Header Ads



இலங்கை தொடர்பான நவனீதம் பிள்ளையின் அறிக்கை இன்று வெளியாகிறது

(Nf) இலங்கை தொடர்பான பரிந்துரைகள் உள்ளடக்கிய ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவனீதம் பிள்ளையின் அறிக்கை, ஜெனீவாவில் நடைபெற்றுவருகின்ற மனித உரிமைகள் பேரவையின் பருவக்கால கூட்டத்தொடரில் இன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது.

அண்மையில் நவனீதம் பிள்ளை இலங்கைக்கு  மேற்கொண்ட விஜயம் தொடர்பில் அந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், அந்த அறிக்கை மீது இன்றைய தினம் வாக்கெடுப்பு நடைபெற மாட்டாது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் கலாநிதி பிரதிபா மஹானாமஹோ தெரிவிக்கின்றார்.

மனித உரிமைகள் ஆணையாளர் நவனீதம் பிள்ளையின் ஒரு வார கால இலங்கை விஜயத்தின் போது, அவர் நேரில் கண்டவை மற்றும் அரசாங்கம், சிவில் அமைப்புக்கள், மனித உரிமைகள் ஆணைக்குழு ஆகியவற்றின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி அவர் பெற்றுக்கொண்ட தகவல்கள் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

அத்துடன் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளையும் உள்ளடக்கி நவனீதம் பிள்ளை வருடாந்த கருத்தொன்றை முன்வைக்கவுள்ளார்.

No comments

Powered by Blogger.