Header Ads



கடைசி மூச்சுவரை எனது கொள்கையில் உறுதியாக இருப்பேன்” - முர்சி உறுதி

(tn) “கடைசி மூச்சு வரை எனது கொள்கையில் உறுதியாக இருப்பேன்” என்று இராணுவ சதிப்புரட்சி முலம் பதவி கவிழ்க்கப்பட்டு இரகசியமான இடத்தில் தடுத்துவைக்கப்பட்டிருக்கு எகிப்து ஜனாதிபதி மொஹமட் முர்சி, தனது குடும்பத்தினருடனான குறுகிய தொலைபேசி உரையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தொலைபேசி உரை குறித்து முர்சி குடும்பத்திற்கு நெருங்கிய ஒருவர் அனடலு செய்திச் சேவைக்கு குறிப்பிட்டுள்ளார். இதில் முர்சி, தனியார் இலக்கம் ஒன்றில் கடந்த வாரம் தனது குடும்பத்தினருடன் உரையாடியதாக குறித்த நபர் தெரிவித்துள்ளார். எனினும் முர்சி தொடர்ந்து மன உறுதியுடனேயே இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஜூலை 3ஆம் திகதி பதவி கவிழ்க்கப்பட்ட முர்சியை பார்வையிட அவரது குடும்பத்தினருக்கும் அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தனது தொலைபேசி உரையாடலில் முர்சி தான் எங்கு தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார் என்பது குறித்து எந்த தகவலும் வெளி யிடப்படவில்லை என குறிப்பிடப் பட்டுள்ளது.

அத்துடன் தம்மீதான விசாரணைக்கு அழைத்து வரப்படும் அரச வழக்கறிஞர்களும் கண்கள் கட்டப்பட்ட நிலையிலேயே அழைத்து வரப்படுவதாக முர்சி தனது தொலைபேசி உரையில் கூறியுள்ளார். எனினும் “நான்தான் நாட்டின் சட்டபூர்வ தலைவர் என்று அவர்களிடம் (விசாரணை நடத்துவோர்) நான் கூறினேன்” என்றும் முர்சி குறிப்பிட்டுள்ளார்.

முர்சி மீது சிறையிலிருந்து தப்பியது, பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளை வித்தது என பல குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டுள்ளன.

No comments

Powered by Blogger.