Header Ads



யானைக்கு, மரத்துக்கு வாக்களிப்பதால் எதையும் சாதித்துவிட முடியாது - உதுமாலெப்பை

(எம்.எம்.ஏ.ஸமட்)

ஆளும் தரப்பு அரசியல் அதிகாரங்களினூடாகப் பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதற்குக் கிடைத்துள்ள இறுதிச் சந்தர்ப்பத்தை குருநாகல் மாவட்ட முஸ்லிம்கள் தவறவிடக் கூடாது என தேசிய காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சருமான எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார்.

எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள வடமேல் மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிடும  அப்துல் சத்தாரை ஆதரித்து குருநாகல் மல்வப்பிட்டிய எனும் கிராமத்தில்  கடந்த 17ஆம் திகதி இரவு        முன்னால் பிரசே சபையின் உறுப்பினர் அமான்  தலைமையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இங்கு அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

ஆளும் கட்சியில் அரசியல் அதிகாரத்தைப் பெறுவதன் ஊடாக மாத்திரமே நமது பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய முடியும். குருநாகல் மவாட்டத்தின் பல முஸ்லிம் கிராமங்கள் சகல துறைகளிலும் பின்தங்கிய நிலையில் காணப்படுவது மிகக் கவலையளிக்கிறது. மத்திய அரசாங்கத்தினால் பொதுவான அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டாலும் மாகாண அரசாங்கத்தினூடாக  கிராமங்களிலுள்ள பல்வேறு அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ள முடியும்.

கடந்த 30 வருடங்களாக கோர யுத்தின் பிடிக்குள் சிறைப்பிடிப்பட்டு சின்னாபின்னமாகிக்கிடந்த கிழக்கு மக்களுக்கு யுத்ததத்தை முடிவுக்குக் கொண்டு வந்தத் மூலம் ஜனாதிபதி கிழக்கு மக்களை சுதந்திரமாக சுவாசிக்க வழி செய்தார். அது மாத்திரமின்றி, வடக்கையும் கிழக்கையும் பிரித்து கிழக்கு மக்கள் தங்களது மக்கள் பிரதிநிதிகளை அவர்களாகவே தெரிவு செய்வதற்காக கிழக்கு மாகாண சபைத் தேர்தலையும் இரு முறை நடத்தியுள்ளார்

அந்தவகையில் சுதந்திரமாக நடைபெற்ற கிழக்கு மாகாண சபையின் இரு தேர்தல்களிலும் தேசிய காங்கிரஸினூடாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிட்டு வெற்றிபெற்ற எனக்கு தேசிய காங்கிரஸ் தலைவர் அமைச்சர் அதாவுல்லாவின் சிபாரிசினால் இரு முறை கிழக்கு மாகாண சபையில் ஆறு துறைகளுக்கு அமைச்சுப் பதவியை வகிப்பதற்கு ஜனாதிபதியினால் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

அரசாங்கத்தின் பங்களிப்புடன் எங்களது பிரதேசங்களை நாங்களாகவே இன,மத, பிரதேச வேறுபாடின்டி அபிவிருத்தி செய்து வருகின்றோம். அபிவிருத்தியினூடாக சமூகங்களுக்கிடையே கிழக்கில் சக வாழ்வை உருவாக்கி வருகின்றோம். இறைவன் உதவியால் வீதி, கிராமங்களுக்கான மின்சாரம் உட்பட பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் கிழக்கின் சகல பிரதேசங்களிலும் பல கோடி ரூபா செலவில் மாகாண சபையின் அதிகாரங்களினூடாக் நிறைவு செய்யப்பட்டுள்ளன. அவ்வாறு உங்களது பிரதேசங்களும் அபிவிருத்தி செய்யப்பட வேண்டுமென்பதே எங்களது எதிர்பார்ப்பாகும்.

நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலானது ஜனாதிபதியை மாற்றும் தேர்தலோ அல்லது அரசாங்கத்தை மாற்றும் தேர்லோ அல்ல. மாறாக அரச பங்களிப்புடன் உங்களது பிரதேசங்களை  உங்களது பிரதிநிதியினூடாக அபிவிருத்தி செய்வதற்கு உங்களில் ஒருவரைத் தெரிவு செய்யும் தேர்தலாகும்.

