முஸாபர் நகர முஸ்லிம்களுக்கு எதிரான அகோரம் - மருத்துவர்கள் கூட நடுங்கிப் போயுள்ளனர்
(Thoo) இந்தியா - மேற்கு உ.பி.யின் முஸாஃபர் நகரில் நடந்த ஒருதலைபட்சமான முஸ்லிம் கூட்டுப் படுகொலையின் கொடூரத்தை கண்டு முஸாஃபர் நகர் மாவட்ட மருத்துவமனையில் இறந்த உடல்களை போஸ்ட்மார்ட்டம் நடத்திய மருத்துவர்கள் கூட நடுங்கிப் போயுள்ளனர்.
மருத்துவர்களின் அனுபவத்தை கேட்டால் நெஞ்சு பதறும். ஒரு பெண்ணை இரண்டு துண்டாக பிளந்துள்ளனர். தீயில் பொசுக்கிய உடல்கள் ஆணா, பெண்ணா என்று கூட அடையாளம் காண முடியவில்லை. ஒன்பது வயது சிறுவனின் தலையை அடித்து சிதைத்துள்ளனர்.
செப்டம்பர் 7-ஆம் தேதி முதல் 12 உறுப்பினர்களை கொண்ட மருத்துவர்கள் குழு மாநிலத்தில் மிகக் கொடூரமாக நடத்தப்பட்ட இனப்படுகொலையில் பலியானவர்களின் உடல்களை போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக இரவு, பகலாக பணியாற்றி வருகின்றனர்.
53 உடல்களை போஸ்ட் மார்ட்டம் செய்ததில் 40 உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளன. 13 உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு கோரமாக உள்ளன. வெள்ளிக்கிழமை மிகக் கோரமான நிலையில் போப், சிகேரா ஆகிய போலீஸ் நிலையங்களில் இருந்து வந்த இரண்டு ஆண்களின் உடல்களை அடையாளம் காண முடியவில்லை.
பெரும்பாலானவை கூர்மையான ஆயுதங்களைப் பயன்படுத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். புல்கானாவில் ஒரு குடும்பத்தில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஒரு பெண்ணை இரண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்துள்ளனர் காட்டுமிராண்டிகளை விட கேவலமானவர்கள். அவருடைய இடுப்புக்கு மேல் பகுதி தனியாகவும்,இடுப்புக்கு கீழ் உள்ள பகுதி தனியாகவும் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டது. அவரது முகம் கடுமையாக தாக்கி கோரமாக்கப்பட்டிருந்தது.
புல்கானாவில் கடுமையான பழிவாங்கும் உணர்ச்சியோடு குற்றவாளிகள் மக்களை கொலை செய்துள்ளனர் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். எட்டு வயது சிறுவர்கள் உள்பட முற்றிலும் தீயில் பொசுங்கிய இரு உடல்கள் செப்டம்பர் 10-ஆம் தேதி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. அவை ஆணா, பெண்ணா என்று அடையாளம் காண முடியவில்லை.
11பேரின் டி.என்.ஏ. சாம்பிள் எடுத்து பரிசோதனைக்காக பாதுகாக்கப்பட்டுள்ளது. புகானாவில் 16 பேராவது கொல்லப்பட்டுள்ளனர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தீயில் பொசுங்கிய குழந்தையின் உடலை போஸ்ட் மார்ட்டம் செய்த தன்னால் 24 மணி நேரம் உணவு கூட சாப்பிட முடியவில்லை என்று மருத்துவர் ஒருவர் தனது வேதனையை வெளியிட்டுள்ளார்.
Post a Comment