Header Ads



கட்டாரில் இலங்கை இளைஞன் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு

(பழுளுல்லாஹ் பர்ஹான்)
 
புத்தளம் தில்லையடியை வசிப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும்கொண்ட முஹம்மது றிஸான் கடந்த (31.08.2013) சனிக்கிழமை அதிகாலை கட்டார் நேரம் 5:40 மணியளவில் சனாயா 10 என்ற இடத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

கடந்த சனி இரவு கட்டார் சனயாவில் உள்ள தனது தங்குமிடத்தில் அவருடன் அறையில் வசிப்பவர்கள் இராப்போஷனத்துக்காக இவரை அழைத்த போது 'நான் பிறகு சாப்பிடுகிறேன்' எனக் கூறிவிட்டு பல தொலைபேசி அழைப்புகளில் உரையாடியவராக இருந்துள்ளார்.

மேலும் இச்சகோதரர் சுபஹ் தொழுகைக்குச் சென்று வந்ததையும் அறையில், கூட இப்பவர் ஒருவர் உறுதி செய்துள்ளனர்.

பின்னர் சுhர் 05.40 மணியளவில் அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இது பற்றிய மேலதிக விசாரனைகளை கட்டார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இவர் 1982 ஆகஸ்ட் 02 ம் திகதி பிறந்தவர் என்பதுடன் இரண்டு பிள்ளைகளின் தந்தை என்பதும் குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. இன்னலில்லாஹி வ இன்னா இலேய்ஹி ராஜிஊன்

    ReplyDelete

Powered by Blogger.