முஸ்லிம்களை விரட்டிய நிலை மீண்டும் ஏற்பட இடமளிக்கப்படாது - வவுனியாவில் மஹிந்த (படங்கள்)
நாட்டை துண்டாடுவதற்கு பிரபாகரனுக்கு இடம்கொடுக்கப்படாதது போல வேறு எந்த தரப்பினருக்கும் இடமளிக்கப்படாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வவுனியாவில் இன்று (11) இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றியபோதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
´இந்த நாட்டில் ஜனநாயகத்தை ஏற்படுத்த ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஆட்சி நடத்த ஏனைய மாகாணங்களுக்கு வழங்கிய அதிகாரங்களே இந்த மாகாணத்திற்கும் (வட மாகாணம்) வழங்கியுள்ளோம். இன்று சிலரது தேர்தல் விஞ்ஞாபனங்களை எடுத்துப் பார்க்கும்போது நான்கு வருடங்களுக்கு முன் இருந்த கோரிக்கைகளே மீண்டும் விடுக்கப்படுகிறது.
அவர்களுக்கு நான் விசேடமாக ஒன்றை கூறிக் கொள்ள விரும்புகிறேன். இந்த நாட்டை துண்டு துண்டாக பிரிக்க பிரபாகரனுக்கு இடமளிக்கப்படாதது போன்று உங்களுக்கும் இடமளிக்கப்படமாட்டாது. அதனை தெளிவாக கூறிக் கொள்ள விரும்புகிறேன். அந்த கோரிக்கையின் பிரதிபலன்களை நீங்கள் நன்கு அறிவீர்கள்.
அன்று முஸ்லிம் மக்களை தங்கள் கையில் கிடைத்த உடைகளோடு செல்லுமாறு விரட்டினர். சிங்கள மக்களையும் விரட்டியடித்தனர். ஜனநாயகத்தை மதித்த தமிழ் தலைவர்களை ஒவ்வொருவராக கொலை செய்தனர். அதனால் அந்த நிலையை மீண்டும் ஏற்படுத்துவதற்கு இடமளிக்கப்படமாட்டாது.

மன்னிக்கவும், முன்பு தேர்தல் காலங்களில் சொன்ன அதே டயலொக்கை பாணியினை நம்பி ஏமாற முடியாது.
ReplyDeleteஎல்லாவற்றுக்கும் சிறப்பான பதில் எதிர்வரும் செப்டம்பர் 21 காத்திருகிறது :)
ReplyDelete