Header Ads



தம்புள்ள பள்ளிவாசல் நிர்வாகத்தின் தீர்மானம் அரசியல் நோக்கம் கொண்டது - பௌசி

தம்புள்ள பள்ளிவாசலை அகற்றுவது தொடர்பாக தற்போது எழுந்துள்ள பிரச்சினைக்கு ஜனாதிபதியிடமிருந்து உறுதியான பதிலை எதிர்பார்க்கும் வகையில் பள்ளிவாசல் நிர்வாகத்தினால் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

பள்ளிவாசல் நிர்வாகத்தினால் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் அமைச்சர்களிடமும் முன்வைக்கப்படவுள்ள இந்த தீர்மானம் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள மூத்த அமைச்சரான ஏ. எச். எம். பௌசி தற்போது மாகாண சபை தேர்தல் நடைபெறவிருக்கும் இவ்வேளையில் எடுக்கப்பட்டுள்ள இந்தத் தீர்மானம் அரசியல் நோக்கம் கொண்டது என குற்றம் சாட்டுகின்றார். 

பள்ளிவாசல் நிர்வாகத்தினால் எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தில் பள்ளிவாசல் அகற்றப்படுமா? இல்லையா ? என ஜனாதிபதியின் பதிலை முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் எதிர்வரும் 21ம் திகதி மாகாண சபை தேர்தலுக்கு முன்னதாக பெற்றுத்தர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

6 comments:

  1. வாய் திறந்து விட்டீகளே....... அப்படியானால்.... அடுத்த வருட ஹஜ் கோட்டாவுக்கு ஆப்புதான்.

    தலைவரே... உங்களைப்போன்ற தலைவர்களுக்கு எம்மவர்களும் வோட்டுப்போட்டு பாராளுமன்றம் அனுப்பினார்களே... அவர்கள் தங்களை தாங்களே திட்டி அழவேண்டியதைத்தவி வேறு வழியில்லை.... சொல்லப்போனால்.... 'மானங்கெட்ட பொழப்பு'................??

    ReplyDelete
  2. இதில் என்ன பிழை உள்ளது. நல்லதொரு சந்தர்பம் தானே. பெரியவரே..!! நீங்கள் எவ்வளவு பெரிய மூத்த அரசியல் வாதி இந்த ராஜபக்ச அன் கோ உங்களை பார்த்து மரியாதையுடன் பல்லை இளித்துக் கொண்டு திரிந்தவர்கள். ஏன் அவர்களுக்காக சமூகத்தில் உங்களுக்கு உள்ள மதிப்பையும் எல்லாவற்றுக்கும் மேலாக இஸ்லாம், மார்க்கம், நமது மதத்தின், இனத்தின் உரிமை எல்லாவற்றையும் இழந்து இவர்களுக்காக தன்னிலை மறந்து பொய்யுரைத்து வாதாடுகிறீர்கள்.

    இவரது குடும்பத்தாரும், நண்பர்களும், நலன் விரும்பிகளும் இவருக்கு புத்தி சொல்லக் கூடாதா..??

    யா அல்லாஹ் இந்த மனிதருக்கு நல்ல உறுதியான ஈமானையும், நல்ல புத்தியையும் கொடுத்து நேர்வளிப்படுத்துவாயக.. ஆமீன்

    ReplyDelete
  3. அப்போ ஆயுதம் ஏந்தவா சொல்கிறீர்?? உங்களைப் போன்ற கோழைகளைத் தெரிவு செய்தது எங்களது குற்றம்... ஏன் புனித ஹஜ்ஜையே அரசாங்கத்திற்கு விற்று விட்டீர்... அரசாங்கமே ஹஜ் விவகாரத்தில் முடிவெடுக்கும் நிலைக்கு ஆக்கிவிட்டீர் அப்போது உங்களுக்கு விளங்காத அரசியல் இப்பொ உங்களுக்கு விளங்குது... சுயலாபத்திற்காக இஸ்லாத்தை விற்று விடாதீர்.... அல்லாஹ் உங்களிடம் விசாரிக்கும் நாள் வரும் ... அப்போது நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள் உங்களது அரசியலை.... மானம் கெட்ட முஸ்லிம் தலைவர்கள்....

    ReplyDelete
  4. இதுபோன்ற பொய்யர்களின் நடிகர்களின் பேச்சை நம்பவேண்டாம். நேற்றுதான் இவர் சொன்னார் இலங்கையில் பள்ளிவாசல்கள் எதுவும் உடைக்கப்படவில்லையென்று, இதுபோன்ற மனிதர்கள் உங்களுக்கு ஏதாவது செய்வார்கள் என்று நினைக்கின்றீர்களா? இவரை நிராகரியுங்கள். இனிமேல் என்னதான் பேசினாலும் மனம் மாறாமல் இருந்தால்தான் அரசியல்வாதிகள் மக்களது முடிவை சரியாக புரிந்துகொள்வார்கள்.

    தொடர்ந்து நாமும் அதே தவறை மீண்டும் மீண்டும் செய்வதன் காரணமாகத்தான் இதுபோன்றவர்கள் நம்மை பகடைக்காயாக பாவித்து அவர்களது காரியங்களை முடித்துக்கொண்டு வருகின்றார்கள்.

    ReplyDelete
  5. இதிலென்ன அரசியல் உள்நோக்கம் உள்ளது?

    மக்கள் தமது பிரச்சினைகளுக்கான தீர்வை தங்களின் ஆணைகளை வழங்க முன்னர் கேட்டு நிற்பது அரசியல் உள்நோக்கமா?

    அப்படியென்றால் தேர்தல் மேடைகளில் 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அதைச் செய்வோம், இதைச் செய்வோம்' என நீங்கள் கூறுவதும் அரசியல் உள்நோக்கம்தானே..?!

    மூத்த அமைச்சரே.. நீங்கள் முட்டாள்தனமாகவும், முஸ்லிம் சமூகத்திற்கு எரதிராகவும் இவ்வாறான அறிக்கைகளை கண்மூடித்தனமாக வெளியிடக்கூடாது.

    ஒரு முஸ்லிமுக்கு அவன் சுஜுது செய்யும் வணக்கத்தலத்தைப் பாதுகாத்துக் கொள்வதை விட வேறு எது முக்கியமானதாக இருக்க முடியும்?

    நீங்கள் இத்தனை வயதையடைந்தும் இன்னமும் அரச சுகபோகங்களுக்காக எமது இஸ்லாத்தைக் குழி தோண்டிப் புதைக்க எடுக்கப்படும் இவ்வாறான முயற்சிகளுக்கு ஊதுகுழலாக இருக்கக்கூடாது. உயிர் கொடுப்பதற்குத் துணிய வேண்டும்.

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete
  6. Ellam makkathukku ponannu karpothanum makkathukku pocham sootcasela

    ReplyDelete

Powered by Blogger.