மில்ஹான் லத்தீபினால் பாதை புனரமைப்புக்கான நிதி ஒதுக்கீடு
(எம். எச். ஹஸீன்)
மன்னார் மாவட்டத்தில் அரசின் சார்பாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியில் போட்டியிடும் அல்-ஹாஜ் மில்ஹான் லத்தீபினால் பாதை புனரமைப்புக்கான நிதி ஒதுக்கீடு
புத்தளத்தில் இடம்பெயர்ந்து வாழும் கிராமமான ஹுஸைனியாபுரத்தின் பிரதான பாதை பல வருடமாக சேதமாகியுள்ளதோடு இதற்காக பல அரசியல்வாதிகளிடம் பேசியும் பலனளிக்காத கானப்படும் இந்நிலையில் அனைத்து பல்கலைக்கழக மன்னார் மாவட்ட முஸ்லிம் மானவர் ஒன்றியம் இதற்கான ஏற்பாட்டை அல்-ஹாஜ் மில்ஹான் லத்தீப் மூலமாக கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
இதற்கமைய அல்-ஹாஜ் மில்ஹான் லத்தீபினால் 3 கோடி 47 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனால் சுமார் 2.7மஅ வரைக்கான பிரதான பாதையும், 700அ வரைக்கான ஹுஸைனியாபுரத்தையும் ஹுஸைனியாபுர மேற்கையும் (25 ஏக்கர்) இனைக்கும் பிரதான பாதையும் புனரமைக்கபடவுள்ளது. இதனால் பாடசாலை மானவர்கள், பொதுமக்கள் போன்றோர் நன்மடையவுள்ளனர்.
மேலும் அனைத்து பல்கலைக்கழக மன்னார் மாவட்ட முஸ்லிம் மானவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அல்-ஹாஜ் மில்ஹான் லத்தீபினால் 125000 செலவில் உலுக்காப்பள்ளம் முஸ்லிம் மகாவித்தியாலயத்திற்கு இரும்பிலான வலையும் ஒழுங்கு செய்து கொடுக்கப்பட்டது.
Post a Comment