Header Ads



நரேந்திர மோடி பிரதமரானால் நான் இந்தியாவில் வாழ மாட்டேன் - பிரபல எழுத்தாளர் அனந்தமூர்த்தி


(Inne) பிஜேபியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பிரதமரானால் தான் இந்தியாவில் வாழ மாட்டேன் என்று பிரபல கன்னட எழுத்தாளர் அனந்தமூர்த்தி கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல கன்னட எழுத்தாளரான அனந்தமூர்த்தி பெங்களூரூவில் நடந்த புத்தக விழா ஒன்றில் பேசும் போது ஜவகர்லால் நேரு எழுதிய டிஸ்கவரி ஆப் இந்தியா நூலை படித்த யாரும் நரேந்திர மோடியை பிரதமராக ஏற்று கொள்ளமாட்டார்கள் என கூறினார்.

மேலும் நரேந்திர மோடியிடம் இருந்து காந்தி மற்றும் நேரு கனவு கண்ட இந்தியாவை காப்பாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக கூறிய அனந்தமூர்த்தி நரேந்திரமோடி இந்தியாவை ஆண்டால் அது முற்கால அல்லது தற்கால இந்தியாவை போல் இருக்காது என்றும் அரசுக்கு மக்கள் அஞ்சி வாழும் அராஜக காலமாக இருக்கும் என்றார்.

நரேந்திர மோடியின் ஒரு முகத்தை மட்டும் வெளியிடும் ஊடகங்கள் அவரின் மற்றொரு முகத்தை மறைப்பது துரதிருஷ்டம் என்று கூறிய அனந்தமூர்த்தி ஒரு வேளை நரேந்திர மோடி பிரதமரானால் தான் இந்தியாவில் வாழ மாட்டேன் என்றும் கூறினார்.

No comments

Powered by Blogger.