருகிலிருக்கும் கட்டிடங்கள் சேதமாகியுள்ளது பதிவாகியுள்ளது.

உள்துறை அமைச்சின் கீழேயே எகிப்து பொலிஸ் பிரிவு செயற்படுகிறது. எகிப்து பொலிஸார் பாதுகாப்பு படையினருடன் இணைந்து கடந்த மாதம் பதவி, கவிழ்க்கப்பட்ட ஜனாதிபதி மொஹமட் முர்சி ஆதரவு முகாம்களை கலைக்க கடும் நடவடிக்கையை மேற்கொண்டது. இந்த படை நடவடிக்கையால் ஆயிரத்திற்கும் அதிகமான முர்சி ஆதரவாளர்கள் கொல்லப்பட்டனர்.

இதில் தற்போது குண்டு தாக்குதல் இடம்பெற்ற நஸ்ர் நகரிலேயே ஆயிரக்கணக்கானோர் தரித்திருந்த முர்சி ஆதரவு ரபா அல் அதவியா ஆர்ப்பாட்ட முகாம் அமைந்திருந்தது.

எனினும் இந்த தாக்குதலுக்கு இதுவரை எவரும் பொறுப்பேற்கவில்லை.

இந்த தாக்குதல் இடம்பெற்று ஒரு மணி நேரத்திற்குள் தொலைக்காட்சி முன் தோன்றிய உள்துறை அமைச்சர் இப்ராஹிம் “இது கோழைத்தனமான கொலை முயற்சி” என குற்றம்சாட்டி னார்.

நூற்றுக்கணக்கான உயிர்ச் சேதத்தை ஏற்படுத்திய முர்சி ஆதரவாளர்கள் மீதான பாதுகாப்பு படையினரின் நடவடிக்கையில் இப்ராஹிமுக்கு அதிக தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.