தென்கிழக்கு பல்கலைகழகத்தில், பல்கலைக்கழக முறைமை சம்மந்தமான செயலமர்வு (படங்கள்)
(எம்.வை.அமீர்)
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஊழியர் அபிவிருத்தி நிலையத்தினால், பல்கலைக்கழக முறைமை சம்மந்தமான செயலமர்வு ஒன்று, ஊழியர் அபிவிருத்தி நிலையத்தின் தலைவர் கலாநிதி எஸ்.எம்.அகமட் லெப்பை தலைமையில் கடந்த 07,08 ம் திகதிகளில் இடம்பெற்றது. முதல்நாள் அமர்வில் Disciplinary Procedures in the University System எனும் தலைப்பில் பதிவாளர் எச்.எ.சத்தார் மற்றும் Financial Procedures in the University System தொடர்பாக நிதியாளர் எ.குலாம் றசீட் Administrative Procedures in the University System, Recruitment Procedures and Appointment எனும் இரு தலைப்புகளில் தென்கிழக்கு பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பிரிவின் உதவி பதிவாளர் பீ.எம்.முபீன் மற்றும் எம்.எ.சீ.சல்பியா உம்மா Work Ethics &Etiquettes எனும் தொனிப்பொருளிலும் கருத்துக்களை முன்வைத்தனர்.
இரண்டாம் நாள் அமர்வில் Leaves to University Staff , Rights of the University over its employees எனும் தலைப்புகளில் சிரேஷ்ட உதவி பதிவாளர் ஐ.எல்.தஸ்லிம் மற்றும் Risk Taking, Team Spirit & mind Set எனும் தலைப்புகளை வைத்து பல்கலைக்கழக முறைமையுடன் தொடர்பு படுத்தியும் பொதுவான வாழ்வுடன் தொடர்பு படுத்தியும் உபவேந்தர் பேராசிரியர் எஸ்.எம்.இஸ்மாயில் கருத்துக்களை வழங்கினார்.
இரண்டாம் நாள் இறுதி அமர்வில் அம்பாறை மாவட்ட செயலக திட்டமிடல் அதிகாரி எஸ்.அன்வர் டீன் Time Management , General Rules and Regulations of Administration எனும் தலைப்புகளில் விளக்கங்களை வழங்கினார்.
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் அண்மையில் புதிதாக உள்வாங்கப்பட்ட ஊழியர்களுக்கு பல்கலைக்கழக முறைமைகள் தொடர்பான அறிவை அதிகரிக்கும் நோக்கிலேயே ஊழியர் அபிவிருத்தி நிலையத்தினால் இந்நிகழ்வு நடத்தப்பட்டதாக அதன் தலைவர் கலாநிதி எஸ்.எம்.அகமட் லெப்பை தெரிவித்தார்.
Post a Comment