இம்மாவட்ட முஸ்லிம்கள் யானைக்கு வாக்களித்தாலோ மரத்துக்கு வாக்களித்தாலோ எதையும் சாதித்துவிட முடியாது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். கடந்த காலங்களில் யானையிலும் மரத்திலும் வந்தவர்களுக்கு வாக்களித்து அவர்களை பெற்றிபெறச் செய்து, மாகாண சபைக்கு அனுப்பியதன் மூலம் இம்மாவட்ட முஸ்லிம்கள் என்ன பலாபலனைப் பெற்றுள்ளீர்கள் என வினவ விரும்புகின்றேன். எதிர்தரப்பு அரசியல் அதிகாரங்களினூடாக எதையும் சாதித்துவிட முடியாது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்

அண்மைக்காலமாக முஸ்லிம்கள் முகம்கொடுத்துக்கொண்டிருக்கும் பிரச்சினைகளை மூடி மறைக்க முடியாது. அந்தப் பிரச்சினைகளை உருவாக்குகின்றவர்கள் ஒரு சிறு தரப்பினர்தான். இனவாத்தை உருவாக்கியவர்கள் இனவாத்தினாலேயே அழிந்த வரலாறுகளை நமது இலங்கை வரலாற்றில் காணமுடிகிறது.
இருப்பினும், ஒரு சிறு கடும்போக்காளர்களின் செயற்பாடுகளினால் அவர்கள் சார்ந்த சமூகத்தின் எல்லோர்களையும் பகைவர்களாக நாம் சித்தரிக்க முடியாது.

ஆனால் முஸ்லிம் காங்கிரஸ்காரர்கள் எதை மக்களுக்குச் சொல்ல வேண்டுமோ அதைச் சொல்லாது எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்யாது, அந்த முஸ்லிம் விரோதச் சிறு குழுக்கள் போன்று இனவாதம் பேசி இப்பிரதேசத்தில் நிம்மதியுடனும், சகோதரத்துவத்துடனும் வாழும் இரு சமூகங்களுக்கிடையே பகைமை மூட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் ஆளும் கட்சியிலிருந்து ஒரு முஸ்லிம் உறுப்பினரைத் தெரிவு செய்யப்படுவதை தடுப்பதற்கான கைகரியங்களையும் வீடுவீடாக புரிந்து வருகின்றமை வன்மையாகக் கண்டிக்கத்தாகும் என்றார்.

வீடு எரிகின்றபோது வீட்டை அனைக்க முயற்சிக்காமல் அதை மேலும் எரியூட்டும் செயற்பாட்டைப் புரிவதை முஸ்லிம் காங்கிரஸ் காரர்கள் கைவிட வேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றேன். உங்களின் அற்ப சுகங்களுக்காக சமூகங்களிடையே உள்ள ஒற்றுமையை சீர்குழைக்கக் கூடிய கருத்துகளை முன் வைத்து வாக்குகளைப் பெற முயற்சிக்க வேண்டாம். பெரும் தவைரினால் ஸ்தாபிக்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்பம் தெரியாதவர்களையும் அதன் இலக்குப் புரியாதவர்களையும் அழைத்துக்கொண்டு இப்பிரதேசங்களுக்கு வந்து இப்பிரதேசத்தில் வாழும் சமூகங்களுக்கிடையோயன ஐக்கியத்துக்கு ஊறுவிளைக்க வேண்டாமென முஸ்லிம் காங்கிரஸ் காரர்களிடம் கேட்டுகொள்கின்றேன் என அமைச்சா உதுமாவெப்பை கூறினார்.

அத்துடன், வட மேல் மாகாண சபையை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கைப்பற்றுவதது நிச்சயமாகிவிட்;;டது. இதனால் யானைக்கோ மரத்துக்கோ இம்மாவட்ட முஸ்லிம்கள் உங்களது வாக்குகளை அளிப்பதனால் எதையும் சாதித்துவிட முடியாது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

அரசியல் அதிகாரம் இல்லாத சமூகம் ஓர் அனாதைச் சமூகமாகும். எனவே, குருநாகல் மாவட்ட முஸ்லிம்கள் உங்களுக்கான அரசியல் அதிகாரத்தைப் பெற்றுகொள்ள வேண்டும். அதுவும் அந்த அரசியல் அதிகாரத்தை ஆளும் தரப்பில் பெற்றுக்கொள்வதன் மூலம் தான் உங்களது பிரசேத்தை அபிவிருத்தி செய்ய முடியும்.

அந்தவகையில் 21ஆம் திகதி நடைபெறவுள்ள இம்மாகாண சபைத் தேர்தலில் அரச தரப்பினூடாக அரசியல் அதிகாரத்தைப் பெற்றுகொள்வதற்குக் கிடைத்துள்ள இறுதிச் சந்தர்ப்பத்தை குருநாகல் மாவட்ட முஸ்லிம் மக்கள் சரியாகப் பயன்படுத்தவேண்டும். ஆளும் ஐ.ம.சுதந்திரக் கூட்டமைப்பில் ஒரேயொரு முஸ்லிம் வேட்பாளராகப் போட்டியிடும் அப்துல் சத்தாருக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்வதன் மூலம், கிடைக்கும் சந்தர்ப்பங்களைச் சரியாகப் பயன்படுத்தும் மக்கள் என்ற நற்பெயரை உங்களது வரலாறுகளில் பதித்தவர்காளக உங்களது எதிர்காலச் சந்ததியினர் உங்களைக் காணட்டும் என்று கூற விரும்புதாக அமைச்சர் உதுமாலெப்பை மேலும் குறிப்பிட்டார்.

1 comment:

  1. உங்களுக்கு வாக்களித்து என்னத்த கிளிச்சயல்

    ReplyDelete

Powered by Blogger.