Header Ads



பேனாக்களும், புத்தகங்களும் தீவிரவாததை தோற்கடிக்கும் ஆயுதங்கள் - மலாலா

பெண்கல்வி உரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுத்து, போராடியதற்காக தலிபான்களால் சுடப்பட்ட பாகிஸ்தான் சிறுமி மலாலா யூசுப்சாய், தீவிர சிகிச்சைக்குப் பிறகு உயிர் பிழைத்துள்ளார். தற்போது இங்கிலாந்தில் வசித்து வரும் மலாலா, தீவிரவாதத்திற்கு எதிரான பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார்.

 இந்நிலையில், ஐரோப்பாவின் மிகப்பெரிய பொது நூலகம் பர்மிங்காம் நகரில் திறக்கப்பட்டது. திறப்பு விழாவில் மலாலா கலந்துகொண்டு பேசினார்.

 அவர் பேசுகையில், “நான் ஆயிரக்கணக்கான புத்தகங்களைப் படித்து, அதன்மூலம் எனது அறிவாற்றலை நானே பெருக்கிக்கொள்வேன். பேனாக்களும், புத்தகங்களும் தீவிரவாததை தோற்கடிக்கும் ஆயுதங்கள். அறிவைவிட சிறந்த ஆயுதம் எதுவும் இல்லை. எழுதப்பட்ட வார்த்தையைவிட அறிவுக்கு சிறந்த ஆதாரம் எதுவும் இல்லை” என்றார்.

 பர்மிங்காமில் திறக்கப்பட்ட அதிநவீன நூலகத்தில் பலலட்சம் புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. புகழ்பெற்ற எழுத்தாளர் வில்லியம் ஷேக்ஸ்பியரின் படைப்புகளில் முதல் பதிப்புகள் அனைத்தும் இடம்பெற்றுள்ளன.

4 comments:

  1. காபிர்கள் நடத்தும் நூலகத்திலுள்ள இலட்சக் கணக்கான புத்தகங்களை விடுத்து எமக்கு கிடைத்த அரும் பொக்கிசமான குரானை படித்து அதில் சொன்னது போல ஒரு இஸ்லாமிய பெண்ணாக நடந்து காடு பிறகு அறிவுரை சொல்லலாம்

    ReplyDelete
  2. "அறிவை விட சிறந்த ஆயுதம் எதுவுமில்லை, எழுதப்பட்ட வர்த்தையை விட அரிவுக்கு சிறந்த ஆதாரம் எதுவுமில்லை"

    ReplyDelete
  3. malala. ungalukku pattadu poda pola irukku

    ReplyDelete
  4. நல்லது, நீங்கள் தற்போது வாழ்த்து கொண்டிருக்கும் நாடும் ஏனைய வல்லரசுககளும் தான் தீவிராவாதத்தை உலகுக்கு அறிமுகப்படுத்தியது, அதை நீங்கள் உணரும் காலம் வெகு தொலைவில் இல்லை

    ReplyDelete

Powered by Blogger.