Header Ads



கடும்போக்குவாதிகள் சிறுபான்மையினர் மீது அடக்குமுறைகளை பிரயோகிக்க முழு அளவிலான சந்தர்ப்பம் - கரு

அரசாங்கம் சிறுபான்மை மக்களை எதிரிகளாகவே நோக்குகின்றது என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். யுத்தத்தின் பின்னர் நாட்டை ஐக்கியப்படுத்தாது அரசாங்கம் பிரிவினைவாதத்தை தூண்டும் முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். பயங்கரவாதத்தை இல்லாதொழித்த இந்த அரசாங்கம் நாட்டை நல்லிணக்கத்தை நோக்கி நகர்த்தியிருக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

கடும்போக்குவாதிகள் சிறுபான்மையினர் மீது அடக்குமுறைகளை பிரயோகிக்க முழு அளவிலான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இன, மத முரண்பாடுகளை அரசாங்கம் தூண்டி வருவதாகத் தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட ஒரு குடும்பம் மட்டும் தேசத்தின் வளங்களையும் சொத்துக்களையும் அனுபவிப்பதனை தவிர்க்க வேண்டுமாயின் ஆளும் கட்சிக்கு வாக்களிப்பதனை மக்கள் தவிர்க்க வேண்டுமென அவர் கோரியுள்ளார்

இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பிரிவினைவாத அடிப்படையில் செயற்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். பிரிவினைவாத கோட்பாடுகள் தொடர்ந்தால் தமிழ் மக்களை நாட்டின் ஏனைய மக்களுடன் ஒன்றிணைக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.