வடமேல் மாகாண சபை தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஹக்கீம் குழுவினர்
(அகமட் எஸ். முகைடீன்)
வடமேல் மாகாண சபை தேர்தல் பிரசார நடவடிக்கைகள் சூடுபிடித்துள்ள இவ்வேளை ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் நீதி அமைச்சருமான றவூப் ஹக்கீமுடன் இணைந்து கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி. சிராஸ் மீராசாஹிப் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் ஆகியோர் வெற்றியினை உறுதிப்படுத்தும் பிரசார நடவடிக்கைகளை குறுநாகல் பிரதேசத்தில் மேற்கொண்டு வருகின்றனர்.
இதன்போது முஸ்லிம் காங்கிரஸின் தற்போதைய நிலைப்பாடு, கிழக்கு மாகாண சபையில் ஏன் அரசோடு இணைந்து ஆட்சியினை அமைத்தது, முஸ்லிம்களுக்கு எதிராக மேற் கொள்ளப்பட்ட இன அடக்கு முறைகளின் போதும் பள்ளிவாசல் உடைப்பு சம்பவங்களின் போதும் எவ்வாறு அரசுக்கு அழுத்தங்களை வழங்கியது, மற்றும் அரசுக்குள் இருந்து கொண்டு அரசுக்கு எதிர்கட்சியாக செயற்படுவது தொடர்பாகவும் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டது.
Post a Comment