அக்குறனை நீதிக்கும் அபிவிருத்திக்குமான மக்கள் அமைப்பு ஐ.தே. கட்சியை ஆதரிக்க முடிவு
((மொஹொமட் ஆஸிக் + அஸ்-ஸாதிக்)
எதிர்வரும் மத்திய மாகாண சபைத் தேர்தலில் அக்குறனை நீதிக்கும் அபிவிருத்திக்குமான மக்கள் அமைப்பு ஐக்கிய தேசிய கட்சியை ஆதரிக்கத் தீர்மானித்துள்ளது.
இம்மாகாண சபைத் தேர்தலில் நாட்டில் பலமான எதிர்க்கட்சியை நிறுவுதல் , ஜனநாயகத்திற்கு பலமான எதிர்க்கட்சியின் அவசித்தை உணர்த்துதல் மற்றும் முஸ்லிம் மக்கள் சமகாலத்தில் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அரசின் கவனத்தில் கொண்டு வருதல் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவளிக்கத் தீர்மரித்துள்ளதாக இந்த அமைப்பு இன்று 04.09.2013 அக்குறனையில் நடாத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது.
இதில் கலந்து கொண்டு தொடர்ந்து கருத்து தெரிவித்த நீதிக்கும் அபிவிருத்திக்குமான மக்கள் அமைப்பின் ஊடகப் பொதுச் செயலாளர் இர்பான் காதர் தொடர்ந்து அங்கு கருத்து தெரிவிக்கையில் ,
நாட்டில் பலமான எதிர்க்கட்சி தேவை. இந்நிலையில் எதிர்வரும் மத்திய மாகாண சபைத் தேர்தல் முக்கியத்துவமுடைய தேர்தலாக கருதப்படுகின்றது. எனவே எமது அமைப்பு ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவளிப்பதன் மூலம் பலமான எதிர்க்கட்சி என்ற நிலைப்பாட்டிற்கு ஓரளவு ஆதரவை வழங்கும். இது நாட்டின் ஜனநாயகத்திற்கு எம்மால் முடிந்த ஒரு பங்களிப்பாக அமையும். அத்துடன் எமது மக்கள் பிரதிநிதிகளின் நிலைப்பாடுகள் தொடர்பாக அரசின் மீள் பரிசீலனையையும் வலியுறுத்துகின்றோம். மேலும் நாட்டில் முஸ்லிம் சமூகம் எதிர்கொண்டு வரும் சவால்க்ள தொடர்பாக அரசின் கவனத்தை திருப்புவதற்கும் இந்த முடிவை மேற்கொண்டுள்ளோம்.
எமது அமைப்பு இம்முடிவை எடுப்பதற்கு முன்பு சகல அரசியல் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை மேற்கொண்டதுடன் எமது நிலைப்பாடுகளையும் எடுத்துக்கூறியது.
நாட்டில் சகல மக்களுக்கும் நல்லாட்சியை ஏற்படுத்துவதே எமது முயற்சியின் அடிப்படையாகும் என்றும் தெரிவித்தார்.
Good move. We should not support a regime which suppresses our community without any reason.
ReplyDelete