முஸ்லீம் காங்கிரஸ் மக்களது மனதிலிருந்து தூக்கிவீசப்படுமா..?
(முகம்மது இஸ்மாயில் உமர் அலி )
அண்மையில் நடந்து முடிந்த மாகாணசபை தேர்தலிற்கு பின்னர் அமைச்சர் றஊப் ஹகீம் அவர்களது ஊடக செய்திகளை படித்தேன் இன்னும் ஏன் இந்த பசப்புரை ? மக்களுக்கு நீங்கள் செய்த அநியாயங்களுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்று நாங்கள் அடிக்கடி கூறிக்கொண்டிருந்தோம்.அல்ஹம்துலில்லாஹ்!அதற்கேற்பவே மக்களும் நடந்திருக்கின்றார்கள்.இதனை மறைப்பதற்காக இன்னும் ஏன் புதுப்புது தலையங்கங்களில் செய்திகளை எழுதுகின்றீர்கள்.
சற்று சிந்தித்து பாருங்கள் ,கணக்குகளை புரட்டிப்பாருங்கள்.இம்முறை முஸ்லீம் காங்கிரசுக்கு மக்கள் அளித்த வாக்குகளை அதிகரித்த புதிய வாக்காளர் விகிதத்துடன் ஒப்பிட்டுப்பாருங்கள்.நீங்கள் நடந்துவந்த பாதையும் கட்சியின் கால்தடம் மக்களிடம் இருந்து மருவிக்கொண்டு சென்றுகொண்டிருப்பதையும் அவதானிக்கலாம்.
இந்த உண்மைகளை உணர்ந்தாலும் நீங்கள் அதனை காட்டிக்கொண்டு விடாமல் கபடமாக நடந்து கொண்டு முஸ்லீம் சமூகத்தை இன்னும் இன்னும் பலம் குன்றிய ஒரு அரசியல் சமூகமாக மாற்றிவிட்டு ,அவர்களை பேரினவாதிகளிடம் அடகு வைக்கின்ற தரகர்களாக இருந்து கொண்டு இலங்கை முஸ்லீம்களின் ஏகபோக உரிமை எனக்கே என்று இனியும் கூறுவது பொருத்தமல்ல.மக்கள் சிந்திக்கத்துவன்கியிருப்பது
புரியவில்லையா அல்லது புரியாததுபோல இருக்கின்றீர்களா?தூன்குபவனையே எழுப்பலாம் ஆனால் தூங்குவதுபோல் பாசாங்கு செய்யும் உங்களைப்போன்றவர்களை எவ்வாறு எழுப்ப முடியும்.சில இடங்களில் நேரத்துக்கு நேரம் பற்பல கட்சிகளுடன் சேர்ந்துகொண்டு அந்த நிழலில் ஒதுங்கிய உங்களை இம்முறை யார் என்று மக்கள் தோலுரித்துக் காட்டியிருக்கின்றனர்.இம்முறை கண்டியில் முஸ்லீம் காங்கிரஸ் பெற்றுள்ள வாக்குகளை வைத்துப்பார்த்தால் அடுத்தமுறை பாராளுமன்றம் போக தலைவர் புதுத்துரைமுக மாவட்டத்திற்கு அல்லது இயற்கைதுறைமுக மாவட்டத்துக்குத்தான் ஓடவேண்டிவரும்.
உங்களை ஏற்றுக்கொண்ட முஸ்லீம் மக்களை விட நிராகரித்தவர்கள் அதிகமாக இருக்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ள மறந்து விடாதீர்கள்.நிராகரிப்பவர்கள் ஒன்றுபட்டால் உங்களது இன்றைய சுகபோகம்கள் சுக்குநூறாக சிதறிப்போய்விடும் என்பதையும் மனதில் நிலை நிறுத்திக்கொள்ளுங்கள்.இம்முறை உங்களைவிட்டுப்பிரிந்தவர்களதும் உங்களுடன் புதிதாக சேர்ந்தவர்களது கணக்கையும் கணித்துப்பார்த்தால் உண்மை முழுவதும் புரியும்.முஸ்லீம் காங்கிரசை மக்கள் இதுவரைகாலமும் மனசாலே வெறுத்திருந்தார்கள்.ஆனால் இதுவரை மனதிலிருந்த வெறுப்பை வாக்களிப்பு மூலம் வெளிப்படையாக நடைமுறையில் தெரிவித்திருக்கின்றார்கள்.இதிலிருந்து தெரிவது என்ன?இன்னும் நீங்கள் மக்களது முதுகில் சவாரி செய்வதை அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதே அந்த உண்மை.இந்த வெளிப்படையான வெறுப்பு மக்களது மத்தியில் பதிந்திருக்கின்ற மரச்சின்னத்தை படிப்படியாக மறக்கடித்துக்கொண்டிருக்கின்றது என்பது யாவரும் அறிந்த உண்மையே!
