முஸ்லிம் குடும்பத்தினருக்கு ஏற்பட்ட சோகம்...!
(அஸ்-ஸாதிக்)
ஏறாவூரில் இருந்து தலைநகருக்கு மருத்துவ பரிசோதனைக்காக வந்த முஸ்லிம் குடும்பப் பெண்னுக்கும். அவரின் மகனுக்கும் மயக்க மருந்து கொடுத்து இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான நகைகளையும் பத்தாயிரம் ரூபா ரொக்கப் பணத்தையும் கொள்ளையிட்ட சம்பவமொன்று நேற்று 19.09.2013 கண்டி உடுதும்பர பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,
கொழும்பு மஹரகம வைத்தியசாலையில் பரிசோதனைக்காக ஏறாவூரில் இருந்து குடும்பப் பெண்னொருவர் தனது மகனுடன் கொழும்புக்கு வந்துள்ளார். இவர்கள் வைத்தியசாலையில் பரிசோதனையை முடித்துக் கொண்டு கொழும்பில் லொட்ஜ் தங்கியுள்ளனர். அதனைத் தொடர்ந்து மறுநாள் அதிகாலை கொழும்பு கோட்டை பஸ் நிலையத்தில் பஸ்ஸுக்காக காத்து நின்ற போது, அங்கு அக்கரைப்பற்று நபரொருவர் இவர்களுக்கு அறிமுகமாகியுள்ளார். இந்த அறிமுகத்தின் பேரில் குறித்த நபரின் உறவினரொருவர் மட்டக்களப்புக்கு செல்ல இருப்பதாகவும் அவர் சற்றுநேரத்தில் காரில் வருவதாகவும் விருப்பமாயின் தம்முடன் பயணத்தை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நபரை நம்பிய இவர்கள் அந்நபரின் உறவினரின் காரில் கண்டி – மஹியங்கனை வழியாக மட்டக்களப்பு செல்வதற்கான பயணத்தை ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் உடுதும்பர பகுதியில் ஹோட்டலொன்றின் முன்னால் காரை நிறுத்திவிட்டு பயணம் செய்த அனைவரும் களைப்புக்காக குளிர்பானம் அருந்தியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து இப்பெண்னும் அவரின் மகனும் மயக்கமடைய காரின் சாரதியும் சந்தேக நபரும் குடும்பப் பெண் அணிந்திருந்த தங்க மாலை மற்றும் தோடுகள் என்பவற்யும் கழற்றிக் கொண்டு இளைஞன் வசம் இருந்த பத்தாயிரம் ரொக்கப் பணத்தையும் சுருட்டிக் கொண்டு தலைமறைவாகியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
akkaraipattu haram kuddida name ennavam?
ReplyDeleteInthe kallan parthe velayal mulu oorukkum kedda peyar.