எகிப்தில் அல் ஜஸீரா உள்ளிட்ட தொலைக்காட்சி சேவைகளுக்கு தடை
எகிப்தில் செயல்படும் 4 தொலைக்காட்சி சேனல்களின் ஒளிபரப்பை நிறுத்த எகிப்து
நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எகிப்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபரான
முர்சி ராணுவ புரட்சியின் மூலம் பதவியிலிருந்து விலக்கப்பட்ட பின் முஸ்லீம்
சகோதரத்துவ கட்சியின் முக்கிய தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டதோடு பலர்
கொல்லப்பட்டுள்ளனர்.
இச்சூழலில் எகிப்தில் பிரபல அரபுலக சேனலான அல்
ஜஸீரா, முஸ்லீம் சகோதரத்துவ கட்சிக்கு சொந்தமான அஹ்ரார் 25 மற்றும் இஸ்லாமிய
சேனல்களான அல் - யர்முக் மற்றும் அல் - குத்ஸ் ஆகிய நான்கு சேனல்களும் இனி மேல்
ஒளிபரப்ப கூடாது என எகிப்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
criminal egyptian millitary
ReplyDelete