தேர்தல் அதிகாரிகள் மீது குளவிகள் தாக்குதல் - ஒருவர் பலி, இருவர் வைத்தியசாலையில்
(TM) நாளை சனிக்கிழமை நடைபெறவிருக்கின்ற தேர்தலுக்காக வாக்களிப்பு நிலையத்திற்கு சென்ற அதிகாரிகளின் மீது குளவி கொட்டியதில் ஒருவர் பலியானதுடன் கடுமையாக பாதிக்கப்பட்ட இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் வவுனியார் புதுக்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. புதுக்குளம் மகா வித்தியாலயத்திற்கு சென்ற அதிகாரிகளின் மீதே குளவி கொட்டியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் வவுனியா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்தில் மாறம்பைக்குளம் மதினா நகர் பாடசாலையின் ஆசிரியர் ம.கிறிஸ்துராஜா என்பவரே மரணமடைந்துள்ளார். புதுக்குளம் மகா வித்தியாலயத்தின் ஆசிரியர் அ.லோகேஸ்வரன், அதேபாடசாலையைச்சேர்ந்த ஆசிரியை து.ரஞ்சிதமலர் ஆகியோரே பாதிக்கப்பட்டுள்ளனர்.
வாக்களிப்பு நிலையத்தில் ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தவேளையில் பாடசாலை வளாகத்தில் மரத்திலிருந்த குளவிக்கூடே காற்றுக்கு கீழே விழுந்துள்ளது அங்கிருந்தவர்களை கொட்டியுள்ளது .

Post a Comment