Header Ads



முஸ்லிம் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. அஸித பெரேரா காலமானார்


(Tm) இத்தாலிக்கான முன்னாள் இலங்கை தூதுவர் அஸித பெரேரா (54) இன்று ஞாயிற்றுக்கிழமை காலமானார். சுகயீனம் காரணமாக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே இவர் உயிரிழந்துள்ளார்.

ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் காலப் பகுதியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக இவர் செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தென் கொரியாவிற்கான இலங்கை தூதுவராக 2006ஆம் ஆண்டு தொடக்கம் 2009ஆம் ஆண்டு வரை கடமையாற்றிய இவரின் பூதவுடல் எதிர்வரும் புதன்கிழமை பொரளை கனத்தை மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1 comment:

  1. முஸ்லிம் மக்களின் வாக்குகளால் இலங்கை அரசியல் வானில் உச்சமடைந்த ஒரு நட்சத்திரம். இன்று உதிர்ந்து விட்டது. ஸ்ரீ.ல.மு. காங்கிரஸ் ஊடாக அடையப் பெற்ற இவரது அரசியல் இருப்பால் முஸ்லிம் சமூகத்திற்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. அவரது மறைவுக்கு மனிதாபான முறையில் எனது அனுதாபங்கள்!

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete

Powered by Blogger.