மட்டக்களப்பில் ஆட்களைப் பதிவு செய்யும் பிராந்திய காரியாலயம் (படங்கள்)
(பழுலுல்லாஹ் பர்ஹான்)
அரச பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் கீழ் செயற்படும் ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தின் நடவடிக்கைகளை மாகாணங்கள் ரீதியாக விஸ்தரிக்கும் பொருட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மஹிந்த சிந்தனை திட்டத்திற்கமைவாக கிழக்கு மாகாணத்திற்கான மாகாண அலுவலகமொன்று (10.09.2013) இன்று செய்வாய்கிழமை மட்டக்களப்பு பிரதேச செயலகத்தில் தேசிய மொழிகள் மற்றும் சமூக நல்லிணக்க ஒருமைப்பாட்டு அமைச்சின் செயலாளர் மல்காந்தி விக்கிரமசிங்கவினால் உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் அரச பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளர் ஜே.ஏ.ரஞ்சித், ஆட்களைப் பதிவுசெய்யும் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.எஸ்.சரத் குமார,தேசிய மொழிகள் மற்றும் சமூக நல்லிணக்க ஒருமைப்பாட்டு அமைச்சின் செயலாளர் மல்காந்தி விக்கிரமசிங்க, அத்திணைக்களத்தின் செயற்பாட்டுப் பணிப்பாளர் எஸ்.எல்.நசீர்;; மட்டக்களப்பு மாவட்டஅரசாங்க அதிபர் பீ.எஸ்.எஸ்.சார்ள்ஸ்; ,பிரதேச செயலாளர்கள் ,உதவி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் பாஸ்கரன்,உட்பட தமிழ்,முஸ்லிம்,கிறிஸ்தவ மதகுருமார்கள் அரச அதிகாரிகள் என பலரும் பிரசன்னமாகியிருந்தனர்.
இம்மாகாண அலுவலகம் ஊடாக கிழக்கு மாகாண மக்கள் இதுவரைகாலமும் இத்திணைக்களத்தின் கொழும்பு பிரதான அலுவலகத்தில் முடித்துக் கொண்ட கருமங்களை இம்மாகாணஅலுவலகம் இலகுவாக வழங்குமென்றும் மட்டக்களப்பு, அம்பாரை,திருகோணமலை, மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு பெரும் பயனளிக்குமென்றும்ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.எஸ்.சரத்குமார தெரிவித்தார்.
எமது மக்களை இனிமேலாவது இந்த வேளைகளுக்கு கொழும்புக்கு செல்ல விடாமல் நம் பக்கத்திலேயே வைத்துக்கொண்டு சேவை செய்வோம். கொழும்பைவிட எமது காரியாலயத்தை சிறப்புற நடத்தி சாதனைகள் படைத்திட வாழ்த்துக்கள்.
ReplyDelete