இவ்வாறு மக்கள் வெறுப்பதற்கான காரணங்களில் பிரதானமாக கூறக்கூடியது குடிகாரன் பேச்சு விடிந்தால் போச்சு என்பதுபோல உங்களது புளித்துப்போன ஆனால் மக்களுக்கு கேட்டுக்கேட்டு அலுத்துப்போன சில இறுவெட்டு வசனங்களேயாகும். மக்கள் இப்போதெல்லாம் அவற்றை காதில் வாங்குவதில்லை ஏனெனில் நீங்கள்தான் தேர்தலின் பின்னர் அவை பற்றி ஒருநாளும் அலட்டிக்கொள்வதில்லயே !மக்களை தேடி வருவதை விட கிடைத்த ஆசானன்களை பையில் போட்டுக்கொண்டு அலறி மாளிகைக்கே ஓடுகின்றவர் நீங்கள்.
மற்றும் எதேச்சதிகாரம்,சந்தர்ப்பவாதம்,பிழை செய்பவர்களை தட்டிக்கொடுத்தல், தட்டிக்கேட்பவனை குட்டிக் குட்டி த்ட்டிப்பணித்தல்,உள்ளுக்குள்ளே பிரிவினைவாதம், நன்றி மறத்தல்.தன்னை அச்சாணியாக வைத்தே கட்சி சுழல வேண்டும் என்ற சூரியப்போக்கு, முடிவுகள் எடுக்கும்போது மக்களது நலன் அன்றி சுயனலமானதாக முடிவெடுத்தல்,உட்கட்சிப்பூசல் ,தனிநபர் குரோதங்களை பொது நலத்தில் கலந்து சிந்தித்தல் இதுபோன்ற இன்னும் பல விரும்பத்தகாத விடயங்களே உங்களை உச்சாணியில் இருந்து பிடித்துத் தள்ளியிருக்கின்றது.
மட்டுமன்றி உங்களது முன்னுக்குப்பின்னான கருத்துக்களும் உங்களை எட்டி உதைத்துக்கொண்டிருக்கின்றன.அதலபாதாளத்தை நோக்கி முஸ்லீம் மக்களது வாக்குகளாலே மெத்தை செய்து அதில் நித்திரை கொள்ளும் உங்களுக்கு உண்மையிலேயே அந்த மக்கள் துன்பத்தால் துடிக்கும்போது,அரசியல் ரீதியான காரணங்களால் துன்புறும்போது உடனடியாக உங்களது நித்திரை குலைய வேண்டும் திடுக்கிட்டு எழுந்து அந்த அல்லலுக்கான காராணம் கண்டு அதனை நிறைவுசெய்ய வேண்டும்.மறைந்த பெருந்தலைவர் தலைவர் அஷ்ரப் இப்படித்தான் கட்சியை வளர்த்தார்.அறியாமையில் சோரம்போய் அடிமையாகக் கட்டுண்டு பெரும்பான்மைக் கட்சிகளைக் கட்டிப்பிடித்துக்கொண்டிருந்த அப்பாவி முஸ்லீம்களை பிரித்தேடுத்து அவர்களது மயக்க நிலையைத் தெளிவித்தார்.மருமலற்சியைத்தொற்றுவித்தார்.
