சிரியாவில் ரசாயன குண்டுவீச்சில் பாதிக்கப்பட்டு துடிக்கும் உறவுகள் (வீடியோ)
சிரியாவில், வீசப்பட்ட ரசாயன குண்டு வீச்சு சம்பவத்தினை வீடியோவாக
வெளியிட்டு டி.வி.சானல் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. சிரியா அதிபர் பஷார்
அல் ஆசாத்திற்கு எதிராக மக்கள் கிளர்ச்சி நடக்கிறது. இதி்ல் கடந்த மாதம்
21-ம் தேதி சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் ரசாயன குண்டுவீச்சில்
1000-த்தி்ற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் சி.என்.என்.
டி.வி. சானல் ,வீடியோ பதிவினை, வெளியிட்டுள்ளது.இந்த வீடியோ காட்சிகள்
அமெரிக்க செனட் சபையில் உளவு கமிட்டிக்கு கடந்த 5-ம தேதி
காண்பிக்கப்பட்டது. அதில், ரசாயன குண்டுவீச்சில் பாதிக்கப்பட்ட குழந்தைகள்,
ஆண்கள், பெண்கள், வாயில் நுரை தள்ளியநிலையில் மயங்கி விழுந்தும் அந்த
வீடியோவில் பதிவாகியுள்ளது.
http://edition.cnn.com/video/data/2.0/video/bestoftv/2013/09/08/tapper-syria-chemical-attack-videos.cnn.html
Post a Comment