இந்த பண்பு உங்களிடம் இப்பொழுது எந்தளவு இருக்கின்றது ? நன்றாக ஒன்றிற்கு இரண்டுமுறை சிந்தியுங்கள் ,வழக்கமான ஹோட்டல்களில் ரூம்போட்டு சிந்தியுங்கள்.இந்தப்பன்புகள் முழுவதுமாக இல்லாவிட்டாலும் அதிகளவு இருக்கின்ற ஒரு பலமான அமைப்பை அடையாளம் காணும்வரைதான் உங்கள் கூத்துகள் எல்லாம் அதன்பின் உங்களது முகவரிகள் உங்களுக்கே மறந்துவிடும்.மற்றவர் தேடுமளவு தொலைந்தும் விடும்..
வடமாகாண தேர்தலின் மூலம் முஸ்லீம் வாக்குகளை நம்பி முதலீடு செய்யும் உங்களுக்கு ஒரு எச்சரிக்கை கிடைத்திருப்பதுடன் சில முகவரிகளும் புதிதாக தபாலிடப்பட்டுள்ளன அம்பாறை மாவட்டத்தை தவிர ஏனய மாவட்டங்களில் முஸ்லீம்கான்கிரஸ் மக்கள் மத்தியில் இருந்து இடம்பெயர்கப்படுவதற்கு அதிக காலம் தேவையில்லை.இவை அனைத்தும் தற்போதைய அக்கட்சியின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் சாணக்கியத்தின் விளைவுகளே!
muslim congress meethu kopam kondavar pola ean muslim congress a maddum patri eluthiringka ungkada kadduraye solluthu athan palam vaaintha kadchi enru marame marame nee pallaandu kaalam vaalanum muslim congress aalanum,
ReplyDeleteveesappadathu dai poi onda valaya paaru
ReplyDeleteஐயா எதோ சொல்லே வரிகே அனால் ஒரு உண்மை அந்தே கட்சியில் இருந்து பிரிந்து வந்தேவேகே கூடே சமுகேதுக்ககே எதுவும் செய்யே முடியாதே நிலேதான் கனேப்படுது அரேசின் கைபில்லேயாகே. எனதே கட்சியே வலேக்கே ரொம்பே தியாகம் செஞ்சிருக்கு அதே அலிச்சிதான் தீர்வு காநேலாமா.ஏன் உன்கேளால் ஆக்கேபூர்வேமானே கருத்தே சொல்லே முடியாது. Rizado athavullah vo பொழப்பு நடேத்துரே கட்சியாலே தீர்வேதான் தரே முடியுமா இல்லே நிகே அப்படி எதிர் பர்கேயேலா.
ReplyDeleteகொண்ஜெம் நிதாநேமா பார்த்தால் தனேக்கேண்டு பதவி இல்லாமே பதேவிக்ககே சோரேம் போனே கூடேம்தான் மத்தே எல்லாமே.நில்லேல் தரும் மரேதே வெடிதான் வேறே மரேம் வேய்க்கேனுமா கொண்ஜெம் சிந்திப்போம் திருத்துவோம்
Absolutely already as Rauf Hakeem said I am an actor he has been found actor on the last election according his defeat made by people masha allah
ReplyDeleteஅன்பு கொண்டவர்களுக்குத்தான் அறிவுரை சொல்லலாம்.,கட்டுரை முஸ்லீம் காங்கிரசின் தர்காலநிளையும் எதிர்காலத்தின் நிலையம் பற்றியது சகோதரரே "உண்மையின் முதலிடம் என்று பெர்வைத்திருக்கிரீர்கள் ஏன் உண்மையை மருதலிக்கிறீர்,இப்படி உண்மையை ஏற்றுக்கொள்ள முடியாதவர்களால் தான் இன்னும் மரம் வாழ்கிறது உண்மையைப்புரிந்து கொண்டவர்கள் ஒதுங்கியிருக்கின்றார்கள் புரிந்து கொள்ளுங்கள்!
ReplyDeleteஅடிவருடிகளை ஓரம் கட்டு
ReplyDeleteமுஸ்லீம் உம்மத்தை ஒன்ரு படுத்து
தேசியன்கள் தான்டிணமக்கான கலீஃபாவை ஏர்படுத்து